கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி - இந்தோனேசியாவில் பயங்கரம் - 168 பேர் பலி!

Indonesia tsunami: 62 dead

இந்தோனோஷியாவின் எரிமலைத்தீவு (Anak Krakatau) வெடித்து கடலுக்கடியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் உருவான சுனாமி பேரலைகள் தெற்கு சுமத்ராவிற்கும் ஜாவா தீவுக்கும் இடைப்பட்ட பகுதியை (sunda strait ) தாக்கியதில் 168 பேர் பலியாகினர். மேலும் 500மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தோனிசிய நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் எரிமலை (Anak Krakatau) வெடித்ததில் வழக்கத்திக்கு மாறாக அதிகளவு குழம்பு வெளியேறி கடலுக்கடியில் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பவுர்ணமணி தினமாக இருந்ததால் கடலின் நீர்மட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து ஆழி பேரலைகள் உருவாகி சுனாமியாக உருவெடுத்துள்ளது.

சில கடற்கரையோர பகுதிகளில் 11 அடிக்கு மேலாக அலைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பொதுவாக நிலச்சரிவால் ஏற்பட்ட சுனாமி நிலநடுக்கத்தால் ஏற்படும் சுனாமியைவிட மிகவும் வலுவுள்ளதாக மாறும்.

பனிரெண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழும் இப்பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் 168 பேர் உயிரிழந்துள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இரவில் ஏற்பட்ட அழிவால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்தோனோனிசிய பேரிடர் மேலாண்மை ஊழியர் தெரிவித்துள்ளார்.மேலும் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரிடரை நினைவு படுத்துகிறது.

You'r reading கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி - இந்தோனேசியாவில் பயங்கரம் - 168 பேர் பலி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ருசியான கறி தோசை ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்