முதலை கண்ணீர் வடிக்கும் பிக் பாஸ் நடிகை..! ஏம்மா இப்படி பச்சயா நடிக்கிற.. அனிதாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்..

by Logeswari, Oct 28, 2020, 10:39 AM IST

சந்தோஷமாக இருந்த பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டை, சச்சரவு, பொறாமை ஆகியவை பெரும் வடிவில் உருவாகி வருகின்றது.இது போன்ற காட்சிகளுக்கு வெகு நாள்களாகக் காத்து இருந்த மக்களுக்கு பிக் பாஸ் வீட்டில் அனைவரும் சண்டை போடுகின்றதைப் பார்க்கும் பொழுது குதூகலமாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று விஜய தசமி கொண்டாட்டத்தை பிக் பாஸ் போட்டியாளர்கள் மிக விமர்சியாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சி முழுவதையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கி வந்தார் அனிதா.

இந்நிலையில் அனிதா சுமங்கலி என்ற தலைப்பை பற்றிப் பேசும் பொழுது மொட்டை சுரேஷ்யை சுட்டிக்காட்டியதால் தாத்தாவிற்கு அனிதாவின் மேல் பயங்கர கோவம். அனிதா மன்னிப்பு கேட்டும் தாத்தா சமாதானம் ஆகவில்லை. அனிதா மக்கள் என்ன நினைப்பார்கள், கணவன் என்ன நினைப்பான் என்பதை ஆழமாக யோசித்து போட்டியைப் பாதுகாப்பாக விளையாடுகிறார் என்பது யாவரும் அறிந்ததே… மற்ற ஹவுஸ் மெட்சும் தாத்தாவின் பக்கம் பேசியதால் அனிதா தனிமையாக உணர்ந்தார். இதனால் மிகவும் மனம் உடைந்து போன அனிதா நேற்று பாத்ரூமில் கதறக் கதற மிகச் சத்தமாக அழுதார். மற்ற ஹவுஸ் மெட்ஸ் பதறிப் போய் ஓடி வந்து அனிதாவைச் சமாதானம் செய்தனர்.

பிறகு பிக் பாஸ் அனிதாவைத் தனியாகக் கூப்பிட்டு அனிதாவிற்கு ஆறுதல் கூறினார். அப்பொழுது உங்க கணவர் உங்களை மிகவும் மிஸ் செய்கிறார் என்று சொன்னவுடன் மறுபடியும் கதறக் கதற அழுதார் அனிதா. இதைக் குறித்து நெட்டிசன்ஸ் நீ அழுது சீன் போட்டு மக்களின் ஆதரவைச் சம்பாதித்து விடலாம் என்று மட்டும் என்னாதே.. அனிதாவின் கண்ணீரில் உண்மை இல்லை.. குள்ளச்சி முழுவதும் விஷம்.. என்று தாறுமாறாக அனிதாவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை