பாலியல் தொல்லை விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா? நடிகை மீது பிரபல ஹீரோயின் தொடர்ந்த மான நஷ்ட வழக்கால் பரபரப்பு..

Actress Richa chatha filed case against Payal gosh demanding 1 crore

by Chandru, Oct 6, 2020, 15:28 PM IST

இமைக்க நொடிகள் பட நடிகர் அனுராக் காஷ்யப். இப்படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்து இயக்கினார். அனுராக் இந்தியில் கேங்ஸ் ஆப் வாசேப்பூர், தேவ்டி, தி லன்ச் பாக்ஸ், பிளாக் ப்ரைடே போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் கடந்த 2 வாரத்துக்கு முன் பாலியல் வன்கொடுமை புகார் கூறியதுடன் தன்னை பட வாய்ப்பு தருவதாகத் தனது வீட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்ய முயன்றார் என்றதுடன் மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அனுராக்கை அழைத்து விசாரித்தனர்.

பாயல் கோஷ் தன் மீது அளித்த புகாரை மறுத்த அனுராக், அவர் பாலியல் பலாத்கார முயற்சி நடந்ததாகக் கூறும் நாளில் நான் இலங்கையில் படப்பிடிப்பில் இருந்தேன் என்று கூறியதுடன் அதற்கான ஆதாரங்களும் சமர்பித்தார்.இதற்கிடையில் பாயல் கோஷ் சில நடிகைகள் பெயரைச் சொல்லி அவர்களிடமும் அனுராக் தவறாக நடந்துக் கொண்டார் என்றார். ரிச்சா சதா, மஹி கில், ஹூமா குரோஷி ஆகியோரிடம் அனுராக் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்றார். ஆனால் அதை சமந்தப்பட்ட நடிகைகள் மறுத்திருந்தனர்.

இதில் நடிகை ரிச்சா சதா நடிகை பாயல் மீது கோபம் அடைந்தார். தன்னுடைய விவகாரத்தில் தேவை இல்லாமல் என் பெயரைப் பாயல் இழுத்திருக்கிறார் என்றதுடன் அதற்காக அவர் மீது 1.1கோடி மான நஷ்ட ஈடு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே நடிகைகள் ராதிகா ஆப்தே, டாப்ஸி போன்றவர்கள் அனுராக் காஷ்யபிற்கு ஆதரவாகப் பேசி இருந்தனர். சில தினங்களுக்கு முன் நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பாயல் கோஷ் சொல்லும் புகார் மீது மற்றவர்களைப் போல் எனக்கும் சந்தேகம் உள்ளது. அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை