இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

Ranil sworn-in as PM today

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை 11.16 மணிக்கு பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா. ஆனால் மகிந்த ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் முடியவில்லை.

இதனால் நாடாளுமன்றத்தையே கலைத்து தேர்தலை அறிவித்தார் சிறிசேனா. இதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இவ்வழக்கில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் வேறுவழியில்லாமல் மகிந்த ராஜபக்சே நேற்று தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இன்று இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை 11.16 மணிக்கு பதவியேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

You'r reading இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் இன்று கருணாநிதி சிலை திறப்பு விழா- கமல்ஹாசன் புறக்கணிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்