பிக்பாஸ் 4ல் நடிகை ஷிவானியை கார்னர் செய்கிறார்கள்.. தப்பிப்பாரா, சிக்கிச் சிதறுவாரா?

Actress Shivani Cornerd by Bigboss Contestent

by Chandru, Oct 6, 2020, 11:14 AM IST

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நேற்று முன்தினம் அக்டோபர் 4ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்துக்கு வந்தனர். ரசிகர்களை தயார்ப்படுத்தும் விதமாக புரமோ வீடியோக்கள் துண்டு துண்டாக வெளியிடப்பட்டு வருகின்றன. பல வீடியோக்கள் பகிரப்பட்டதில் ஷிவானி மீது சிலர் கண் வைத்திருப்பது தெரிகிறது.

சனம் செட்டிக்கும் அவருக்கும் படுக்கையைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாகப் பேசும் அவர், ஷிவானிக்கு தனியாக இருக்கும் படுக்கை வேண்டும் என்கிறார் அதை நான் தேர்வு செய்து வைத்திருந்தேன். அவர் மெச்சூரிட்டி அடையவில்லை அதனால் விட்டுக் கொடுத்தேன் என்று சனம் சொல்ல அதற்கு ஷிவானி, நான்தான் அந்த படுக்கையை முதலில் தேர்வு செய்தேன். அங்கு எனது சேனிடைசரை வைத்துவிட்டேன். இங்கு எனக்குப் பேச உரிமை இருக்கா இல்லையா? என்றார்.

மற்றொரு வீடியோவில் ஆரி ஷிவானிக்கு அட்வைஸ் செய்தார், ஏன் வந்தது முதலே சோகமாக இருக்கிறீர்கள் ஜாலியாக இருங்கள் என்றார். பிறகு இன்ஸ்டகிராமில் தினமும் ஒரு போட்டோ, வீடியோ போடுகிறீர்களே என்ன ஆகவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்க அதற்குப் பதிலடி தரத் தயாரானார் ஷிவானி. போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு இதய முத்திரை வடிவை கைகளில் பதித்தனர். பிடிக்காதவர்களுக்கு ஹார்ட் பிரேக் முத்திரையும் கையில் பதித்தனர். ரியோ ராஜுக்கு அறந்தாங்கி நிஷா தனது இதயத்தைக் கொடுத்தார். சோமு சேகருக்கு இதயத்தை உடைத்த முத்திரையைப் பதித்தார்.

அதேபோல் இதிலும் ஷிவானி கார்னர் செய்யப்பட்டார். மாடல் அழகி சம்யுக்தா நடிகை ஷிவானி இல்லத்துக்கு வந்ததுமுதல் பேசாமல் ஒதுங்கியே இருக்கிறார்.அதனால் அவருக்கு ஹார்ட் பிரேக் முத்திரை பதிக்கிறேன் என்றார். பாடகர் வேல் முருகனுக்கு இதய முத்திரை பதித்தார். பெண்கள் படுக்கை அறை பக்கம் வந்து நின்றுக்கொண்டிருந்த ஆண் போட்டியாளரை அறந்தாங்கி நிஷா வாய்க்கு வந்த படி திட்டினார். அதைகேட்டுக்கொண்டு நின்றிருந்தவர் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சமையல்கட்டு பக்கம் போனார்.கேப்ரில்லா, ஷிவானி துருதுருவென நடனம் ஆடி ரசிகர்களை ஈர்க்கின்றனர். இவர்களை 2K கிட்ஸ் எனச் செல்லப் பெயர் கொடுத்து இளவட்டங்கள் பாராட்டத் தொடங்கி உள்ளனர். இடுப்பழகி ரம்யா தொப்புள் காட்டி வலை வீசுகிறார். ரேகா அடுப்படியே கதி என்றிருக்கிறார்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை