பிக்பாஸ் சீசன் 4: வெளியில செருப்பால அடிப்பாங்க.. நடிகர்கள் முன் ஆவேசமான காமெடி நடிகை..

BigBoss 4: Actress Aranthangki Nisha become Angry

by Chandru, Oct 22, 2020, 14:56 PM IST

பிக்பாஸ் சீசன்4 விஜய் டிவியில் பரபரப்பாகத் தினமும் இரவில் ஒளிபரப்பாகி வருகிறது. நாடா இல்லை காடா என்ற நாடகத்தில் அரக்கர் கூட்டமாகவும், சொர்க புரி அரச குடும்பமாகவும் போட்டியாளர்கள் உருமாறிக் கடந்த 2 நாட்களாக ராஜ்ஜியத்தைப் பிடிக்க நடத்திய போராட்டம் சூட்டோடும் சுவையோடும் நடந்தது.இதில் கோபம் அடைந்த ஆரி, இந்த விளையாட்டு விளையாட்றதுக்கு நீங்கெல்லாம் வேற ஏதாவது செய்யலாம் என்று தன்னை சுற்றி நின்று டார்ச்சர் செய்தவர்கள் மீது எரிந்து விழுந்தார்.

இன்றைய பிக்பாஸ் வீடு முற்றிலுமாக ஒரு பட்டிமன்ற மேடையாக மாறி இருக்கிறது.
பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் அல்லது பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்ற இரண்டு தலைப்பில் போட்டியாளர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து எதிர்க் கருத்துக்களுடன் வாதாடுகிறார்கள். இந்த குடும்பம் இருந்தால் தான் இங்கு விளையாட்டு இருந்தால் அடுத்து... எனப் பாடகர் வேல் முருகன் சாந்தமாகப் பேச அவருக்கு எதிர்க்கேள்வி விடுத்தார் அனிதா சம்பத். அன்பு எல்லாரும் ஒரு தாய் பிள்ளைனென்லாம் சொன்னீங்கள்ள அப்பறம் ஏன் எல்லோரும் குத்தும்போது அழுதீங்க.. என்கிறார்.

அடுத்த பேசும் ரியோ ராஜ் இந்த போட்டிக் களத்துக்குள்ள எல்லோரும் நம்முடைய தேவைக்காக வந்திருக்கிறோம் என்கிறார்.புரலி பேசறது அழகுங்க.. ஒருவருடைய உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும் போதுதான் அந்த புரளி அசிங்கம்.. அந்த புரலியைத் தான் வெளிலே இருக்கறவங்க செருப்பால அடிக்கிறாங்க என்று ஆவேசமாகப் பல்லைக் கடித்துக்கொண்டு பேசினார் அறந்தாங்கி நிஷா. இந்த பேச்சுக்கெல்லாம் தீர்வு என்ன? யாரை நினைத்து நிஷா அப்படிப் பேசினார் என்பதெல்லாம் இன்று இரவில் வெட்ட வெளிச்சமாகும்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை