உ.பி -ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி மற்றும் டிஎஸ்பி காவல் ஆய்வாளர், ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் பூலாகார்கி கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாகத் தாக்கியதில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி டெல்லி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
அவரது உடலை டெல்லியில் இருந்து கொண்டு வந்த உ.பி. மாநில போலீசார், , நேரே சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று எரித்துவிட்டனர் . நாடு முழுவதும் இச்சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை - முதல்வர் யோகி அந்தப் பெண்ணின் தந்தையாரிடம் தொலைப்பேசி மூலம் பேசினார்.இறந்த பெண்ணின் மரணத்துக்கு இழப்பீடாக ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், குற்றவாளிகள் உரியத் தண்டனை பெறுவார்கள் என்று யோகி ஆதித்யநாத் அவரிடம் உறுதியளித்தார்.
இந்த சூழ்நிலையில் நேற்றுஎஸ்.பி. உள்ளிட்ட 4 அதிகாரிகளை முதல்வர் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.பெண்களுக்குத் தீங்கு நினைப்பவர்கள் இனி தப்பிக்க முடியாது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதி வில் பெண்களுக்குத் தீங்கு செய்ய நினைப்பவர்கள் முழுமையாக அழித்து ஒழிக்கப் படுவார்கள் எதிர்காலத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் .பெண்களின் கண்ணியம், சுயமரியாதைக்குக் களங்கம் விளைவிக்க நினைப்பவர்கள் மனதில் தீய எண்ணங்களை வைத்திருப்பவர்கள் இனி தப்ப முடியாது. அவர்கள் அறவே அழித்தொழிக்கப் படுவார்கள்.
பதவி ஏற்கும் போது பெண்களை பாதுகாப்போம், அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று சொல்லி பதவிப்பிரமாணம் எடுத்துள்ளோம். அதை நிறைவேற்றுவதற்கு உத்தரப்பிரதேச அரசு கடமைப்பட்டுள்ளது. அதனை நிச்சயம் இந்த அரசு நிறைவேற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.