உன் அழகை கண்டு அந்த பிரம்மனும் மயங்கிப்போவானடி !! அதுல்யா ரவியின் சொக்க வைக்கும் அழகு.

athulya next project and her beauty

by Logeswari, Oct 2, 2020, 21:17 PM IST

அதுல்யாவின் தமிழ் திரைப்பட பயணம் 'காதல் கண் கட்டுதே' என்ற திரைப்படத்தில் இருந்து ஆரம்பித்தது. இத்திரைப்படம் உண்மையான, அழகான காதலை எதார்த்தமாக கூறியது. அதில் அதுல்யாவின் முக பாவனைகள் அட்டகாசமாக அமைந்திருந்தது. இதனால் தமிழ் ரசிகர்களின் மனதில் அதுல்யாவிற்கு ஒரு இடம் கிடைத்தது அதலில் அதுல்யா ஒரு ராணியாக குடிபெயர்ந்துள்ளார். அதுல்யாவின் நடிப்பு திறமை, அழகு ஆகியவை கண்டு பிரமித்து போன இயக்குனர்கள் தானே முன் வந்து தங்களின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில் வெளியானது தான் சாட்டை 2, நாடோடிகள் 2 என்ற திரைப்படங்கள். இதில் கம்பிரமான ஹீரோயினாக உலா வந்தார்.

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இவர் தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன் தம்பியுடன் செல்லமாக சண்டை இடும் காட்சிகளை வெளியிட்டு தனது பாசத்தை அந்த வீடியோ மூலம் உணர்த்தியுள்ளார். அதுல்யா ரவிக்கு தனது தந்தை என்றால் அவ்வளவு இஷ்டமாம்..தனது தந்தையை அவரின் மனதில் ஹீரோவாக வைத்துள்ளார் என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதுல்யா கவர்ச்சிக்கு இடம் தருபவர் அல்ல... எப்பொழுதும் நம் தமிழ்ப் பண்பாட்டு உடைய சேலையை தான் அணிந்திருப்பார்.

தற்பொழுது அதுல்யா கைவசத்தில் இருக்கும் படம் வட்டம். இத்திரைப்படத்தை புதுமுகம் கமலக்கண்ணன் இயக்கவுள்ளார். அதுல்யாவுடன் சேர்ந்து சிபிராஜ்,ஆண்ட்ரியா,நிக்கி கல்ராணி,சமுத்திரக்கனி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை