பிக்பாஸ் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் போட்டியும் அத்துடன் பொறமையும் அதிகரித்து வருகிறது. நாடா இல்லை காடா விளையாட்டு, எவிக்ஷன் நம்பர் கேம், பட்டிமன்றம் என பலவிதங்களில் அவர்களுக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அவர்களுக்கிடையே மோதல்கள் தான் வெடிக்கிறது.
நேற்று பிடிக்காதவர்களின் படங்களை நெருப்பில் போட்டு எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதுவொரு திகில் அனுபவமாகவே போட்டியாளர்களும் பார்வையாளர்களும் உணர்ந்தனர். தங்கள் படத்தை தங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவர் எரிக்கிறார் என்றால் அந்த படத்தில் உள்ளவர்களின் மனநிலை சென்ட்டிமென்ட்டாக என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது என்று பலரும் பேசினர். பிக்பாஸில் மோதல்கள் இருக்கலாம், காதல் இருக்கலாம். நகைச்சுவை இருக்கலாம், அழுகை கூட இருக்கலாம் ஆனால் மனதை உடைக்கும் இதுபோன்ற நெருப்பு சென்டிமென்ட் பலரால் ஏற்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.
இன்றைய புரோமோ அனிதாவின் அழுகையும் கதறலுமாக இருக்கிறது. பிக்பாஸ் அறைக்குள் அவரது உணர்வுகளை அவர் கதறி அழுதபடி வெளிப்படுத்தினார். தனியாக இருப்பது போல் ஒரு உணர்வு இருக்கிறது, பிரச்னை வந்தால் கூட என் சைடு யாரும் பெரிசா நிற்காத மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கிறது. பிடித்தவர்கள் சொல்வதை எடுத்துக்கொள்வதா? இல்லை நாம் நினைத்தை எடுத்துக்கொள்வதா? என்ற ஒரு போராட்டம். மனதளவில் ஒரு நெகடிவ் ஃபீல் இருக்கிறது. எங்கிட்டதான் நிறைய மிஷ்டேக் என்ற எண்ணம் என்றபடி கதறி அழுகிறார் அனிதா. அனிதாவின் அழுகைக்கு பிக்பாஸ் என்ன அறுதல் சொல்லப்போகிறார் என்பது இரவில் தெரியும்.