ஆமாங்க , எனக்கு கல்யாணம்தான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்ட விஜய் நடிகை திருமண தேதி அறிவித்தார்.. வாழ்க்கையின் அடுத்தகட்ட பயணம் தொடங்குவதாக உருக்கமான பதிவு.

Actress Kajal Agarwal announced her marriage Date

by Chandru, Oct 6, 2020, 14:00 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். கடந்த ஒரு வருடமாகவே காஜலுக்கு கல்யாணம் நடக்கவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வீட்டிலும் அவரை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள். ஆனால் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வருவதால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்று கூறி வந்தார் காஜல்.


கடந்த சில மாதங்களுக்கு முன் காஜலுக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயார்த்தம் நடந்து விட்டதாக தகவல் பரவியது. அதேபோல் நடிகர் ஒருவரை காஜல் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா நடிகரை மணப்பீர்களா என்று காஜலிடம் கேட்டதற்கு. சினிமா துறையில் நடிகரையோ அல்லது வேறு யாரையுமோ நான் திருமணம் செய்ய மாட்டேன். இரண்டு டாக்டர்கள் திருமணம் செய்து கொண்டால் அது சரியாக இருக்காது என்பது என் பாலிசி. என் விஷயத்திலும் அது பொருந்தும். நான் எப்போது ஒருவரிடம் முழுவதுமாக என் இதயத்தை பறிகொடுக்கிறேனா அப்போது திருமணம் செய்துக் கொள்வேன் என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு முதல் காஜல் அகர்வாலுக்கு தொழில் அதிபர் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுடன் திருமண நிச்சயார்த்தம் நடந்து விட்டதாக நெட்டில் தகவல் வேகமாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதய வடிவ சிம்பல் பகிர்ந்திருக்கிறார் காஜல். விரலிலும் மோதிரம் அணிந்திருக்கிறார். அது நிச்சதார்த்த மோதிரம் என்று கூறப்பட்டது. தொழில் அதிபருக்கும் காஜலுக்கும் சீக்கிரமே திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை காஜல் அதை உறுதி செய்யவில்லை.


இந்த தகவலை அறிந்த நெடீஸன்கள் உங்கள் இதயத்தை கவர்ந்த காதலன் யார் என கேட்டு வந்தனர். பலரும் அவருக்கு போன் செய்து திருமணம் பற்றி விசாரித்தனர். இதற்குமேலும் மூடி மறைக்க முடியாது என்று எண்ணிய காஜல் ஒரு வழியாக தனது திருமணம் பற்றி உறுதி செய்து அறிவித்திருக்கிறார்.ரசிகர்களின் கேள்விக்கும், நெட்டில் வலம் வரும் திருமண தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜில்லா பட விஜய் ஜோடி நடிகை காஜல் அகர்வால் தனது திருமணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:
கவுதம் கிட்ச்லுவுக்கும் எனக்கும் இம்மாதம் (அக்டோபர்) 30ம் தேதி திருமணம் நடத்த முடிவாகி இருக்கிறது. அதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மும்பையில் சிறிய அளவில் நெருக்கமான குடும்பத்தினர் நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். இது கொரோனா ஊரடங்கு காலகட்டமாக இருப்பதால் திருமண விழாவை ஆடம்பரமாக நடத்த எண்ணமில்லை. ஆனாலும் எங்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் பாசமும் அறிந்து த்ரில்லாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனது திரையுலக பயணத்தில் நீங்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. தொடர்ந்து உங்களை நான் மகிழ்விப்பேன். தற்போது வாழ்க்கையின் புதிய பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து உங்களின் அன்பும் பாசமும் ஆதரவும் எங்கள் மீது பொழிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்களது முடிவில்லா ஆதரவுக்கு எனது நன்றி என தெரிவித்திருக்கிறார்.
காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். இவருக்கு 7 வருடத்துக்கு முன்பே அதாவது 2013ம் வருடமே திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் பெற்றுவிட்டார். தங்கைக்கு திருமணம் ஆனபிறகும் காஜல் திருமணத்துக்கு காத்திருப்பது ஏன் என சிலர் கேட்டு அந்த நிலையில் அவர்கள் வாயையும் திருமண அறிவிப்பு மூலம் அடைத்திருக்கிறார்.
காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் 2, ஹே சினமிகா மற்றும் தெலுங்கில் ஆச்சார்யா, மொசகல்லு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பாரீச் பாரீஸ் என்ற படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை