அன்பான ஆதரவு,கெத்து ரம்யா , சரண்டர் ஆன சுரேஷ்.. பிக்பாஸ் 9வது நாள் ரகளை..

Advertisement

எதிர்வீட்டுப் பாட்டுக்கு கண்விழிச்சாங்க இன்மேட்ஸ்..அவங்க சாப்பிட்ட தட்டை அவங்கவங்க கழுவணும்னு இன்னிக்கு அட்வைஸ் செக்ஷன் ஆரம்பிச்சாரு சுரேஷ்.. அஜித்தைக் கூப்பிட்டு இதை அங்க வைன்னு ஆர்டர் பண்ணப் புள்ள பூச்சிக்குக் கொடுக்கு முளைச்ச மாதிரி கோவமே வராத ஆஜித்க்கு கடுப்பாச்சு..ஆர்டர் பண்ணற வேலை வெச்சுக்காதீங்க..ஒரு பாய்ன்ட் வரைக்கும் தான் என்னால பாக்க முடியும்ன்னு சொல்லி my foot ன்னு கால உதைச்சுகிட்டே இடத்தை விட்டு போய்ட்டாங்க ஆஜித்.

கொஞ்சம் கிளீனா இருக்கத்தான் ட்ரைனிங் கொடுத்தேன்னு சுரேஷ் சொல்ல ரம்யா அன்பா சொல்லுங்க, குறை சொல்லாதீங்கன்னு ஆஜித்க்கு சப்போர்ட் பண்ணாங்க..சரி வரட்டும் சாரி கேக்கறேன்னு சொல்ல, பாலாஜி ஆஜித்தை கூல் பண்ணாரு..கிட்ச்சன்க்கு வந்த ஆஜித் கிட்ட சாரி கேட்டாரு சுரேஷ்..ஆஜித்தும் சாரி கேட்டு சமாதானமானாங்க.

பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக எவிக்ஷன் ஃபிரீ பாஸ் பற்றி அறிமுகம் செய்து அதற்கான டாஸ்க் பற்றி விளக்கினார் ரம்யா..பாட்டு வரிகள் மாத்தி பாடி வேல்முருகனை சுரேஷ் டீஸ் பண்றதா ஏத்தி விட்டாங்க அனிதா..எவிக்ஷன் ஃபிரீ பாஸ் டாஸ்க் செய்ய போற ஆஜித்க்கு அடிச்சாட சொல்லி அனுப்பி வெச்சார் ஆரி..

சுரேஷ், சனம், ரேகா, கேப்ரி, ரம்யா, சம்யுக்தா, ஷிவானி, ஆஜித் ஆக எட்டு பேரும் ஒரு தனி ரூம்குள்ள எவிக்ஷன் ஃபிரீ பாஸ் டாஸ்க் விளையாட தயாரானாங்க..டாஸ்க் என்னன்னா எல்லாரும் முடிவு பண்ணி மக்கள் கிட்ட இவங்க ஓட்டு வாங்கிருவாங்க.. என்னாலதான வாங்க முடியாது அதனால எவிக்ஷன் ஃபிரீ பாஸ் எனக்குதான் வேணும்னு மத்தவங்கள கன்வின்ஸ் பண்ணி ஒவ்வொருத்தரா வெளியே அனுப்பணும்..கடைசியா யாரு மிஞ்சரங்களோ அவங்களுக்கு அந்த பாஸ்..அதனால என்னாகும்னா ஒருவேளை மக்கள் ஓட்டுப் போட்டு அந்த கண்டெஸ்டண்ட் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகணும்னு முடிவாச்சுன்னா இந்த பாஸ் இருந்தா போக வேண்டியதில்லை..போட்டியில் தொடரலாம்..

சுரேஷ் உரையாடலை ஆரம்பிச்சு வெச்சாரு..அதிக ஓட்டு வாங்கி நாமினேஷன்ல முதல் இடம் சனம் வாங்கி இருக்காங்க..அதனால அவங்க முதல்ல வெளியே போகணும்னு ஆரம்பிச்சு வைக்க எல்லாரும் தலை ஆட்டினாங்க..சனம் திரும்பவும் கண்ணுல தண்ணியோட தன் கதையைச் சொல்லி நான் இங்கதான் இருக்கணும், மக்கள் மேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னாங்க..உடனே சுரேஷ் அவங்களே சொல்லிட்டாங்க மக்கள் காப்பாத்துவாங்கன்னு..அதனால் அவங்களுக்கு இந்த பாஸ் தேவை இல்லன்னு சொல்ல சனம் வெளியே வந்தாங்க..அனிதாவும் ஆரியும் வந்து சனம் கிட்ட பேசி சமாதானப்படுத்தினார்கள்..

எவிக்ஷன் நம்பர் 2 யாருன்னு திரும்பவும் சுரேஷ் ஆரம்பிக்க ஷிவானியை எல்லாரும் தேர்ந்தெடுத்து வெளியே அனுப்பினாங்க..சண்டைக்கு போறப்ப ஆசா ,பாசம் நேசம் எதுவும் இல்லாம இருக்கணும், அதான் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்னு சுரேஷ் சொல்லி வரிசைப்படி சம்யுக்தாவை வெளியே அனுப்பினாங்க..

சனம், சுரேஷ்தான் ஏதோ பிக்பாஸ் மாதிரி பேசிட்டு இருக்காரு உள்ளேன்னு சொல்ல, ஆரி அவரை எதுவும் சொல்லுங்கன்னு யாரும் சொல்லல, உங்களை எதுவும் சொல்ல வேண்டாம்னும் யாரும் சொல்லலன்னு சொன்னது ஒரு சரியான கருத்தை சொன்னாரு..

அடுத்தது ரேகாவை பேசி பேசி வெளியே அனுப்பினார் சுரேஷ்..போக விரும்பலைன்னு கருத்து சொல்லிட்டு வெளியே போனாங்க ரேகா..

இப்போ மிஞ்சினது கேப்ரி, ரம்யா, ஆஜித், சுரேஷ்..வரிசைப்படி அடுத்து கேப்ரின்னு ஆரம்பிக்க முழிச்சிக்கிட்ட கேப்ரி வரிசைப்படி வரத் தேவை இல்லைன்னு வாதாடினாங்க..எல்லாருக்கும் அப்படித்தான் பண்ணோம், இப்போ எல்லாரும் போன பிறகு சொன்னா அது சரி இல்லைன்னு சுரேஷும், அவங்க அதைப்பத்தி கேக்காததுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது ஆனா, நான் இந்த வரிசைக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு வேற வழி இல்லாம அவுட் ஆனாங்க..டைனிங் டேபிள்ல எல்லார்கிட்டயும் அவங்க புரிஞ்சிக்கிட்டதை சொல்ல தொடங்கினாங்க.

ரூமுக்குள்ள ஆஜித்தை சுரேஷ் டார்கெட் பண்ண, எனக்கு ஒரு டவுட்ன்னு ரம்யா கேட்டாங்க..அந்த லிஸ்ட்ல உங்க பேர் இருந்ததா? அப்போ இந்த ஆர்டர்ல நீங்க எப்போ வருவீங்கன்னு சுரேஷ்கிட்ட..நானும் ஆஜித்தும் உங்களை சூஸ் பண்றோம் நீங்க பேசுங்கன்னு..சுரேஷ் சொன்னாரு.. இப்பவும் ஆர்டர்படித்தான் போகணும். கேப்ரி கேட்டும் மாத்தலை..அதனால ஆஜித் பேசட்டும்.. ஆஜித்க்கும் புரிய ஆரம்பிச்சது..இது ஒரு ஸ்டேடர்ஜி மாதிரி தெரியுதுன்னு மூளைக்குள்ள பல்பு எரிஞ்சது..அடுத்த நிமிஷமே சுரேஷ் ஆமா, இது பச்சையா ஸ்டேடர்ஜி தான்ன்னு ஒத்துக்கிட்டாரு..ரம்யாவும் ஆஜித்தும் செட் சேர வேற வழி இல்லாம சுரேஷ் கன்வின்ஸ் பண்ண ஆரம்பிச்சாரு..அவர் பேசின அத்தனைக்கும் பதிலடி கொடுத்து ரம்யா சிக்ஸர் அடிச்சாங்க..

அங்கதான் பிக்பாஸ் வெச்சாரு ஒரு ஆப்பு..கடைசி மூணு பேரும் பேசினதை அகம் டிவி வழியே இன்மேட்ஸ்க்கு காட்டி..ரம்யா பேச பேச கிளாப்ஸ் அள்ளுச்சு..

இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா, இதுவரைக்கும் பேசின 5 பேரும் அவங்க சொந்த கதையைத்தான் சொன்னாங்க..ஆனா சுரேஷ் பேசினது மத்தவங்கள பத்தி மட்டும்தான்..குரூப்பிசம் இருக்கு, வேல்முருகனுக்கு வேஷ்டி குடுத்தேன், அனிதா, நிஷா, ரியோ,ரேகா, எல்லார்பத்தியும் பேச பேச வெளியே பார்த்திட்டு இருக்கவங்ககிட்ட கலவையான ரியாக்ஷன்..கைதட்டல்கள், முத்தங்கள் பறந்திச்சு..

ஒருவழியா மூணு பேர்ல ரெண்டுதான் மெஜாரிட்டின்னு ரம்யா முடிச்சு சுரேஷை துரத்தி விட்டாங்க..அப்பவும் மேனேஜ்மென்ட் மீட்டிங் எடுத்த பாஸ் மாதிரி ஸீன் போட்டுத்தான் போனாரு சுரேஷ்..

ரியோ சுரேஷ்கிட்ட இது பத்தி பேசலாம்ன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருந்தாரு..சுரேஷை கேள்வி கேக்க ஆரம்பிச்சதும் அவரு எஸ்கேப் ஆகி போய்ட்டாரு..
ரம்யா ஆஜித்க்கு உன் வயசை தாண்டித்தான் நான் வந்திருக்கேன்..நீயே இதை வெச்சிக்கோன்னு விட்டு கொடுத்திட்டாங்க அந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை..

வேல்முருகன் சுரேஷ்கிட்ட நான் வந்து உங்ககிட்ட வேஷ்டி கேட்டேன்னான்னு சூடாகி சண்டைக்கு வர அதைப்பத்தி கவலையே படாம அவாய்ட் பண்ணிட்டு போய் சிரிச்சிகிட்டே சாப்பிட ஆரம்பிச்சாரு சுரேஷ்..எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வின் பண்ணது ஆஜீத்ன்னு அறிவிச்சு, அதைப் பத்திரமா வைக்கச் சொல்லி, சொந்த செலவுல சூனியம் வெச்சும் விட்டாங்க..

இன்னிக்கு எபிசோடுல முக்கியமானது ரெண்டு விஷயம்..
ஒண்ணு..இவ்ளோ விஷமா ஒரு மனுஷன் இருக்க முடியுமான்னு மக்களுக்கு தோண ஆரம்பிச்சிருக்கும் சுரேஷ் பத்தி..ஏன்னா பச்சை புள்ளைங்கள ஏமாத்தி சாக்லேட் புடுங்கி சாப்பிடற மாதிரி, அவர் வயசில பாதி கூட இல்லாதவங்களை சுதாரிக்ககூட டைம் தராம ஸ்டேடர்ஜி பிளான் பண்ணி இருக்காரு..அது அவர் அறிவு, அனுபவம்ன்னு வெச்சிகிட்டாகூட ஒத்துக்க முடியலை..அவரை பத்தி பேசாம மத்தவங்களை பத்தி குறை சொல்றது ஒரு கெட்ட குணம்..அது சுரேஷுக்கு நிறையா இருக்கு..வேல்முருகன் டென்ஷன் ஆகி பேசறப்போ பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு சிரிச்ச சிரிப்பு சீக்கிரம் மறக்காது..சண்டை போட்டுக்கிட்டே இருந்த லைம் லைட்ல இருக்கலாம்னு ஒரு ஸ்டெடர்ஜி இருக்கோ என்னவோ.

ரெண்டாவது ரம்யா..இந்த வயசில ரொம்ப தெளிவா யோசிக்கிறாங்க..எதிர்த்துப் பேசின விஷயங்களாகட்டும், ஆஜித்க்கு சப்போர்ட் பண்ணதாகட்டும், விட்டு கொடுத்ததாகட்டும், இன்னிக்கு நிச்சயமா மக்களோட குட் புக்ல ரம்யா பேர் எழுதப்பட்டிருக்கும்..100 நாள் இருக்க போறவங்கள்ல ஒருத்தருன்னு மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது..பார்ப்போம்..
இனிமேதான் பிக்பாஸ் சூடு பிடிக்கும்னு தோணுது..உங்களுக்கு எப்படி?

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>