இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

acking of Sri Lanka parliament illegal: Supreme Court

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

சிறிசேனாவால் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் மகிந்த ராஜபக்சேவால் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது.

இவ்வழக்கில் இன்று மாலை, இலங்கை நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவு செல்லாது என அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

You'r reading இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செந்தில் பாலாஜியைவிடவா அழகிரி துரோகி? சீறும் ஆதரவாளர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்