பிக்பாஸ் 4ல் பங்கேற்கும் பிரபல நடிகையின் சகோதரர்..

BigBoos 4 Actress Sujitha Brother Participating

by Chandru, Sep 8, 2020, 10:48 AM IST

கடந்த 3 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு ரசிகர்களிடையே பேசப்பட்டது. இம்முறை கமலின் புரோக்களே பிக்பாஸ் 4 பற்றிய பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது. முதல் புரோமாவில் நலமா இதோ வந்து விட்டேன் என்ற விசாரிப்போடு என்ட்ரி கொடுத்தவர் அடுத்த புரோமோவில் நடன அசைவுகளையும் தந்து என்ட்ரி ஆனார். அத்துடன், தப்புன்னா தட்டிக்கேப்பேன் நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன் என்ற பஞ்சுடன் முடித்தார். இந்த புரோமோவில் கமலுக்கு நடன அமைத்தது தந்தது பிக்பாஸ் 3 போட்டியாளரும் நடன இயக்குனருமான சாண்டி. இசை அமைத்தது ஜிப்ரான்.

பிக்பாஸ் 4ல் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் என்ற யூகங்கள் சமூக வலைத்தளங்களில் வட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிததா அய்யர் பெயர் அடிப்பட்டது. அதை உறுதி செய்யாமல், யார் என்னுடைய பெயரை பிக்பாஸ் 4ல் இழுத்துவிட்டது என்று கேட்டு அழகு காட்டி வீடியோ வெளியிட்டார். தமிழில் இப்படி நடந்துகொண்டிருக்க தெலுங்கிலும் பிக்பாஸ் 4 தொடங்கியது.

தெலுங்கில் நாகார்ஜூனா இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்று ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.'பாண்டியன் ஸ்டோர்ஸ்' டிவி தொடரில் நடிக்கும் சுஜிதாவின் சகோதரர் சூர்யா கிரண் பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனை தெரிவித்த சுஜிதா அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி உள்ளார்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை