இந்தியாவுடனான 2வது டெஸ்ட்: 326 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா

2nd Test match Australia All out with 326 runs

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்ட்டில் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1&0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் நகரில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் 3 பேட்ஸ்மேன்கள் நேற்று அரைசதம் அடித்தனர்.

விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் இழந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்தது

இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர், 108.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

You'r reading இந்தியாவுடனான 2வது டெஸ்ட்: 326 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாக்கியராஜ் முடிவில் மாற்றம்: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடருகிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்