நீதிமன்றமாய் மாறிய பிக் பாஸ் வீடு..! வாய்மை வென்றதா ?? இல்லையா??

by Mahadevan CM, Nov 4, 2020, 16:17 PM IST

இந்த சீசன் பிக்பாஸ் ஆரம்பத்துல யாருக்கும் பிடிக்கல. கண்டஸ்டண்ட்ஸ் பார்த்த போது முக்கிய பிரபலங்கள் யாரும் இல்லை. அது கூட ஒரு காரணமா இருக்கலாம். ஆனா இந்த சீசன் பிக்பாஸ் தான் முதல் வாரத்துல இருந்தே டாப் கியர்ல போகுதுனு என்னால சொல்ல முடியும். போன சீசன் பிக்பாஸ் கூட ஒப்பீடு செய்யக் கூடாது. போன சீசன் பிக்பாஸ்ல என்டர்டெய்ன்மெண்ட் வேல்யூ அதிகமா இருந்தது. கண்டஸ்டண்ட் கிட்ட எதுக்காக உள்ள வந்தாங்கனு அடிக்கடி ஞாபகப் படுத்திட்டு இருக்க வேணி இருந்தது. ஹவுஸ்மேட்ஸ் பார்க்க உள்ள வந்தவங்க எல்லாரும் சொன்ன வார்த்தை 'நீ, நீயா இரு". இதுக்கு என்ன அர்த்தம்னு சொன்னவங்களுக்கும் தெரியல, கேட்டவங்களுக்கும் தெரியாது.

ஆனா இந்த சீசன் கண்டஸ்டண்ட்ஸ் அப்படி கிடையாது. முதல் வாரத்துல இருந்து இங்க சொல்லப்படற வார்த்தைகள் என்னன்னு யோசிச்சு பாருங்க. கேம், கண்டண்ட், ப்ரோமோ இதெல்லாம் தான். கேம் விளையாடஅது ஓக்கே. ஆனா ப்ரோமோ, கண்டண்ட்,, ஸ்ட்ராட்டஜி வார்த்தைலாம் கண்டஸ்டண்ட் யூஸ் பண்ணி முதல் தடவையா நாம கேக்கறோம். அந்தளவு பிக்பாஸை ஸ்டடி பண்ணிட்டு வந்துருக்காங்க. ஆனா ஆடியன்ஸான நமக்கு தான் அது புரிய லேட்டாச்சு.

பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரைக்கும் சரி, தப்புனு எதுவும் கிடையாது. ரூல்ஸ்ல இருக்கானு மட்டும் தான் பார்க்கனும். அதை தான் பாலோ பண்ணனும். எவிக்சன் ப்ரீ பாஸ் டாஸ்க்ல சுரேஷோட ஸ்ட்ராட்டஜியை நான் உடபட பலரும் விமர்சிச்சோம். ஆனா அது அவரோட புத்திசாலித்தனம்னு அப்புறம் தான் புரிஞ்சுது. அந்த இடத்துல சுரேஷ் முதல்ல பேச ஆரம்பிச்ச போது பிக்பாஸ் தடுக்கவே இல்லை. ஏன்னா ரூல்ஸ் படி சுரேஷ் செஞ்சது தப்பில்லை. ஆனா அங்க இருக்கறவங்க தான் அதை தட்டி கேக்கனும். சுரேஷ் சொல்றதை ஏன் கேக்கனும்னு ஒரு குரல் கூட வரல. அப்ப சுரேஷுக்கு மட்டும் தான் கேம் அவேர்னெஸ் இருந்தது. பிக்பாஸ் கேம் பொறுத்தவரைக்கும் ரூல்ஸை மீறாம எந்த ஸ்ட்ராட்டஜியை வேணும்னாலும் நீங்க யூஸ் பண்ணலாம்.

அந்த டாஸ்க்ல முதல்ல குரல் கொடுத்தது ரம்யா தான். அவங்களுக்கு புரிஞ்சு பேச ஆரம்பிச்ச போது தான் நமக்குமே புரிஞ்சுது. அதே மாதிரி பிக்பாஸ் ஹவுஸ்ல நமக்கு பெரும்பானமை தேவை. நாம முன்வைக்கற கருத்துக்கு ஆதரவு வேணும். ப்ரீ பாஸ் டாஸ்க்ல ரம்யாவும், ஆஜித்தும் ஒன்னா சேர்ந்த போது சுரேஷ் வெளியேற்றப்பட்டதும் அப்படித்தான். அந்த ஒரு காரணம் தான் இங்க குரூப்பிசம் உருவாக காரணம். ரியோ, அர்ச்சனாவோட குரல் என்ன சொன்னாலும் கேட்கப்படுவது அதனால தான்.

முதன்முதல்ல அனிதா தான் "ப்ரோமோனு" ஒரு கீ வேர்ட் யூஸ் பண்ணினாங்க. 24 மணி நேரமும் வீட்டை சுத்தி கேமராவால கண்காணிக்க பட்டாலும், 1 மணி நேரம் தான் மக்களுக்கு போய் சேருது. அப்ப மக்கள் யாரை அதிகமா பார்க்கறாங்களோ அவங்க தான், இங்க அதிக நாள் இருக்க முடியும். அதில்லாம விஜய் டிவி தின்மும் 3 ப்ரோமோ போடுவாங்க. இதுல உங்க முகம் வரணும், மக்கள் உங்களை பத்தி பேசனும். அதுக்கு என்ன செய்யனும்னு யோசிச்சு வந்தவங்க தான் அனிதா. எந்த வாய்ப்பு கிடைச்சாலும் அதை யூஸ் பண்ணிக்கனும். ஒரு வாரம் முழுசா எதையாவது செஞ்சு உங்க முகம் மக்களுக்கு போய் சேர்ந்துருச்சுன்னா, வார இறுதில கமல் சார் வர எபிசோட்ல அவங்க தான் பேசுவாங்க. அப்படியான ஒரு விஷயத்தை தான் நேத்து சனம் செஞ்சாங்க. அர்ச்சனாவோட ஒரு பிரச்சினை. சமாதானம் பேச வந்த போது, நான் வீக்கெண்ட் பேசனும்னு சொல்லி திருப்பி அனுப்பறாங்க. நேத்து பேசிருந்தா இந்த பிரச்சினை நேத்தே முடிஞ்சுருக்கும். ஆனா முடிக்காம இருந்தா அது நீரு பூத்த நெருப்பா இந்த வாரம் முழுவதும் லைவ்ல இருக்கும்.

இது சனம் மட்டும் இல்லை. சுரேஷ், பாலா, அனிதா, அர்ச்சனா எல்லாருக்கும் தெரியுது. நீங்க நல்லா யோசிச்சு பார்த்தா இந்த நாலு வாரமும் செண்டர் ஆப் அட்ராக்‌ஷனா இருந்தது இவங்க நாலு பேர் தான். இந்த கேமை பத்தி சரியா புரிஞ்சு விளையாடறவங்களும் இவங்க தான். இதுல நல்லவங்க, கெட்டவங்க கிடையாது. சரி, தப்பு கிடையாது. ரூல்ஸ்ல இல்லேன்னா நீங்க எதையும் செய்யலாம். தன்னுடைய பந்துகளை சாம் கூடைல போட்டு அவங்களை கேப்டனாக்கின போது, பிக்பாஸ் எதுவுமே சொல்லலை. அது ஒரு ஸ்ட்ராட்டஜி. ஆனா கூட விளையாடின சோம் அதை தட்டி கேட்ருக்கனும். அவன் குரல் கொடுத்திருந்தா இது தப்புனு வீட்ல இருக்கறவங்களும் சொல்லிருப்பாங்க. அகைன் நான் மேல சொன்ன பெர்ம்பான்மை இங்க அப்ளை ஆகிருக்கும். ஆனா சோம் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாம போனது அவரோட ஏமாளித்தனம். ஆரி எதிர்த்து பேசறதும் அதனால தான். இப்போதைக்கு அவர் குரல் தனிக்குரலா ஒலிக்கலாம். ஆனா அவருக்கான ஆதரவு கிடைக்கும் போது, அவர் சொல்றதும் நடக்கும்.

சுரேஷ், சனம், அனிதா, பாலா இவங்களோட ஸ்ட்ராட்டஜியை பார்த்து இப்ப மத்த ஹவுஸ்மேட்ஸுக்கும் கேம் கான்ஷியஸ் வருது. ஆரியோட இப்போதைய அவுட் பர்ஸ்ட்டுக்கு காரணம், அவர் கையில எடுத்த ஸ்ட்ராட்டஜி. இங்க நீங்க ஒரு எதிரியை பிக்ஸ் பண்ணிக்கனும். அப்ப தான் நீங்க ஹீரோ ஆக முடியும். சுரேஷை அடிச்சு வீழ்த்தின ரம்யாவை நாம ஹீரோவா பார்த்தோம். அர்ச்சனா, ரியோ குரூப்பை எதிர்த்து நின்ன பாலாவை நாம ஹீரோவா பார்த்தொம். அது சரியோ தப்போ அந்த டைம்ல அவங்க ஹீரோ. இப்ப அர்ச்சனா குரூப், பாலா குரூப் ரெண்டையும் ஒரே டைம்ல எதிர்க்க போறாரு ஆரி. சாம் கூட அவர் சண்டை போடறதுக்கு ஒரு முக்கியமான காரணம், அவரை பாலா குரூப்ல இருக்கறவரா காட்டனும். நிரூபிக்கனும். அதே சம்யம் தன்னையும் கலகக்காரன்னு நிலை நிறுத்திக்க பார்க்கறார்.

ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா, சரியோ தப்போ நீங்க ஏதாவது செய்யனும். அப்ப தான் உங்களுக்கு ஆதரவோ, இல்ல எதிர்ப்போ வரும். ரெண்டுல எது வந்தாலும் இந்த பிக்பாஸ் வீட்ல நீங்க ரொம்ப நாள் இருக்கலாம். இந்த வாரம் நாமினேஷன்ல இருக்கறவங்க அத்தனை பேரும் இதே கேட்டகிரி தான்.

ரிவியூக்கு முன்னாடி எதுக்காக இத்தனை கதைனு உங்களுக்கு கேள்வி வரலாம். இந்த சீசன் பிக்பாஸை நாமும் இனிமே கண்டண்ட், ப்ரோமோ, ஸ்ட்ராட்டஜி, கேம், இப்படித்தான் பார்க்கனும். போன சீசன் மாதிரி நான் நியாயத்தின் பக்கம் நிற்பேன்னு டயலாக் பேச முடியாது. ஏன்னா இந்த சீசன்ல யாருமே ஹீரோ கிடையாது. எல்லாருமே வில்லன் தான்.

நாள் 31.

நேத்து ஆரி - சாம் சண்டைல சில கிளாரிபிகேஷன்ஸ், அன்சீன்ல இருந்தது. நம்ம புரிதலுக்காக.

போன வார க்ளீனிங் டீம் சரியான முறையில ஹேண்ட் ஓவர் செய்யலைனு ஆரி-சாம் இடயில சண்டை நடந்ததுக்கு அப்புறம் நைட் மீண்டும் ஒரு டைனிங் டேபிள் மீட்டிங் நடக்குது.

முந்தின நாள், அதாவது ஞாயிறு அன்னிக்கு எவிக்சன் இருந்ததால, நாமினேஷன்ல இருந்தவங்க எல்லாரும் ட்ரெஸ்லாம் பேக் பண்ணி வச்சுருக்காங்க. ஒவ்வொரு வாரமும் இது நடக்கும். இது ஒரு பழக்கம். சோ அன்னிக்கு கமல் சாரோட ப்ரொகிராம் முடிஞ்சு, சுசித்ரா எண்ட்ரிக்கு அப்புறமும் ஒரு டாஸ்க் நடந்தது நினைவிருக்கலாம். அதுக்கப்புறம் எல்லாரும் சாப்ட்டு முடிச்ச உடனே லைட்டு ஆப் செஞ்சுட்டாங்கனு பாலா விளக்கம் கொடுக்கறான். போன வாரம் க்ளீனிங் டீம் கேப்டன் வேல்முருகன் தான் எவிக்ட் ஆனது இங்க குறிப்பிடத்தக்கது. சோ இந்த காரணங்களால் தான் நைட் க்ளீன் செய்ய முடியலைனு பாலா கொடுத்த விளக்கத்தை எல்லாரும் ஏத்துக்கறாங்க.

அடுத்த நாள் டீம் மாறிட்டதால யார் இதை செய்யறதுனு ஒரு குழப்பம் வந்துருக்கு. இப்ப க்ளீனிங் டீம் கேப்டன் ஆரி. புது கேப்டன் சாம். போன வார க்ளீனிங் டீம்ல இருந்தது பாலா, போன வார கேப்டன் அர்ச்சனா.. இந்த புள்ளி எல்லாத்தையும் இணைச்சா ஒரு பிக்சர் தெரியும். யார் பக்கம் நியாயம்னு அதை வச்சு நீங்க புரிஞ்சுக்கலாம்.

அதே சம்யம் ஞாயிறு நைட் க்ளீனிங் செய்யாதது, அடுத்த வாரம் வொர்ஸ்ட் பர்பாமன்ஸ் செலக்ட் செய்யும் போது கணக்குல எடுக்க கூடாதுனு பாலா சொன்னதை எல்லாரும் அக்சப்ட் பண்ணிட்டாங்க.

வெற்றிவேலா பாட்டுக்கு எல்லாருமே ஆடினாங்க.

சுரேஷ் vs பாலாவுக்கு நடுவுல இருக்கற மனக்கசப்பை பத்தி சாம், பாலா பேசிட்டு இருக்காங்க. சுரேஷ் கூட உக்காந்து பேசுங்கனு சாம் அட்வைஸ் பண்றாங்க.

வீட்டுக்குள்ள மத்த ஹவுஸ்மேட்ஸ் கூட இருக்கற பிரச்சினைகளை தீர்க்க வீடு விவாத மன்றமா மாறுது.

ஒவ்வொருத்தரும் கன்பெஷன் ரூம் போய் புகார் எழுதனும். பாலாவும், சுரேஷும் சனம் மேல புகார் எழுதினாங்க. .பாலா மேல புகார் எழுத அடிஷனல் ஷீட்லாம் வாங்கினாங்க சனம். கன்பெஷன் ரூம் போய் சனமை காணோம்னு எல்லாரும் தேடிட்டு இருந்தாங்க. ஒருவேளை அப்படியே அனுப்பிட்டாங்களோனு, வீட்ல சில பேர் சந்தோஷபட்ருப்பாங்க. ரொம்ப நேரம் கழிச்சு வெளிய வந்த சனம், விவாத மன்றம் டாஸ்க்ல புகார் கொடுக்கும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதுனு சொல்றாங்க.

விவாத மன்றத்துக்கு சுசித்ரா தான் நீதிபதி. முதல் வழக்கா பாலா vs சனம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அர்ச்சனைவை புகழ்ந்து பேசும் போது வந்த எலுமிச்சம்பழம் மேட்டரு, தற்தலை மேட்டரு, எட்டி உதைச்சது, எல்லாத்தையும் சேர்த்து 3 பிராது வச்சாரு பாலா. அதுக்கு சனம் கொடுத்த விளக்கம் அடேங்கப்பா ரகம். இறுதில பாலா சைடு தீர்ப்பு சொன்னாரு நீதிபதி.

சனம்க்கு ஆதரவா இறங்கின ஆரிக்கும், பாலாவுக்கு ஆதரவா இறங்கின சாம்க்கும் மறுபடியும் ஒரு மினி சண்டை நடந்தது. ஆரி இந்த வாரம் முழுசா சாமுக்கு தொல்லை கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு போல. ரம்யா, பாலா ரெண்டு பேருமே சாமோட திறமையை புகழ்ந்து பேசினதுல சாமோட கிராப் கொஞ்சம் மேல ஏறிருக்கு. இப்ப கேப்டனாவும் இருக்கறதால, இந்த வாரத்தை பிரச்சினையில்லாம முடிச்சா, அவங்களுக்கு இன்னும் நல்ல பேர் கிடைக்கும். அதை தடுக்கத்தான் ஆரி முயற்சி செய்யறாரோனு ஒரு டவுட். இதுல ஆரிக்கும் அனுகூலம் இருக்கு.

இந்த சீசன்ல நடந்து முடிஞ்ச எந்த ஒரு விஷயத்தையும் கண்டஸ்டண்ட்ஸ் மறக்க மாட்டேங்கறாங்க. அவங்க மறந்தாலும் பிக்பாஸ் மறக்க விட மாட்டேங்கறாரு. ஒரே விஷயத்தை திருப்பி திருப்பி பேசி போரடிக்குது.

அடுத்த வழக்கும் சனம் மேல தான்.இந்த தடவை சுரேஷ் தான் வழக்குதாரர். யார் என்ன பேசிட்டு இருந்தாலும், குறுக்க புகுந்து கருத்து சொல்றாங்க. பிரைவசியே இல்லை. தன்னை முன்னிறுத்திக்கறாங்க ஒரு கம்ப்ளையிண்ட். சனம் சார்பா வாதாட பாலா வந்த போது எல்லாருக்கும் அதிர்ச்சி. பாலாவும், ஆரி, ரம்யா, அனிதா நாலு பேரும் சனம்காக வாதாடினாலும் ஸ்கோர் செஞ்சது என்னவோ பாலா தான்.

பாலா ஏன் இந்த முடிவு எடுத்தாருங்கற கேள்விக்கான பதில் மேல எழுதிருக்கற முன்னுரைல இருக்கு. இது பாலாவோட ஸ்ட்ராட்டஜி. இதுல பல நன்மைகள் பாலாவுக்கு கிடைச்சுது.

தனக்கு எதிரா இருக்கற சுரேஷுக்கு தன்னோட அருமையை புரிய வைக்கறது. தனியா அவரால எதுவும் செய்ய முடியாதுனு அவர் தெரிஞ்சுக்கனும்.

தன்னை கடுப்பேத்தினதுக்கு திருப்பி முறை செய்யறது.

ஏற்கனவே பாலா கேஸ்ல பாலாவுக்கு எதிரா வாதாடினது ஆரி. சனம்க்கு ஆதரவா ஆரி கண்டிப்பா வருவாருனு யோசிச்சு அங்க போய் நிக்கறாரு பாலா. அதனால காட்சிகள் மாறுது. முன்னாடி நிக்க வேண்டிய ஆரி பின்னுக்கு தள்ளப்படறார். பாலா திரும்பவும் ஸ்கோர் செய்யறான். அதே சமயம் ஆரி ஸ்கோர் செய்யாம பார்த்துக்கறான்.

சனம் மட்டுமில்லாம தன்னோட ஸ்ட்ராட்டஜியால மொத்த ஹவுஸ்மேட்ஸையும் குழப்பறது. தான் ஒரு புரியாத புதிர்னு காட்டிக்கறது.

இப்படி நிறைய ப்ளஸ் பாலாவுக்கு கிடைச்சுருக்கு. அதே மாதிரி தான் மைனஸும்.

அந்த வழக்கு சனம்க்கு ஆதரவா தீர்ப்பாச்சு. அதுக்கு "வெற்றிக்குறி" காட்டி சந்தோஷபட்டாரு பாலா. ரியோ, சாமை கேப்டன் ஆக்கினேன்னு சொல்றதோட, சனம்க்கு கேஸ் ஜெயிச்சு கொடுத்தேன்னு சேர்த்து சொல்லிக்க இன்னொரு பாயிண்ட் கிடைச்சுருக்கு.

வெளிய வந்து ஆரி, அனிதா ரெண்டு பேரும் இந்த ஸ்ட்ராட்டஜியை பத்தி டீப் டிஸ்கஷன்ல இருந்தாங்க. சாம், அர்ச்சனா சேர்ந்து பாலா கிட்ட பேசிட்டு இருந்தாங்க. தோக்கறவங்களை ஜெயிக்க வைக்கறது தான் என் ஸ்ட்ராட்டஜினு சொல்லிட்டு போய்ட்டான் பாலா.

ரெண்டாவது கேஸ் நடக்கும்போது சுரேஷுக்கு ஆதரவா பேசும் போது ஒரு மேட்டர் சொல்றாங்க.
"அன்னிக்கு ஒருநாள் நான் கிச்சன்ல ஒரு மீட்டிங்ல இருக்கும் போது, சனம் அங்க வந்தாங்க. நான் கிச்சன் டீம் மீட்டிங்ல இருக்கேன்னு சொன்னேன். அப்புறமா அவங்க போய்ட்டாங்க. இந்த மாதிரி எல்லா இடத்திலேயும் எல்லாரும் இருக்கனும்னு அவசியம் இல்லை" இது தான் அர்ச்சனா பேசின விஷயம்.

அர்ச்சனா பேசி முடிச்சு, அதுக்கப்புறம் மத்தவங்க ஆர்கியுமெண்ட் முடிச்சு தீர்ப்பு கொடுக்கறதுக்கு முன்னாடி 2 நிமிஷம் டைம் கேட்டாங்க சுச்சி.

அப்ப அர்ச்சனாவை கூப்பிட்ட சனம் "நீங்க ரெண்டு பொய் சொல்லிருக்கீங்க"" சொன்னதுல ஆரம்பிச்சது பிரச்சினை.

மேல அர்ச்சனா சொன்ன அதே விஷயத்தை மாத்தி மாத்தி ரெண்டு பேரும் சொன்னாங்களே தவிர என்ன பொய்னு கடைசி வரைக்கும் சொல்லலை. பிரச்சினை திரும்பவும் டைனிங் டேபிளுக்கு போகுது. அப்பவும் இதே தான். நான் அங்க வந்தேன். சொன்ன உடனே போய்ட்டேன்னு சனம் சொல்ல, அதை ஆமானு அர்ச்சனாவும் ஒத்துக்கறாங்க. "அப்புறம் அந்த ஆர்கியூமெண்ட் ஏன் அங்க வந்தது" என்கிற சனமோட கேள்வி நியாயமானது. சந்தேகமே இல்லை. ஆனா அதுக்கான பதில் சுரேஷ் சொன்னாரு. "சனம் அங்க வந்த போது, அர்ச்சனா மட்டும் இல்லாம சுரேஷும் ரெண்டு தடவை சொல்லிருக்காரு", " கிச்சன் டீம் மீட்டிங் நடக்குது, நாம அப்புறமா பேசுவோம்னு" சுரேஷும் சொல்லிருக்காரு.

இந்த விவாதம் நடந்துட்டே இருக்கும் போது "அப்புறம் அந்த ஆர்கியூமெண்ட் ஏன் அங்க வந்தது" கேள்வியை திரும்ப திரும்ப கேட்டாலும், அதுக்கு பதில் சொல்றதுக்கான ந்டேசை அர்ச்சனாவுக்கு கொடுக்கவே இல்லை. ரொம்ப ஓவரா கத்திட்டு இருந்தாங்க சனம்.

அப்ப அர்ச்சனா பொய் சொன்னதா சனம் சொன்னது தான் பொய்னு பாலா சொல்லவும், நான் பொய் சொல்லலைனு அதிகபட்ச கொந்தளிப்புல கத்திட்டே வெளிய போறாங்க. பயந்து போன சுரேஷ், ரம்யா எல்லாம் பின்னாடியே போனாங்க. என்ன சமாதானம் சொல்லியும் சரியாகலை.

வழக்கு நடக்கும் போது ஆரி ஒரு தடவை சாம் பார்த்து "நீங்க பொய் சொல்றிங்கனு" சொன்னாரு. அந்த ஆர்கியுமெண்ட் கூட நிறைவடையலை.

சனமும் அர்ச்சனாவை பார்த்து "நீங்க ரெண்டு பொய் சொன்னீங்கனு" சொன்னதும் உண்மை. அதுக்கான ஆர்கியுமெண்ட் நடந்துட்டு இருக்கும் போது தான் பாலா சொன்ன ஒரு வார்த்தைக்கு சனம் கொடுத்த ரியாக்சன் ரொம்பவே அதிகம்.

வீட்டோட சமாதானப் புறா சாம் முயற்சி செஞ்சு அர்ச்சனாவை கூட்டிட்டு வந்து சனம் கூட பேச வைக்க முயற்சி செஞ்ச போது தான் சனமோட நோக்கம் தெளிவாச்சு. இந்த வீக்கெண்ட் நான் பேசனும். அதனால அதை பத்தி எதுவும் பேச மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வந்தவங்களை கூட திருப்பி அனுப்பினது ஆட்சேபத்துக்கு உரிய செயல்.

நேத்து சம்பவத்தை புத்த வரைக்கும் சனம்க்கு ட்ராமா குயின் அப்படினு பட்டமே கொடுக்கலாம். வீக்கெண்ட் கமல் சார் வந்து பஞ்சாயத்தை தீர்த்து வைக்கனும்னு, இல்லாத ஒரு பஞ்சாயத்தை உருவாக்கி, அதுல தான் வஞ்சிக்கப்பட்டதா ப்ளே செஞ்சதெல்லாம் பக்காவான ஸ்ட்ராட்டஜி.

இப்ப நீங்க முன்னுரையை படிச்சா இன்னும் தெளிவாகும்.

You'r reading நீதிமன்றமாய் மாறிய பிக் பாஸ் வீடு..! வாய்மை வென்றதா ?? இல்லையா?? Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை