போட்டிகள் கலந்த ஆனந்த வீடு ஆட்டம்.. பாட்டம் .. கும்மாளம் அடித்த ஹவுஸ் மெட்ஸ்..

Bigg Boss Day 18 Review

by Mahadevan CM, Oct 23, 2020, 10:59 AM IST

"டண்டனக்கா" பாடல் ஒலிக்க அதிகபட்சம் எல்லாருமே ஆடினாங்க. கேப்டன் ரியோ ஓவர்டைம் வேலை பார்க்கறாரு. காலை பாடலுக்கு ஆட எல்லாரையும் எழுப்பி விடற வேலையெல்லாம் பார்க்கறாரு. அதனால இன்னிக்கு ஆட்டத்துல நல்ல கூட்டம்.

கிச்சன்ல அர்ச்சனா, சுரேஷ், பாலா வேலை பார்க்கறாங்க. பாலா நேத்து திட்டினதால கோவமா இருக்காராம். பக்கத்துல இருந்த அர்ச்சனா 2 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி, சார் போய் பாலாவை கட்டி பிடிச்சு சரி பண்ணுங்கனு சொல்லிட்டு இருந்தாங்க. தானா சரியாகும்னு சுரேஷ் சொல்லிட்டு இருந்தாரு. அர்ச்சனா ரொம்பவும் வற்புறுத்தியும் சுரேஷ் விலகி போய்ட்டாரு. நேத்தும் அவங்க தான் சாரி கேக்கச் சொன்னது நினைவிருக்கலாம். இன்னிக்கு இந்த இடம். அதோட இல்லாம, நேத்து டைனிங் டேபிள்ல ரியோவுக்கும், ரம்யாவுக்கும் ஒரு வாக்குவாதம் வரும் போது, அங்கேயும் எல்லாரையும் சமாதானபடுத்தினாங்க.

இது நல்ல விஷயமா இருந்தாலும், ஆரி அட்வைஸ் பண்ணி வில்லனானா மாதிரி, அர்ச்சனாவுக்கும் நடக்க வாய்ப்பிருக்கு. நாமினேஷன்ல இந்த காரணம் சொல்லப்படலாம். அடுத்து சுரேஷ் சம்யுக்தா தனி உரையாடல். அதாகப்பட்டது நேத்து சுரேஷ் தவறு செஞ்சு, அதை ஒத்துகிட்ட பிறகும் சனம் ரொம்பவும் கத்திட்டாங்கனு சம்மு கிட்ட சொல்லிட்டு இருந்தார். மோசமான வார்த்தைகள் பயன்படுத்தினாங்க. அங்க துணி இருந்ததால யாருனு எனக்கும் தெரியல, அவங்களுக்கும் தெரியலனு விளக்கம் கொடுத்துட்டு இருந்தார்.

இந்த சீசனோட பட்டிமன்றம். பிக்பாஸ் வீடு "ஆனந்தம் விளையாடும் வீடா"? இல்லை " போட்டிக்களமா"? என்ற தலைப்பில் இரு அணிகளாகப் பிரிந்து பேச வேண்டும். அர்ச்சனா இந்த பட்டிமன்றத்தின் நடுவர். முதல்ல பேச வந்த சோம், ஆஜித் வச்சுருந்த எவிக்சன் ப்ரீ பாஸ் பாஸ் பத்தி பேசிட்டு போனாரு. அதே பாயிண்ட்டை அத்தனை பேரும் பிடிச்சிட்டாங்க. எல்லாரும் அதையே பேசினாங்க.

பாலா பேசினது நல்லாருந்தது. ஆனா வயசுல பெரியவர்னு கூட பார்க்காம நேத்து தாத்தாவை திட்டினீங்களே, இதெல்லாம் குடும்பமானு கேட்டாரு. அடேய், நீயும் தாண்டா திட்டினனு நமக்கு தோணின கேள்வியை அடுத்து வந்த ரமேஷ் கேட்டாரு.

ஆஜித்துக்கு ரம்யா விட்டு கொடுத்தாங்கனு ஒரு பாயிண்ட். அதுக்கு ரம்யாவும், அனிதாவும் மறுத்து பேசினாங்க. கண்டண்ட், ப்ரொமோ, விளம்பரம் இதைத் தவிர அனிதாவால எதையும் யோசிக்க முடியல. பட்டிமன்ற பேச்சுக்காக வைக்கப்பட்ட மேடை அனிதா உயரம் இருந்தது. அதுல ஏறி நின்னா அவங்க தெரிய மாட்டாங்க. அதுக்காக நிஷாவோட ஹை ஹீல்ஸ் செருப்பை கடன் வாங்கி போட்டு பேசிட்டு போனாங்க. வெளிய இருந்து பார்க்கறவங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையானு தோணும். ஆனா அனிதா மாதிரி தாழ்வு மனப்பான்மையில இருக்கறவங்களுக்கு, இந்த சின்ன பிரச்சினை கூட அவங்களுக்கு பெரிய காயத்தை ஏற்படுத்தக் கூடியது. மத்தவங்களோட பரிகாசத்துக்கு ஆளாக ஒரு காரணமா இருக்கும்.

அத்தனை பேரும் ஆஜித்தை இழுத்து பேசினதுக்கு, கண்டிப்பா அவன் ஒரு நாள் வெடிக்கப் போறான். நோட் திஸ் பாயிண்ட். இறுதியா பேசின நிஷாவோட பேச்சு அட்டகாசம். அவரோட அனுபவம் அப்படி. ரொம்ப அழகா பாயிண்ட் எடுத்து வச்சு பேசினாங்க.

இறுதியா ஆனந்தமும் போட்டியும் நிறைந்த வீடுனு தீர்ப்பு சொன்னாங்க அர்ச்சனா.

எல்லார் வீட்டுலேயும் இருக்கும் பிடிவாதக் குழந்தை தான் பாலானு அர்ச்சனா சொன்னதை அவர் ரசிக்கலை. அப்பவே அர்ச்சனாவோட விவாதத்துக்கு போனாரு பாலா. ஒரு வேளை அவரோட குழந்தைப் பருவம் நினைவுக்கு வரதை தவிர்க்கச் சொல்லியிருக்கலாம்.

தன் வார்த்தைக்கு மதிப்பு இருக்கு, தனக்குனொரு முக்கியத்துவம் இருக்குனு பாலாவுக்கு நல்லா தெரியுது. ஆனா அதையே தனக்கு அட்வாண்டேஜா எடுத்துட்டு எதை வேணா, எங்க வேணா பேசலாம்னு நினைச்சுக்கறாரு பாலா. அதே மாதிரி நிறைய மோசமான வார்த்தைகள் பேசறாருனும் கம்ப்ளையிண்ட் இருக்கு. வயசுல பெரியவங்களுக்கு எந்த விதத்திலும் மரியாதை கொடுக்காத இன்றைய இளைஞர்களோட பிரதிபலிப்பா பாலா இருக்காரோனு தான் தோணுது.

ஹவுஸ்மேட்ஸ் நடுவுலேயும் சனம்க்கு பெருசா ஆதரவில்லைனு தான் தோணுது. அல்லது அது பற்றிய உரையாடல்கள் நமக்குக் காட்டலை. சனம் கலகம் செய்யறவங்களா பார்ம் ஆகிட்டதால, மத்தவங்களும் ஒதுங்கி போய்ட்டாங்களோனு தோணுது.

லக்சரி பட்ஜெட்பாயிணட்ஸ்ல எவ்வளவு டிடெக்ட் செய்யனும்னு ஹவுஸ்மேட்ஸ் முடிவெடுக்க சொல்றாரு பிக்பாஸ். இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள்ல எப்பவும் யாராவது ஒருத்தரைப் போட்டு தள்ளிருவாங்க. ஆனா இந்த முறை வித்தியாசமா நடந்தது. எந்த இடத்துல தப்பு செஞ்சோம்னு ஒவ்வொருத்தரும் அவங்களே சொன்னது நல்ல விஷயம். இந்த சின்ன சின்ன மாற்றங்களை முன்னெடுக்கறது அர்ச்சனா தான். நேத்தும் நாடா? காடா? டாஸ்க்ல ரியோ வந்த போது தான் 100% செயல்படலைனு ஒத்துகிட்டு அதுக்காக 10 பாயிண்ட் குறைச்சாங்க. இதை அப்படியே பிக்கப் செஞ்ச ரியோ, யாரையும் காயப்படுத்தாம மொத்தமா 70 பாயிண்ட் குறைச்சாரு.

வந்து கொஞ்ச நாள் தான் ஆச்சுனாலும் அர்ச்சனாவோட பங்கு வியக்க வைக்குது. எல்லாரையும் கண்ட்ரோல் செய்யக் கூடியவங்களா இருக்காங்க. அவங்க சொல்றதை எல்லாரும் ஏத்துக்கறாங்க. அதே சமயம் அவங்களோட அதிகாரத்தை இதுவரைக்கும் தவறா பயன்படுத்தினதா தெரியல. டாஸ்க்குல ஜெயிச்சு கேப்டன் ஆகறது அவங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா அடுத்து இனிமே யார் கேப்டன் ஆனாலும் அர்ச்சனாவோட ஒத்துழைப்பு வேணும்.

நேத்து ஒரு பெரிய பிரச்சினை நடந்ததுக்குனான அறிகுறியே வீட்ல இல்ல. எல்லாரும் சகஜமா இருந்தாங்க. முக்கியமா சனம் சீன்லேயே இல்லை. சுரேஷ் சாரி சொன்னதுக்கு அப்புறம் அவங்க எப்படி ரியாக்ட் செஞ்சாங்க, அந்த பிரச்சினையை விட்டு எப்படி வெளிய வந்தாங்கனு காட்டவே இல்லை. இந்த வாரம் நாமினேஷன்ல இல்லாத காரணத்தால சனம் மேல போகஸ் இல்லை போலருக்கு.

சாப்பிடும் போது வீட்ல இருக்கற எல்லாரும்டைனிங் டேபிள்ல வந்து உக்காரனும்னு ரியோ சொல்லிட்டே இருந்திருக்கார். நேத்து எல்லாரும் உக்காந்திருக்க ரம்யா, ஷிவானி, ஆஜித் மூணு பேரும் கிச்சன் டேபிள்ல உக்காந்து சாப்டுட்டு இருந்தாங்க. அவங்களை டைனிங் டேபிளுக்கு கூப்பிட்ட ரியோ, ஒரு விளக்கம் கொடுக்க, அதுக்கு ரம்யா திரும்ப பேச அது அப்படியே ஒரு விவாதமா மாறிடுது. குரூப்பிசம்னு எதுவும் இல்லைனு ப்ரூப் செய்ய சாப்பிடும் போது எல்லாரும் உக்காரலாம்ங்கறது ரியோவோட பாயிண்ட். குரூப்பிசம் இருக்குனு நீங்க தான் சொல்றிங்கனு ரம்யா சொன்னதும், வழக்கம் போல உடனே ஹர்ட் ஆகறாரு ரியோ.

ரியோவுக்கும், ரம்யாவுக்குமான விரிசல் அதிகமாகிட்டே போகுது. இது யாருக்கு அனுகூலமா இருக்கும்னு தெரியல.

அடுத்து மியூசிக்கல் சேர் விளையாட்டு. வேல்ஸ் பாட்டு பாட, மத்தவங்க விளையாடனும். சேரை சுத்தறதுக்கு பதிலா கையில ஒரு பெட்டியை கொடுத்து அதை பாஸ் பண்ணச் சொன்னாங்க. பாட்டு நிக்கும் போது பெட்டி யார் கையில இருக்கோ அவங்க அவுட். கூடவே வெளிய போறவங்க யாராவது ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து ஜாலியா ஒரு டாஸ்க் செய்ய வைக்கனும். சனம், பாலாவைத் தேர்ந்தெடுத்து கலாய்ச்சது செம்ம. சம்யுக்தாவுக்கு மீசை வரைஞ்சு விட்டாங்க. இருந்தாலும் அவங்க அழகா இருந்தாங்க... ஆரிக்கு நைட்டியை போட்டு விட்டு மலை மலை பாட்டுக்கு ஆட வச்சாங்க. சுரேஷ் காஞ்சனாவா ஒரு சின்ன பர்பாமன்ஸ் கொடுத்தாரு.

நேற்றைய நாள் சந்தோஷமா முடிஞ்சுருக்கு. இன்னிக்கு இந்த வாரத்தோட பேட் பர்பாமர், வொர்ஸ்ட் பர்பாமர் தேர்ந்தெடுக்கனும்.


இன்னிக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை