முகமூடி டாஸ்க் ,எவிக்சன் ப்ராசஸ்,வெளியேறியது யார்?-பிக் பாஸ் நாள் 14

Bigg Boss Day 14 Review

by Mahadevan CM, Oct 19, 2020, 10:04 AM IST

இன்னிக்கும் அட்டகாசமான ஒரு காஸ்ட்யூம்ல தான் வந்தாரு. கைல ஒரு க்ளவுஸ் வேற. அதுவும் ஒரு விரலுக்கு மட்டும். கோட்டை கழட்டினா உள்ள வேற ஒரு அவுட்பிட். அதுக்காகவே கோட்டை கழட்டினாருனு தான் தோணுது.

கொரோனா, சோஷியல் டிஸ்டென்சிங், மாஸ்க் போடறதை பத்தி ஒரு கிளாஸ் எடுத்தார். அரசாங்கமும் எவ்வளவோ சொல்லியும் பெரும்பாலான மக்கள் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கலை. கொரோனா பாதிப்பு இன்னும் அப்படியே தானிருக்குனு நினைவுபடுத்தவாவது கமல் சார் பேசினது நல்ல விஷயம்.

அகம் டிவி வழியே அகத்திற்குள்

ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கு அப்புறம் வணக்கம்னு சொல்லி ஆரம்பிக்கறது ரிபீட் ஆனதை எத்தனை பேர் கவனிச்சாங்கனு தெரியல. ஒரே செஷன்ல செஞ்சதை இவங்க 2,3 விளம்பர இடைவேளையோட டெலிகாஸ்ட் செய்யறாங்க போல. நேத்தும் இதே மாதிரி தான் இருந்தது. நாம சனி, ஞாயிறுனு பார்க்கற நிகழ்ச்சி அங்க சனிக்கிழமை காலை, மதியம்னு ரெண்டு செஷன்ல படமாக்கபட்டு விடும். ஹவுஸ் மேட்ஸ் எல்லாரும் ட்ரெஸ் மாத்திருந்தாலும், கேப்பி மட்டும் போன எபிசோட் உடையோட இருந்தாங்க. 16 பேர் இருந்ததால உடை மாத்தற நேரம் இருந்திருக்காதுனு நினைக்கிறேன்.

எங்கிருந்து ஆரம்பிக்கலாம்னு கேட்டு நிகழ்ச்சியை, ஒரு டாஸ்க்கோட ஆரம்பிச்சாரு. அதன்படி ஒரு முகமூடி(மாஸ்க்), அகமே முகம்னு ஒரு பேட்ச். தங்களோட உண்மையான முகத்தை இதுவரைக்கும் காண்பிக்காதவர்களுக்கு முகமூடியும், அகத்தின் அழகு முகத்தில் தெரிபவர்களுக்கு பேட்ச்சும் கொடுக்கனும்.

ஒவ்வொரு வார டாஸ்க்லேயும் பெஸ்ட் பர்பாமர், வொர்ஸ்ட் பர்பாமர் தேர்ந்தெடுக்கும் போது, முதல் பேர் யார் வருதோ, என்ன காரணம் சொல்றாங்களோ அதையே மத்த ஹவுஸ்மேட்ஸ் ரிபீட் செய்வாங்க. கிட்டத்தட்ட ஒரு மந்தை மனநிலையோட தான் இதை செய்வாங்க. அந்த முறையை மாத்தி வோட்டிங் முறையில் இந்த முறை பெஸ்ட், வொர்ஸ்ட் பர்பாமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனா நேத்து கமல் சார் கொடுத்த டாஸ்க்ல மறுபடியும் மந்தை மனநிலை வெளிபட்டது. முதல் ஆளா வந்த ஆரி ரியோவுக்கு மாஸ்க் கொடுத்தாரு,. ரியோ கோபத்தை கட்டுபடுத்தறாரு, அது அவரோட உண்மையான முகம் இல்லைனு சொல்லி கொடுத்தாரு. அதுக்கப்புறம் வந்த எல்லாரும் அதையே பாலோ செஞ்சாங்க. அடுத்து ஆரிக்கு மாஸ்க் கொடுக்க, மொத்த டாஸ்க்ல அதிக மாஸ்க் வாங்கினது ரியோவும் ஆரியும் தான். சொந்தமா யோசிக்காம யாரோ ஒருத்தர் சொன்னதை, அப்படியே பாலோ செய்யறதை எப்ப நிறுத்துவாங்கனு தெரியல.

கோபத்தை அடக்கறது நல்ல விஷயம் தான். அது முகத்தை மறைக்கறாங்கனு அர்த்தம் கிடையாதுனு லாஜிக்கா பேசினது ரம்யா தான் அதே மாதிரி பாலா பேசினதும் முக்கியமான பாயிண்ட். ஷிவானி, ஆஜித் ரெண்டு பேரும் சின்ன பசங்கங்கறதால டார்கெட் செய்யப்படறாங்க. அவங்க எதிர்த்து கேள்வி கேக்கமாட்டாங்கனு யோசிச்சு, எல்லாரும் அவங்களையே டார்கெட் பண்றாங்கனு சொன்னாரு.

அகமே முகம் அவார்ட் பேட்சை அர்ச்சனாவுக்கு அள்ளி கொடுத்தது அதை விட அதிர்ச்சியா இருந்தது. வந்த ரெண்டு நாள் தான் ஆச்சு, அதுக்குள்ள அவங்களோட இந்த முகம் தான் உண்மையானதுனு எதை வச்சு கண்டுபிடிச்சாங்கனு தெரியல. ஆக உள்ள இருக்கற பெரும்பாலானவர்களுக்குள்ள ஒரு பனிப்போர் இருக்கு. "உனக்குள்ள இருக்கற பயத்தை மெதுவா, நிதானமா வெளிய எடுத்து உனக்கே காமிக்கறேன்னு" குருதிப்புனல் படத்துல கமல் சொல்ற மாதிரி, பிக்பாஸும் ஏதாவது செய்வாருனு நினைக்கிறேன்.

இந்த டாஸ்க் முடிஞ்ச உடனே ஆரியும், ரியோவும் விளக்கம் கொடுத்தாங்க.ஆரியோட விளக்கம் பலரையும் தூண்டி விட்டது. நான் முதல்ல ரியோவுக்கு கொடுத்ததால எல்லாரும் அதை பாலோ செஞ்சாங்கனு பாயிண்ட் அவுட் செஞ்சாரு ஆரி. ரியோ கோபத்தை மறைக்கறாரு, ஆரி அட்வைஸ் பண்றாருங்கறதை தவிர வேறெந்த காரணமும் யாரும் சொல்லலை.

அர்ச்சனா கிட்ட இருந்து அவார்ட் வாங்கினதுக்கு அப்புறம் ஆரிகிட்ட மாற்றம் தெரியுதுனு சுரேஷ் விளக்கம் கொடுத்தாரு. ஒரு ஸ்டேட்டர்ஜியை வச்சு எல்லாரும் இங்க கேம் விளையாடறாங்க. அது வொர்க் அவுட் ஆகலேன்னு சிக்னல் வருது. அதுக்கு தான் அந்த அவார்ட்.. சோ அதுக்கப்புறம் தன்னை மாத்திக்க தானே வேணும். அது நல்ல விஷயம் தானே. அதுக்காக முகமூடி போட்டுகிட்டாருனு சொல்றதை எப்படி எடுத்துக்கறது.

ஆரியும், ரியோவும் அதிகமா முகமூடி வாங்க காரணம் மேல சொன்ன மந்தை மனநிலை தான். நாமளா புதுசா எதையாவது சொல்லி மாட்டிக்காம, இன்னொருத்தர் சொன்னதையே நாமளும் பாலோ பண்ணி, கூட்டத்தோட கோவிந்தா போடறது தான் நேத்து பலரோட ஸ்டேட்டர்ஜி. அதே தான் அர்ச்சனாவுக்கும். இன்னிக்கு ஒருத்தருக்கு உண்மையானவர்னு பேட்ச் கொடுத்துட்டா நாளைக்கு ஒரு கேள்வி வரும். இப்ப அதுல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

இந்த டாஸ்க்கே பாதி ப்ரோகிராம் இழுத்துருச்சு. அடுத்து கேப்டன் டாஸ்க்ல சுரேஷ் பத்தி கேப்பி கிட்ட பேசினாரு. அப்பவே கேப்பி சேவ் ஆனதைச் சொன்னது நல்ல டைமிங். கூடவே சம்யுக்தாவும் சேவ் ஆனாங்க. வேல்முருகனைப் பாடச் சொல்லி கேட்டாரு.

அடுத்ததா எவிக்சன் ப்ராசஸ். ரேகா சனம் ரெண்டு பேர் மட்டும் இருந்தாங்க. வழக்கமான சில கேள்விகள், அதுக்கு மிகச் சாதாரணமான பதில்கள்னு சுவாரஸ்யம் இல்லாம போச்சு. ஒரு வழியா ரேகா தான் எவிக்டட்னு சொல்லி முடிச்சார் கமல் சார்.

வீட்டுக்குள்ள பிரியாவிடை கொடுக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வாரத்துக்குள்ள அழகறதெல்லாம் ஓவர்னு என் பொண்ணே சொல்றா, அதுவும் வந்த ரெண்டு நாள்ல அர்ச்சனா கண்ணீர் விட்டது ஓவரோ ஓவர். அவங்க கொண்டு வந்த செடியை ரியோவுக்கு கொடுத்தாங்க ரேகா. உண்டியலை உடைச்சு அந்த காயினை ஷிவானிக்கு கொடுத்தாங்க. ரேகா கிளம்பினதுக்கு அப்புறமும் ரொம்ப நேரம் எல்லாரும் சோகமா உக்காந்துட்டு இருந்தாங்க.

வெளிய வந்த ரேகா, கமல் சாரோட அளவா பேசிட்டு போனாங்க. ஷிவானி தன் பொண்ணு மாதிரிதான், அவளோட நல்ல கமெண்ட் இருந்ததுனு சொன்னது டச்சிங்கான விஷயம்.

அடுத்து இந்த வாரப் புத்தகம் அறிமுகம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய "வெண்முரசு" நாவலைப் பற்றி பெருமையுடன் அறிமுகப்படுத்தினார். அதோடு இந்த வாரம் முடிந்தது.

வீட்டுக்குள்ள சம்யுக்தா கேமரா கிட்ட ரேகாவோட நினைவலைகளை பகிர்ந்துகிட்டது நெகிழ்ச்சியான விஷயம்.

இந்த சீசன் பிக்பாஸ் போன சீசன் மாதிரி இல்லைனு நிறைய பேரோட கமெண்ட். இந்த சீசன் ஆரம்பத்துல இருந்தே வேகமா தான் போகுது. ஆனா கண்டஸ்டண்ட்ஸ் எல்லாரும் அமுக்குனிகளா இருக்காங்க. போன சீசன் வெற்றி பெற்றதுக்கு காரணம் கண்டஸ்டண்ட்ஸ் தான். ஆண்கள் அணில பாலாஜி, ஆரி, ரமேஷ், வேல்முருகன், சோம் இவங்க எல்லாம் இது வரைக்கு எதுவுமே செய்யல. அதே மாதிரி பெண்கள் டீம்ல சம்யுக்தா, நிஷா, ஷிவானி,. இதுவரைக்கு இந்த சீசனை காப்பாத்தினது சுரேஷ், அனிதா, சனம், ரம்யா தான். மற்றபடி எல்லாருமே ஷோகேஸ் மொம்மை மாதிரி தான் இருக்காங்க. இதெல்லாம் மாறும் போது இந்த சீசனும் சுவாரஸ்யமா மாறும்னு எதிர்பார்க்கலாம்.

You'r reading முகமூடி டாஸ்க் ,எவிக்சன் ப்ராசஸ்,வெளியேறியது யார்?-பிக் பாஸ் நாள் 14 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை