உலக அழகி-2018 பட்டம் வென்றார் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன்

Vanessa Ponce de Leon won Miss world 2018

சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டிற்கான மிஸ் வேர்ல்டு பட்டம் வென்றார்.

சீனாவின் சான்யா நகரில் இன்று 68வது உலக அழகி போட்டி நடைபெற்றது. உலக அழகி 2018ம் ஆண்டிற்கான போட்டியில் 118 பேர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், மெக்சிகோவை சேர்ந்த 26 வயதான வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டிற்கான மிஸ் வெர்ல்ட் பட்டத்தை வென்றார்.

வனிசா போன்ஸ் டி லியோனுக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகிக்கான கிரீடம் சூட்டினார்.தொடர்ந்து, இரண்டாவது இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த 20 வயதான நிகோலெனே பிசபா லிம்ஸ்நூகன் பெற்றுள்ளார். அடுத்த மூன்று இடங்களை பெலாரஸ், ஜமைக்கா மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த அழகிகள் பிடித்தனர்.

தமிழகம் திருச்சியை சேர்ந்த அனுகீர்த்தி என்பவர் 2018ம் ஆண்டுகான உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலக அழகி-2018 பட்டம் வென்றார் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செந்தில் பாலாஜி விவகாரம் லீக்... தினகரன் 'கேம்ப்’ ஷாக்.... திமுகவின் நமட்டு சிரிப்பும் லைட்டா கவலையும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்