பிரபல நடிகைக்கு ஆபத்து.. நடிகை மேலாளர் வீட்டில் போதை மருந்து சிக்கியது..

by Chandru, Oct 28, 2020, 10:34 AM IST

பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா அல்லது அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார்களா என்பது குறித்து பின்னணியில் உள்ள உண்மை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்குப் பின்னர் சங்கு தொடர்போல பல்வேறு விவகாரங்கள் நீண்டுகொண்டிருக்கிறது.

சுஷாந்த்துக்கு அதிக சக்தி உள்ள போது மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷாந்த் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் கூறப்பட்டது. அவரிடம் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். முதலில் தனக்கு இதில் தொடர்பு இல்லை என்று மறுத்தவர் தொடர் விச்சரணைக்கு பிறகு பல்வேறு தகவல்கள் வெளியிட்டார்.

போதை மருந்து விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் போன்றவர்களின் பெயர்களை வெளியிட்டார். அவர்களையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். சுஷாந்த் வழக்கு ஒரு போதை மருந்து விசாரணையாக மாறியது.
நடிகை ரியா, தான் ஒருபோதும் போதைப்பொருளை எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அவரது வேண்டுகோளின்படி சுஷாந்திற்கு மட்டுமே வழங்கினார் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

சமீபத்தில் நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது மேலாளர் கரிஷ்மாவிடம் அதிகாரிகள் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர். அத்துடன் அதன் பரபரப்பு அடங்கி இருந்தது. இந்நிலையில் திடீரென்று, தீபிகாவின் மேலாளர் கரிஷ்மாவின் வீட்டில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 1.8 கிராம் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டது, இதனால் மீண்டும் தீபிகா விசாரணையில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. தனது மேலாளருடன் இந்த புதிய சிக்கலை தீபிகா எவ்வாறு சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.தீபிகா அல்லது அவரது மேலாளர் கரிஷ்மாவை கைது செய்ய முயற்சி நடக்கிறதா என்று பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை