மனம் கவர்ந்தவர் யார்? மனதார வெறுப்பவர் யார்? ரெண்டு வகையான கிரீடம் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 22

Advertisement

இந்த சீசன்ல முதல் ரெண்டு வாரம் ஏனோ தானோனு இருந்த கமல் சார், இந்த ரெண்டு நாளும் தூள் கிளப்பிட்டாரு. என்ன டைமிங், என்ன கவுண்ட்டர். அடேங்கப்பா.... அப்படியே ரசிச்சு பார்த்துட்டே இருந்தேன். அதே மாதிரி இந்த வாரம் வலிந்து திணித்த சோஷியல் மெசேஜ், அரசியல் பன்ச் எதுவும் இல்லை. கொஞ்சம் ஓவர்டோசா போனதை சொல்லிருப்பாங்கனு நினைக்கிறேன். தேவையான இடத்துல மட்டும் ஷார்ப்பா சில கமெண்ட்ஸ் அடிச்சாரு. மத்த படி நேத்து ப்ரோகிராம்லாம் பார்த்து ரசிக்கனும். அந்த அழகை எழுத்துல எந்த அளவுக்குக் கொண்டு வர முடியும்னு தெரியலை. முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்யறேன்.

நிகழ்ச்சி ஆரம்பிச்ச போதே ஒரு சின்ன ரீகேப் போட்டாங்க. அதுல அனிதாவுக்கு ராங் டிக் கொடுத்ததை மட்டும் காட்டினாங்க. அவ்வளவு தாங்க. அன்னிக்கு காலையில் ஆறு மணி இருக்கும், என் பொண்டாட்டி கையில காப்பியோட வந்து எழுப்பினானு ரோபோ சங்கர் ரிப்பீட்ல சொல்றா மாதிரி புலம்பி தீர்த்துட்டாங்க அனிதா. யாராவது ஒருத்தர் தன்னை பத்தி எதையாவது சொன்னா, உடனே அந்த கருத்தை மண்டைக்குள்ள ஏத்திட்டு, நான் அப்படி இல்ல, நான் அப்படி இல்லனு பார்க்கறவங்க கிட்ட எல்லாம் விளக்கம் கொடுக்கறதை பழக்கமா வச்சுருக்காங்க அனிதா. முடியல...

நேத்து கமல் சார் சொன்னா மாதிரி, அது அவங்களோட கருத்து. அது உண்மையில்லை. ஆனா அதை அனிதா எப்பவும் புரிஞ்சுக்க போறதில்லை. எல்லாரோட கருத்துக்கும் நாம முக்கியத்துவம் கொடுக்கனும்னு அவசியம் இல்லை. அதுவும் இந்த மாதிரி ஒரு கேம் ஷோல அது தேவையே இல்லை. நேற்றைய நிகழ்ச்சில ஒரு கேம் நடந்தது. அதுல அனிதாவுக்கு அரக்கர் கிரீடம் கொடுத்தாங்க கேப்பி. அனிதா கிட்ட எப்ப பேசனும்னு தெரியல, பயமா இருக்குனு சொல்லிட்டாங்க. அது அப்பவே முடிஞ்சுருச்சு. ஆனா நிகழ்ச்சி முடிஞ்ச உடனே கேப்பியை கூப்பிட்டு, ஏன் அப்படி சொன்னான்னு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தாங்க.

இத்தனைக்கும் கமல் சார் அழுத்தி அழுத்தி ஸ்பேஸ்னு சொன்னது எல்லாம் அனிதாவுக்கு தான். அரசன், அரக்கன் பத்தி பேசும் போதும், இது என் இடம்னு தமிழ்ல சொல்லிட்டு, இதான் ஸ்பேஸ்னு அனிதா பேர் சொல்லி சொன்னாரு. அப்பவும் ஒன்னும் புரியலை அனிதாவுக்கு. அனிதா மட்டும் இல்லை ஹவுஸ்மேட்ஸ் பலருக்கும் கமல் சார் மறைமுகமா சொல்லறது புரியலை.

அகத்திற்குள் அகம்.

உள்ள வரும் போதே செம்ம ஜாலி மூட்ல இருந்தார் கமல் சார். என்னய்யா ட்ரெஸ் இதுனு பாலாவை கலாய்ச்சாரு. முதல்ல சொன்னா மாதிரி ஆர்ம்ஸ் தெரியற ட்ரெஸ் மட்டும் தான் பாலா போடறான்(ர்). ட்ரெஸ் விஷயத்துல கமலுக்கே டஃப் தரது பாலா தான்.

சுரேஷ், வேல்ஸை இடம்மாத்தி உக்கார சொன்ன போது, பாருங்க அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்ல, அதான் அவங்க பிரச்சனைனு டைமிங் அடிச்சதுல ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் எல்லாமே ஜாலி பட்டாசு தான்.

அனிதா கிட்ட பேசிட்டு இருக்கும்போதே, "அவங்களை ஏன் கார்னர்ல உக்கார வச்சேன்னு நினைக்கறிங்க, ஏன்னா அவங்க இந்த வீட்ல கார்னர் செய்யப்படறதா நினைக்கறாங்க" னு அடுத்த டாபிக் மாறினது தூள் ரகம்.

இந்த வீட்ல யார் யாரெல்லாம் கார்னர் செய்யப்படுவதா நினைக்கறிங்கனு கேட்டதுக்கு மானா வாரியா கை தூக்கினாங்க.சுரேஷ், வேல்ஸ், அனிதா, ஆரி எல்லாரும் கை தூக்கி விளக்கம் கொடுத்தாங்க.

அனிதா கிட்ட பேசிட்டு இருக்கும் போதே ரம்யாவை உதாரணம் காட்டினார் கமல் சார். ரம்யா வந்து குழந்தைகள் மருத்துவர் மாதிரி, ஒரு பக்கம் சிரிச்சுட்டே இருந்து, இன்னொரு பக்கம் ஊசி குத்திருவாங்கனு சொன்னது அசத்தல் ரகம்.

போன வாரம் அட்வைஸ் பத்தி கமல் சார் பேசினது தான் இந்த வாரம் தன்னோட நிலைமைக்கு காரணம்னு உறுதியா நம்பறாரு ஆரி. இன்னிக்கும் அதே டாபிக். ஆரியோட நேர்மையை பாராட்டி பேசி அவருக்கு பூஸ்ட் கொடுத்தாரு. அதுக்காக காந்தி வரைக்கும் போகனுமா சார். நேர்மையா இருங்க. நீங்க நேர்மையா இருந்ததுக்கு பரிசா நீங்க சேவ் ஆகிட்டீங்கனு சொல்லி ஆரி வயத்துல பாலை வார்த்தாரு.

பிரேக்ல ஆரியும் பாலாவும் பேசிக்கறாங்க. ஆரிக்கு அட்வைஸ்னு டேக் கொடுத்தது நான் தான்னு பாலா சொல்றாரு. ரியோவை நான் தான் கேப்டனாக்கினேன்னு சொல்றா மாதிரி இதுவும் போல. வெயிட் பண்ணி பார்ப்போம். ஆரி அதை உடனே நம்பினது அதை விட ஆச்சரியம்.

பிரேக்குக்கு அப்புறம் சனம் பேச ஆரம்பிச்சாங்க. இவங்க பேசறதை கேட்டாலே டயர்ட் ஆன பீலிங் வருது. எல்லாரும் என்னை கார்னர் செய்யறாங்க, என்னை முதல்ல வெளிய அனுப்பனும்னு ஓவர்டைம் வேலை பார்க்கறாங்கனு ஓவர் புலம்பல். "நீங்க வெளிய போனா நல்லதுனு நினைக்கறாங்க போல" னு கமல் சாரே ஒரு கட்டத்துல சொல்லிட்டாரு.

ஆரி சேவ்னு சொல்லும்போது நேர்மை ரெபரன்ஸ்க்கு நாயகன் படத்தைப் பத்தி சொன்னாரு. அப்ப ரம்யா ரொம்ப டீப்பா யோசிச்சதை க்ளோசப்ல காட்டினாங்க. பொண்ணு அவ்வளவு உன்னிப்பா கவனிக்குது. இதே மாதிரி மத்தவங்களும் கவனிச்சா கமல் சாருக்கு வேலை மிச்சம். முக்கியமா அனிதா, சனம், ஆரி மூணு பேரும்.

அடுத்து எவிக்சனுக்கு வருவாருனு பார்த்தா கேம் விளையாட போய்ட்டாரு. மனம் கவர்ந்தவர் யார்? மனதார வெறுப்பவர் யார்? ரெண்டுக்கும் ரெண்டு வகையான கிரீடம். ஒன்னு அரச கிரீடம், இன்னொன்னு அரக்க கிரீடம்.

