ரெடியாகிறது கமலின் பிக் பாஸ் 4 .. நடிகர், நடிகைகளுக்கு வலை வீச்சு..

Kamal Green Signal To Conduct BigBoss 4 Show

by Chandru, Aug 16, 2020, 11:04 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக பேசப்படுகிறது. இதில் பங்கு பெறுவர்கள் பிரபலம் இல்லாத நட்சத்திரங்களாக இருந்தாலும் ஷோவில் பங்கேற்ற பிறகு பிரபலமானவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமாவிலும் வாய்ப்புகளை அள்ளுகின்றனர். இதுவரை 3 பிக்பாஸ் ஷோக்களை கமல்ஹாசன் நடத்தி முடித்திருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் 4வது ஷோ நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிவைக்கப்பட்டது

கொரோனா தொற்று பாதிப்பால் நிகழ்ச்சியை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று எண்ணியிருந்த நிலையில் செப்டம்பர் மாதம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு கமல்ஹாசன் கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறாராம். அதற்குள் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.பிக்பாஸ் 4ல் பங்கேற்க யாரையெல்லாம் தேர்வு செய்யலாம் என்ற ஒரு பட்டியல் தயாராகி வருகிறது. சில நட்சத்திரங்களிடம் ஷோ குழுவினர் சார்பில் பேசப்பட்டும் வருகிறதாம்.தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Bigg boss News

அதிகம் படித்தவை