சட்டமன்ற தேர்தலில் கமலுக்கு ரஜினி ஆதரவு? உலக நாயகனுக்கு மலர் தூவி வரவேற்பு..

by Chandru, Nov 4, 2020, 15:05 PM IST

80களில் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் தொடங்கியது 30 ஆண்டுக்கும் மேலாக இவர்கள் தமிழ் ரசிகர்களை இரண்டு துருவங்களாக பிரித்து வைத்திருக்கின்றனர். சினிமா வெளியாவதில் தொடங்கிய போட்டி இன்று அரசியல் போட்டியாக வந்து நிற்கிறது. அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்த ரஜினி இன்னும் நேரடி அரசியலுக்கு வரவில்லை. நற்பணி நடத்தி பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு பேட்டியின் போதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறி வந்த கமல்ஹாசன் யாரும் எதிர்பாரதவகையில் அரசியலுக்கு வந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஒரு முறை இடைத்தேர்தலிலும் போட்டியிட்டுவிட்டார்.

2021ம் ஆண்டு வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சி தொடங்கி அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவேன். எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என 2 ஆண்டுக்கு முன் ரசிகர்கள் முன் அறிவித்த ரஜினிகாந்த் இன்னமும் அமைதி காக்கிறார். சமீபத்தில் ரஜினி வெளியிட்ட ஒரு அறிக்கையில் ,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவி தீவிரமாக பரவிக் கொண்டு இருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என்றார்.

ரஜினி ஒருபக்கம் அரசியலிலிருந்து ஒதுங்குவது போன்ற தொணியில் பேசினாலும் கமல்ஹாசன் தீவிர அரசியலில் குதித்திருக்கிறார். கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்திருக்கும் தனது மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த கமலுக்கு தொடண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். அப்போது அவர், மக்களுடன் தான் கூட்டணி கழகங்களுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்திருக்கிறார். இன்று நடந்த கூட்டத்தில் அவர் தந்து தமிழகத்தில் மேற்கொள்ள விருக்கும் சுற்றுபயணம் பற்றி விளக்கி உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார் கமல். சுற்றுப் பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

சுற்றுப்பயணத்தின்போது மூன்று இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு.
முதற்கட்டமாக நெல்லை, திருச்சி, சென்னை என மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமலின் இந்த சுற்றுப் பயணத்துக்கு கட்சி சின்னமான டார்ச் சின்னம் பொறித்த சிவப்பு நிற வேன் ரெடியாகி இருக்கிறது. ரஜினி ஏற்கனவே ஒருமுறை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது நான் முதல்வராக வர மாட்டேன். அதற்கு தகுதியான நபரை அடையாளம் காட்டுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். என்ன தான் சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ரஜினி, கமல் இருவரும் மிக நெருங்கிய நன்பர்கள். கமல்ஹாசன் மீது ரஜினிக்கு பெரிய மரியாதை உண்டு, அவரது திறமை மீதும் நம்ம்பிக்கை கொண்டவர். திடீரென்று கமலுக்கு ரஜினி அரசியல் ஆதரவு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என இப்போதே பேச்சு எழ ஆரம்பித்துள்ளது. அரசியலில் பலரும் பல வியூகங்கள் வகுக்கிறார்கள். இவர்கள் இருவரும் போட்டு வைத்திருக்கும் வியூகம் போகப் போக வெளிப்படும்.

You'r reading சட்டமன்ற தேர்தலில் கமலுக்கு ரஜினி ஆதரவு? உலக நாயகனுக்கு மலர் தூவி வரவேற்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை