ஜித்தன் ரமேஷின் அனல் பறக்கும் விவாதம். ஷிவானியை டார்கெட் செய்யும் சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டின் முதல் நாள்..

big boss season 4 first day

by Logeswari, Oct 6, 2020, 14:39 PM IST

மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமை அன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டை மக்களுக்கு சுற்றி காட்டினார்.

பிக் பாஸ் சீசன் 4 க்கு தயார் செய்த வீடு மிகவும் பிரம்மாண்டமாகவும்,நிறைய வண்ணங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருந்தது. 16 போட்டியார்களை சிறப்பாக வரவேற்று 'பசுமை இந்தியாவை' உணர்த்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பூச்செடியை வழங்கினார் கமலஹாசன். பிக் பாஸ் வீட்டின் முதல் நாளான நேற்று பல சுவாரசியமான காட்சிகள் நடந்தது. பிக் பாஸ் எல்லா ஹவுஸ் மெட்ஸையும் கார்டனில் ஆஜர்படுத்தி ஒரு போட்டியை நிகழ்த்தினார். இதிலிருந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவர் அந்தஸ்த்தை தட்டி தூக்கினார் கவர்ச்சி அழகி ரம்யா பாண்டியன். பிறகு ரம்யா பிற போட்டியார்களுடன் கலந்து பேசி மற்ற தலைவர்களை தேர்வு செய்தார்எல்லோரும் தங்களின் போட்டிகளை சிறப்பாகவே விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் காதல் கிசுகிசுக்கள் உண்டாகுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது ஏனெனில் அனைவரும் அண்ணன் தங்கச்சி என்று முறை வைத்து பழகுகிறார்கள்.இப்படி இருக்கும் பொழுது காதல் சாத்தியமா?? வந்த முதல் நாளிலே சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் ஷிவானியை டார்கெட் செய்வது போல் சில காரசாரமான காரணங்களை வெளியிட்டனர். இதனால் ஷிவானியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஜித்தன் ரமேஷ் மனதில் நினைத்ததை சட்ரென்று போட்டு உடைத்து விட்டார். அதாவது சனம் ஷெட்டி செய்யும் செயல்கள் யாவும் செயற்கையாக உள்ளதாகவும் இவர் பாதுகாப்பான முறையில் போட்டியை விளையாடுகிறார் என்பது போல் எனக்கு தோன்றுகிறது என்று கூறினார். இதற்கு மக்களும் ஆமாம் சனம் ஷெட்டியின் செயல்கள் அவ்வாறு தான் உள்ளது என்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். முதல் நாளே இப்படினா போக போக பிக் பாஸ் வீட்டின் நிலைமை கேள்விக்குறிதான்...

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை