பிக்பாஸ் 4ல் 8 பேரை வெளியேற்ற கடும் மோதல்.. மக்கள் தீர்ப்பை மாற்ற புது சிஸ்டம்.

BigBoss4 tamil satar Evection session today

by Chandru, Oct 13, 2020, 12:32 PM IST

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் போட்டியாளர்களை மேலும் மேலும் தூண்டி போட்டிக்கு கட்டாயப்படுத்தி அவர்களுக்குள் மோதலை வரவழைக்கிறது. நேற்று நட்பாக இருந்தவர்கள் பிக்பாஸ் ரகசிய அறைக்குள் போய் வந்தபிறகு எதிரெதிர் துருவமாகி விடுகிறார்கள்.

முதல்நாள் மொட்டை சுரேஷுக்கு ரேகா சப்போர்ர்ட் பண்ண மறுநாள் ரேகாவை நக்கலடிக்கிறார் சுரேஷ். அதே போல் முதல் நாள் மொட்டை சுரேஷ் தோளை தொற்றிக் கொண்டு அவருக்கு சப்போர்ட் பண்ணார் சனம் ஷெட்டி பிறகு அவரிடம் வாங்கிக் கட்டினர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற 8 பேர் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் ஒவ்வொருவரின் சுயநலமும் வெளிப்பட பந்தயம் நடக்கிறது. மக்கள் யாரை வெளியேற்றலாம் என்ற வாக்களித்திருக்கின்றனர். அந்த வாக்கை முதன்முறையாக போட்டியாளர்கள் மாற்றி அமைக்கும் ஃப்ரி பாஸ் முறை அமல்படுத்தப்படுகிறது. அதற்காக 8 போட்டியாளர்களுக்குள் சுயநலமாக ஒருவரையொருவர் வெளியேற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கும் முந்திரிக்கொட்டை போல் மொட்டை சுரேஷ்தான் முந்திக்கொண்டு நிற்கிறார்.

'நாங்கெல்லாம் சேர்ந்து அவரைத்தான் வெளியேற்ற முடிவு செய்திருக்கிறோம்' என்று ஒருவரை கைகாட்டுகிறார். அடுத்த காட்சியில் ஒருவர் வெளியறுகிறார். மற்றொரு காட்சியில் சனம் ஷெட்டி கண்ணை கசக்கிக் கொண்டு சோகத்தில் இருக்கிறார்.

தனி ஆளாக ரியோ ராஜ் வெளியிலிருந்து சத்தமாக எதையோ பேசிக்கொண்டிருக்க புரோமோ முடிகிறது. இந்த கூத்தெல்லாம் எப்படி முடியப்போகிறது என்பது இன்று இரவில் பிக்பாஸ் 4 ஷோவில் தெரியும்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை