பிக் பாஸில் ஒரு புதிய திருப்பம் !! வனிதா விஜயகுமாரின் வாக்கு பலித்ததா ??

huge turn in bigboss 4

by Logeswari, Oct 2, 2020, 22:59 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் முதல் இன்று வரை சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் வனிதா விஜயகுமார். இந்த லாக்டவுனில் நமக்கு மிகவும் பொழுது போக்காக அமைந்தது வனிதாவின் மூன்றாவது கல்யாணம் தான்.

இவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகள் பல வித வழியாக அவரை நெருங்கியது. ஆனால் நமது வனிதா அக்காவா கொக்கா அவர் தான் எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து போராடுபவரே ஆச்சே! அதே போல் தன்னை குறை சொன்ன அனைவரின் முகத்திரையில் கறையை பூசினார்.

வனிதா ஒரு வீடியோவில் எலிசபெத் ஹெலன் தேவை இல்லாததை பேசி பிரபலமாக முயல்கிறார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எண்ணம் இருப்பது போலவும் தோன்றுகிறது என்று நக்கலாக கூறினார். ஆனால் தற்பொழுது அது உண்மையாகிடும் போலிருக்கே..வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி பிக் பாஸ் 4 ஆரம்பமாகிறது.இதில் ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட கோமாளிகள், கிரண் ஆகியவர் கலந்து கொள்கின்றனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து எலிசபெத் ஹெலனும் கலந்து கொள்ள போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனின் உறுதியான செய்தி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 பற்றிய வதந்திகள் பற்றிய உண்மைகள் யாவும் வருகின்ற ஞாயிறு கிழமை தான் ஒரு முடிவுக்கு வரும் போல...

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை