புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ..

Advertisement

ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. தற்போது புதிய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். மாதவ் மீடியா நிறுவனம் 'ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரித்து வருகிறது. ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மணப் பெண்ணே' மற்றும் சசி - ஹரிஷ் கல்யாண் இணையும் படம் ஆகியவை ஆகும்.

தற்போது இப்பட நிறுவனம் தங்களுடைய தயாரிப்பில் 5வது பிரம்மாண்ட தயாரிப்பாக பிரபல நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது.

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சிம்பு, இந்தப் படத்துக்காக உடல் இளைத்து முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து தயாராகியுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந்தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன். இதில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்காக அனைவரும் திண்டுக்கல் சென்றுள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி எனத் தொழில் நுட்பக் குழுவினரும் இந்தப் படத்துக்கு வலுவாக அமைந்திருப்பதால் வெற்றி என்பது உறுதியாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு முடிவு செய்து மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது. இப்படத்திற்காகச் சிம்பு தனது உடற்தோற்றத்தை கடுமையான உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார். தனது புதிய தோற்றத்தை தற்போது அவரே வெளியிட்ட வீடியோவில் வெளிப்படுத்தி இருக்கிறார். சிலம்பாட்ட சண்டைப் பயிற்சி, கடின உடற்பயிற்சிகளுடன் கூடிய வீடியோவை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>