சுரேஷ், வேல்ஸ், சனம், ரமேஷ், நிஷா, ரியோ எல்லாரும் பாலாக்கு அரக்கர் கிரீடம் கொடுத்தாங்க. இதுல சுரேஷும், சனமும் பாசிட்டிவா அரக்க கிரீடம் கொடுத்தாங்க. ஆரியும், கேப்பியும் அரச கிரீடம் கொடுத்தாங்க. வேல்ஸ் பாலாஜிக்கு கிரீடம் கொடுக்கும் போது, "வாடா மலர்னு" சொல்லி இது அந்த "வாடா" இல்லனு டைமிங்ல பாலாஜியை கலாய்ச்சது பட்டாசு.

அதுவும் ஆரி சொன்ன ரீசன். ஷப்பா.... இவனை ஈசியா ஏமாத்தலாம் போலருக்குடா, இவன் எங்கெங்க போறானோ ஆள் போடுங்கடா மொமண்ட். 10 நிமிஷம் முன்னாடி பிரேக்ல சொன்ன விஷயத்துக்கு பாலாவை தூக்கி வச்சு கொண்டாடறாரு ஆரி. இது எங்க போய் முடிய போகுதுனு பார்ப்போம்.

அதுக்கு அடுத்து சுரேஷுக்கு அதிகமா கிடைச்சது. சம்மு, அர்ச்சனா, சோம், ரம்யா எல்லாரும் பாசிட்டிவா சொல்லி கொடுத்தாங்க.

ரமேஷ், நிஷா, சோம் மூணு பேரும் அர்ச்சனாவுக்கு அரச கிரீடம் கொடுத்தாங்க. ஆரி மட்டும் அரக்க கிரீடம் கொடுத்தாரு. அதுக்கு அவர் சொன்ன ரீசன் பக்கா....

அனிதாவும், ஆஜித்தும் ரியோவுக்கு அரச கிரீடம் சூட்டி குரூப் மாறுவதற்கு அஸ்திவாரம் போட்டுட்டாங்க போலருக்கு.ஷிவானிக்கு அரக்கர் கிரீடம் கொடுத்து அனிதா சொன்ன ரீசன், மென்மையா இருந்தது.

அதே சமயம் அனிதாவுக்கு அரக்கர் கிரீடம் கொடுத்து கமல் சார் கிட்ட "குட்" வாங்கினாங்க ஷிவானி. இதெல்லாம் தான் கவனிக்க வேண்டிய சின்ன சின்ன மொமண்ட்.

சம்முவுக்கு அரச கிரீடம் கொடுத்து, எனக்கு அம்ம இல்லாத குறையை தீர்த்து வைக்கறதா சொல்லி சம்முவுக்கு அர கிரீடம் கொடுத்தாங்க ஷிவானி. "அழகான அம்மா". அப்புறம் சம்மு நேத்தும் அழகா இருந்தாங்க்ச்னு தனியா வேற சொல்லனுமா?

கடைசியா பாலா வந்து ரியோவுக்கு அரச கிரீடம் கொடுத்து சொன்ன ரீசன் தான் ஹைலைட். குரூப்பிஸம் செய்யறதை மறைமுகமா குத்திக்காட்டி, அதுக்கு கிரீடம் கொடித்ததெல்லாம் வேற லெவல் வில்லத்தனம். பாலாஜி எவ்வளவு உன்னிப்பா எல்லாரையும் கவனிக்கறான்னு இந்த நிகழ்வு சொல்லும். இது ஹவுஸ்மேட்ஸ் எத்தனை பேருக்கு புரிஞ்சுதுனு தெரியல. ஆனா தெளிவா புரிஞ்சுகிட்ட கமல் சார், குத்தாம வைங்கனு டைமிங் கமெண்ட் அடிக்க. குத்திட்டாங்க சார்னு கவுன்ட்டர் கொடுத்தாரு ரியோ...

அடுத்து எவிக்சன். ஆஜித் பேரை காமிச்ச உடனே பேயறைஞ்ச ரியாக்சன் கொடுத்தான். எவிக்சன் ப்ரீ பாஸ் வச்சு உள்ளேயே இருந்துட்டான். அனிதா, சுரேஷ் ரெண்டு பேரும் சேவ்.

அடுத்து இந்த வார கேப்டன் தேர்வு செய்யும் நேரம். ஹவுஸ்மேட்ஸ் நடுவுல வோட்டிங் முறையில அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டது கொஞ்சம் ஏமாற்றம் தான். பாலா முகத்துல அப்பட்டமா தெரிஞ்சுது...

இன்னிக்கு 4 மணி நேரம் ப்ரோகிராம்னு சொல்லிட்டு, நான் தப்பிச்சேன்னு காலை பிடிச்சுட்டே போனாரு கமல் சார். ஆனா நான் மாட்டிகிட்டேனே கமல் சார்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>