விநாடி வினா நிகழ்ச்சி டூ “மதுர குலுங்க” பாடல் வாய்ப்பு - பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொள்ளும் வேல்முருகன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...!

Bigg Boss Tamil Contestants Velmurugan: Everything You Need To Know About Balaji murugadoss -

by Loganathan, Oct 5, 2020, 13:04 PM IST

விஜய் டிவியில் நடைபெறும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் அறிமுக விழா நேற்று ( 05-10-2020) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரான திரு.கமலஹாசன் பல அரசியல் நகர்வுகளுக்கு இடையே தொகுத்து வழங்குகிறார். அரசியல் மற்றும் சினிமா என இரண்டையும் அவர் எப்படி கையாள்வார் ? இந்த நிகழ்ச்சியின் மூலம் அரசியலை மய்யபடுத்தவாரா போன்ற பல்வேறு கேள்விகளால் இந்த நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களின் மீதான எதிரிபார்ப்பும் ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்களும் இணைந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருகிறார். மேலும் இவர் நாட்டுப்புற பாடல்களால் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிராமிய பாடகர், சினிமா பின்னணி பாடகர், மரபு இசை கலைஞர், நாட்டுப்புற நாயகன் என பல விருதுகள், பாடல் உருவாக்கத்தில் தோன்றிய முதல் பாடகர் , கின்னஸ்சாதனை படைப்பாளி, நடிகர் என பல்வேறு முகங்களை கொண்ட பாடகர் வேல்முருகன். இவர் விருதாச்சலத்தில் உள்ள "முதனை" கிராமத்தில், 1980 ம் வருடம் மார்ச் 3 ல் நடுத்தர இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை விவசாய பின்புலத்தை சார்ந்தவர்.

" குழந்தை பருவத்தில் இருந்தே, பாடல் மற்றும் இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் ஐடிஐ படித்து முடித்த பின், இசையின் மீதிருந்த ஆர்வத்தால் அடையாறில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றார், அப்போது தற்செயலாக ஒரு பாடலை பாட , அந்த நிகழ்ச்சியை பார்த்த இயக்குனர் " சசிகுமார்" இவரை பற்றி இசையமைப்பாளர் "ஜேம்ஸ் வசந்திடம்" கூறியுள்ளார். இப்படியாக இவருக்கான சினிமா வாய்ப்பு 2008 ல் சுப்பிரமணியபுரம் படத்தில் " மதுர குலுங்க" என்ற பாடலுக்கு கிடைத்தது.
பின்னர் நாடோடிகள் படத்தில் " ஆடுங்கடா மச்சான் " பாடல் 2009 ல் பாடினார். கடைசியாக இவர் அசுரன் படத்தில் "கத்தரி பூவழகி " என்ற பாடலை 2019 ல் பாடியுள்ளார். இவர் இதுவரை 350 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவர் இந்திய ராணுவம் தொடர்பாக எழுதிய பாடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவரிடம் மரபு இசை நாயகன் விருது. டாக்டர் அப்துல் கலாம் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து நாட்டுப்புற நாயகன் விருது.

2020ம் ஆண்டிற்கான பெரியார் விருது

2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின் கலைமாமணி விருது ( 2019ல் முதல்வர் பழனிசாமியால் வழங்கப்பட்டது)

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமியை தொடர்ந்து கலைமாமணி விருது பெறும் 3வது கிராமிய பாடகர் இவர் தான்)

2020 பொங்கல் விழாவில், சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் விருது போன்றவற்றை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு அமெரிக்கன் பல்கலைகழகம் உட்பட இரண்டு கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் ஒயிலாட்டக்குழுவினர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பாடல் எழுதியேதோடு மட்டுமல்லாது 1418 நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனத்தோடு, பாடியதை பாராட்டி 2019 ல் கின்னஸ் விருது வழங்கப்பட்டது.

வேல்முருகன் சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2017 ல் அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இவர் பல விருதுகளை பெற்றிருந்தாலும் இவர் அம்மாவை பற்றி எழுதிய பாடலுக்காக கிடைத்த கவுரவ டாக்டர் பட்டத்தையே பெருமையாக சொல்கிறார். மேலும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அழைப்பு தான் இவரின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது என சிலாகித்து கொள்ளும் இவர். அதிகமாக ஜுவி.பிரகாஷ் இசையில் தான் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading விநாடி வினா நிகழ்ச்சி டூ “மதுர குலுங்க” பாடல் வாய்ப்பு - பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொள்ளும் வேல்முருகன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...! Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை