அனிதாவை கலாய்த்தாரா கமல்ஹாசன்.. பிக்பாஸ் இன்றைய பரபரப்பு..

Kamal Advice To Anitha in Bigboss 4

by Chandru, Oct 25, 2020, 15:40 PM IST

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திக் கொண்டிருக்கிறது. மோதல், காமெடி, கலாய்ப்பது, கமென்ட் என பல வித அம்சங்களும் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுகிறது. ஒன்று முதல் 16 வரை இடத்துக்கான ஒட்டுபோடுவது. அரகர் கூட்டம், ராஜவம்சம் மோதல்கள் நடந்து முடிந்த நிலையில் கமல்ஹாசன் இன்று ஒரு விஷயத்தோடு போட்டியாளர்களை சந்திக்கிறார்.

ஒரு போட்டியாளரை, நீங்க அந்த கார்னருக்கு போயிடுங்க.. என்றபடி, அனிதாவுக்கு ஸ்பேஸ் கொடுங்க நீங்க உட்காருங்க அனிதா.. ஸ்பேசே விடாம பேசறது நீங்காதான்னு எனக்கு தோணுது. ஸ்பேஸ் இல்லன்னு சொல்றவங்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, இடம் கொடுங்க ஆன ரொம்ப கொடுத்திடாதீங்க. நீங்க ரொம்ப கவலையும் படாதீங்க என்கிறார் கமல். உடனே கமல் தன்னை கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு, சார் நீங்க என்னய என்ன சொன்னாலும் என்னை கலாய்க்கற மாதிரியே இருக்கு.. என அனிதா சொல்ல அதைக் கேட்டு கமல் அசந்து போய் கை காட்டியபடி அடப் பாவி இப்படி.. என்றபடி ஆடியன்ஸை பார்க்கிறார். அத்துடன் இன்றைய புரோமா வீடியோ முடிகிறது. அடுத்த கமல் என்ன சொல்லப்போகிறார், யாரை திட்டப்போகிறார், யாருக்கு பாராட்டு கிடைக்கப்போகிறது எவிக்‌ஷன் பற்றி க்ளு தருவரா என்பதெல்லாம் இரவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியும்.

என்னதான் கமல் பேசினாலும் இன்னும் அரசியல் நெடி குறைவாகவே இருக்கிறது என ரசிகர்கள் மெசேஜ் பகிர்கின்றனர். அவர்களுக்கு கமல் என்ன சொல்லபோகிறார் என்பது போகப்போக தெரியும்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை