பிக்பாஸ் 4 அக்டோபர் 4ல் ஆரம்பம்? பிகில் நடிகை பங்கேற்பா, இல்லையா? கட் அண்ட் ரைட் தகவல்..

by Chandru, Sep 18, 2020, 12:00 PM IST

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக்பாஸின் 4வது சீசன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காகக் கமல்ஹாசன் நடித்த இரண்டு மாஸ் ப்ரோமோ வீடியோகள் வெளியாகி எதிர் பார்ப்பை அதிகரித்துள்ளன. வரும் அக்டோபர் 4 முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் 4 ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகிறது.

பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் குறித்து பல்வேறு வதந்திகள் வந்துள்ளன, இதில் நடிகர் தர்ஷன், லட்சுமி மேனன், ரம்யா பாண்டியன், தீனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் சஞ்சனா சிங். அதுல்யா, ஷாலு ஷம்மு போன்ற பெயர்கள் அடிபடுகின்றன. இந்த பட்டியலில் பிகில் நடிகை அமிர்தா அய்யர் பெயரும் இடம் பெற்றது. அவரும் என்னை யார் இந்த பட்டியலில் சேர்த்தது என்று கேட்டு நய்யாண்டி செய்து வீடியோ வெளியிட்டார். தற்போது அமிர்தா அய்யர் வெளியிட்டுள்ள மெசேஜில் உறுதியான தனது நிலையை உணர்த்தினார். அதில், நான் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை, நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Bigg boss News