பிக்பாஸ் நடிகர் - நடிகைகளுக்கு கொரோனா பரிசோதனை..!

Corona Trest for bigg boss 4 contestents

by Chandru, Sep 22, 2020, 11:23 AM IST

கடந்த 3 வருடமாக இல்லம்தோறும் ஒலித்த குரல் இன்று உங்கள் குரலாக ஒலிக்கிறது என்று பிக்பாஸ்4 ஷோவுக்கு ரசிகர்களை உற்சாகத்தோடு அழைத்திருக்கிறார் கமல்ஹாசன். இதற்காக அவர் வெளியிட்ட 2 புரோமோக்கள் வைரலானது. பொழுதுபோக்கும் இருக்கும், தப்புன்னா தட்டிக்கேட்பேன் என்று சொல்லி அரசியலும் இருக்கும் என்ற ரீதியில் ஷோ பற்றி கமல் விறுவிறுப்பான அறிமுகம் கொடுத்திருக்கிறார்.கை நீட்டும் தூரத்தில் பிக்பாஸ் நெருங்கி விட்டார். வரும் அக்டோபர் 2ம் தேதி ஷோ தொடங்கும் என்று கூறப்படுகிறது.

போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடப்பதுடன் பங்கேற்கச் சம்மதித்தவர்களுக்கு கொரோனா டெஸ்ட் சோதனை நடத்தப்பட்டு தனியாக ஸ்டார் ஒட்டலில் தங்க வைக்கப்படுகின்றனர். இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக 100 நாட்கள் நடக்கும் ஷோ இம்முறை 20 நாட்கள் குறைக்கப்பட்டு 80 நாட்கள் மட்டுமே நடக்குமாம். மொத்தம் 16 போட்டியாளர்கள் என்பதிலும் மாற்றம் செய்யப்பட்டு 12 அல்லது 14 பேர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்று சொல்லப்படாவிட்டாலும் பிரபல நடிகைகளின் பட்டியல் ஒன்று வலம் வருகிறது.நடிகைகள் ஷனம் ஷெட்டி, கிரண், ஷிவானி, ரம்யா பாண்டியன், நடிகர்கள் கேப்ரில்லா, அனு மோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், சூப்பர் சிங்கர் அஜித் ஆகியோருடன் இன்னும் சிலர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு குடும்ப சென்டிமென்ட் இந்த ஷோவில் இடம் பெறுவதுண்டு. நடிகை வையாபுரி, சேரன் போன்றவர்கள் பங்கேற்றபோது 100 நாள் அவர்களது குடும்பத்தைப் பிரிந்தது எண்ணி சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதுபோல் ஒரு சென்டிமென்ட் இந்த முறையும் ஒர்க் அவுட் ஆகும் போல் தெரிகிறது. பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனாவும் போட்டியாளராக இடம் பெறுகிறாராம். இவருக்குச் சாரா என்ற மகள் இருக்கிறார். அவரை பிரிந்து 80 நாட்கள் ஷோவில் இருப்பாரா என்ற சென்டிமென்ட் ரொம்பவே ஒர்கவுட் ஆகும் என்று கூறப்படுகிறது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை