போதை வழக்கிருந்தாலும் கவலைப்படாத நடிகை.. ராப் பாடல் பாடி சவால்..

by Chandru, Oct 28, 2020, 10:25 AM IST

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கோலிவுட்டில் சூர்யாவுடன் என் ஜி கே, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கிறார்.மும்பையில் தங்கி இருக்கும் ரகுல் தற்போது சுஷாந்த் தொடர்பான போதை மருந்து வழக்கில் சிக்கி இருக்கிறார். சுஷாந்த் காதலி ரியா போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணையில் ஷர்த்தா கபூர், சாரா அலிகான் பெயருடன் ரகுல் பெயரையும் கூறி இருக்கிறார். அவரிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். முதலில் இந்த வழக்கு குறித்துப் பயந்த ரகுல் தன்னைபற்றி யாரும் ஊடகங்களில் செய்தி வெளியிடக் கூடாது என வழக்கு தொடர்ந்தார். தற்போது சகஜ நிலைக்குத் திருப்பி இருக்கிறார் ரகுல்.

பாலிவுட் சக நடிகர் அர்ஜூன் கபூர் ரகுலுக்கு இணைய தளத்தில் ஒரு சவால் விடுத்தார். அதில் மூச்சு விடாமல் தொடர்ச்சியாக ராப் பாடல் பாடக் கூறி இருந்தார். அந்த சவாலை ரகுல் ஏற்றுக் கொண்டு இந்தியில் ராப் பாடலை மூச்சு விடாமல் பாடி ஸ்டைலாக நடனம் ஆடியபடி வீடியோ வெளியிட்டு தனது சக நடிகர்களுக்கு அதே சவாலை விடுத்திருக்கிறார். ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் அணிந்து ராப் பாடல் பாடும் ரகுல் தனது தோற்றத்தை லாக் டவுனில் உடற் பயிற்சிகள் செய்து எவ்வளவு குறைத்திருக்கிறேன் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்2ம் பாகத்தில் நடிக்கும் ரகுல் தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை