ஆபாச கமெண்ட் செய்தவரை கிழித்து எரிந்த ஷிவானி நாராயணன்.. வெளியவே இப்படினா பிக் பாஸில் என்ன ஆகுமோ ?

shivani narayanan post about negative comments

by Logeswari, Oct 2, 2020, 20:02 PM IST

இரட்டை ரோஜா,பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் ஷிவானி நாராயணன். இவரின் நடிப்பின் திறமை வயசு பசங்களை கட்டிப் போட்டுள்ளது என்றே கூறலாம். இவருக்கு ஷிவானி ஆர்மி என்று தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளது.

இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உண்மையாக்கும் படி இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகி உள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்ட்டிவ்வாக இருப்பார். தினமும் ஒரு போஸ்ட் அல்லது மிக கவர்ச்சி மிகுந்த நடனம் என்பதை போஸ்ட் செய்து தற்பொழுது 'கவர்ச்சி கன்னி' என்ற பெயரை ரசிகரிடத்தில் சம்பாதித்துள்ளார். ஷிவானி தற்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தன்னை தனிமைப் படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்பொழுது தனிமையில் இருக்கும் ஷிவானி போஸ்ட் செய்கின்ற புகைப்படம்,நடனம் யாவும் படு கவர்ச்சியாகவும் அவர் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போகிவிட்டது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் சிலர் ஆபாசமான கமெண்ட்டுகளை பகிர்ந்துள்ளார்.

இதனை கண்டு மிகவும் கோபம் அடைந்த ஷிவானி மற்றவர்களை இழிவுப் படுத்தி காசு சம்பாதிக்க நினைக்காதீர்கள். பெண்ணை பற்றி பெண்ணே எப்படி இவ்வளவு தப்பாக பேச முடியும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? என்ன ஆடை அணிய வேண்டும் எப்படி அணிய வேண்டும் என்பது என் உரிமை என்னை பற்றி எனக்கு தெரியும் என்னை பற்றி விமர்சிப்பதை நிறுத்திவிட்டு 'mind your own business' என்று ஆபாசமாக பேசியவர்களை பயங்கரமாக தனது வார்த்தைகளால் வலாசியுள்ளார் என்றே கூறலாம்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை