இதோ வந்துட்டேன், நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள்.. பிரபலமாகும் கமலின் பிக்பாஸ் 4 புரோமோ வீடியோ..

kamals Big Boss 4 Ptomo Video vairal

by Chandru, Aug 28, 2020, 18:18 PM IST

பிக்பாஸ் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ளடக்கியதாக விஜய் டிவியில் வெளியாகி வந்தது.நடிகை ஓவியா தற்கொலை முயற்சி, வனிதா, கஸ்துரி மோதல், சுவர் எகிறிக் குதித்து ஒடிய நடிகர், குடும்பத்தை 100 நாட்களாகச் சந்திக்க முடியாமல் கதறிய நடிகர், ஆரவ் ஓவியா காதல், மஹத் ராகவேந்திரா யாஷிகா காதல் எனப் பரபரப்பு பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் வாராவாரம் கமல்ஹாசன் தோன்றி கண்டிப்பு, பாராட்டு எனப் பல அதிரடிகளும் நிகழ்த்தினார்.

கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு பிக்பாஸ்4 நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு கமல்ஹாசன் கிரீன் சிக்னல் கொடுத்ததுடன் பிக்பாஸ் 4 புரோமோ வீடியோவிலும் நடித்துள்ளார். அந்த வீடியோ வெளியாக வைரலாகி வருகிறது.
இதில் கமல் பேசி இருக்கிறார். இதோ அவரது பேச்சு...நலமா.. நாம் யதார்த்தமாக ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. உலகெங்கிலும் பரவி இருக்கும், மருந்தே கண்டுபிடிக்கப்படாத, ஒரு நோய், இந்த உலகம் ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தி இருக்கிறது.

எங்காவது அமேசானில் தீப்பிடித்தால் இங்கு நமக்கு ஆக்சிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்கு போகலைனா.. நம்மை நம்பி இருக்குற ஆட்டோ ரிக்ஷா டிரைவர், பஸ் ஓட்டுநர், அடிக்கடி சாப்பிடப் போகும் ஹோட்டல், டீ கடை, மீன் கடைக்கார ஆயா, அவங்களுக்காக மீன் பிடிக்கப் போகிற மீனவர்கள்.. இப்படி சங்கிலித் தொடராக.. நம்மை நம்பி இருப்பவர்கள் ஐந்து மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்கணும்.. ஆனால் அதுக்காக வீட்டிலேயே வேலை இல்லாமல் இருக்க முடியாது. WHO அதாவது உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தி இருப்பது படி பாதுகாப்பாக இருப்போம்.

இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள், நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய யதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை.. நாமே தீர்வு! சரி இப்போ வேலையை ஆரம்பிக்கலாமா..?

இவ்வாறு கமல்ஹாசன் பேசி உள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Bigg boss News

அதிகம் படித்தவை