தூத்துக்குடி அருகே கடற்கரையில் சிலிண்டர் வெடித்தது விசைப்பலகை மற்றும் கன்டெய்னர் லாரி எரிந்து சாம்பல்.. ரூ.1.5 கோடி சேதம்..

The cylinder exploded on the beach near Thoothukudi and the boat and container lorry were burnt to ashes.

by Balaji, Oct 2, 2020, 19:59 PM IST

தூத்துக்குடி தருவை குளம் 60 வீடு காலணியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் வயது 50. இவர் தனக்குச் சொந்தமான விசைப்பலகை தருவை குளம் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தார் அந்தப் படையில் சில மீனவர்கள் காஸ் சிலிண்டரை வைத்துச் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டருடன் உள்ள டியூப்பில் ஓட்டை விழுந்ததில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இதில் விசைப்படகு முழுவதும் தீ பிடித்து எரிந்து சாம்பலானது. சம்பவம் நடக்கும்போது அந்த இடத்தின் அருகில் ஒரு கன்டெய்னர் லாரியிலிருந்து ஐஸ் கட்டிகளைச் சிலர் இறக்கிக் கொண்டு இருந்தனர். சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஒரு பாகம் கன்டெய்னர் லாரியில் உள்ள டீசல் டேங்கின் மீது விழுந்தது. இதில் டீசல் டேங்க் வெடித்ததால் லாரியும் தீப்பிடித்து எரிந்தது.

அருகில் இருந்தவர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த, தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.அதேசமயம் எரிந்து கொண்டிருந்த விசைப்படகின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் சில விசைப்படகுகளை மீனவர்கள் சிலர் உடனடியாக அப்புறப்படுத்தி கடலுக்குள் கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் விசைப்படகிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான வலைகளும், ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் ஐஸ் கட்டிகளை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரியும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.இந்த விபத்து குறித்து தருவை குளம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading தூத்துக்குடி அருகே கடற்கரையில் சிலிண்டர் வெடித்தது விசைப்பலகை மற்றும் கன்டெய்னர் லாரி எரிந்து சாம்பல்.. ரூ.1.5 கோடி சேதம்.. Originally posted on The Subeditor Tamil

More Thoothukudi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை