கபடி வீரர் டூ மிஸ்டர் இண்டெர்நேஷனல் - பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொள்ளும் பாலாஜி முருகதாஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...!

mil Contestants Balaji murugadoss: Everything You Need To Know About Balaji murugadoss

by Logeswari, Oct 4, 2020, 19:13 PM IST

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகவும் மக்களின் பெரு ஆதரவுடனும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெளி நடப்புகள் எதுவும் அறியாது 100 நாட்கள் வீட்டிலே இருக்க வேண்டும்.இது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதற்கட்ட விதிமுறைகள் ஆகும்.இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் பத்மஸ்ரீ கமலஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.இது வெற்றிகரமாக நான்காவது வருடத்தில் கால் எடுத்து வைக்க உள்ளது.


தற்பொழுது வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் பாலாஜி முருகதாஸ் என்பவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் தெரிவித்துள்ளது.இவரின் சொந்த ஊர் தேனி ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னை தாங்க..ஆமா இந்த போட்டியாளரும் சென்னை வாசி என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.இவருக்கு பாலாஜி க்ரிஷ் என்று வேறு பெயரும் உண்டு. இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்.இதனையடுத்து இவருக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.டைசன் என்ற தமிழ் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் பாலாஜி முருகதாஸ்.இவர் SRM கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் பட்டத்தை பெற்றுள்ளார்.இவரது நடிப்பு திறமையால் பலவற்றை ஆல்பம் பாட்டில் நடித்து பெண்களை கவர்ந்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு மாவட்ட அளவில் ஒரு கபடி வீரர் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் பார்க்க வாட்டசாட்டமாக கவர்ச்சியாக உள்ளதால் இவர் தான் பிக் பாஸின் அடுத்த காதல் மன்னன் என்று கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.

இவரின் காந்த பார்வையில் சீக்கி தவிக்க போகின்ற கன்னி யார் என்பது சற்று பொறுத்து பார்த்தால் தான் தெரியும்..நடந்த மூன்று பகுதியிலும் பிக் பாஸ் வீட்டை சுற்றி காதல் ஜோடிகள் வலம் வந்தனர்.ஆனால் அவர்களின் காதல் நிஜ வாழ்க்கையில் நீடிக்க வில்லை.இந்த சீசனில் காதலுக்கு வாய்ப்பு உள்ளது ஆனால் நம் ஹீரோ பாலாஜி சிக்குவாரா? என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. மக்கள் இத்தனை நாள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 4 இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை