Wednesday, Sep 29, 2021

லக்சரி பட்ஜெட் பூஜியம்.. சோமுவை ப்ரொபோஸ் செய்ய சொன்ன ஐஸ்வர்யா.. அப்போ ரம்யாவின் கதி??

by Mahadevan CM Nov 13, 2020, 14:32 PM IST

முந்தின நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நிகழ்ச்சி. சரி ஏதோ நிறைய கண்டண்ட் இருக்கும் போலனு ஸ்டடியா உக்காந்தேன். ஆனா....

சோம் பத்திரத்தை திருடி ஒளிச்சு வச்சுட்டு கேமராவை பார்த்து கண்ணடிச்சாரா, அதுலேர்ந்து ஸ்டார்ட் ஆச்சு. வீட்ல இருக்கறவங்க எல்லாம் ஒன்னா உக்காந்து பேசி யார் என்னனு விசாரிக்கறாங்க. பத்திரம் காணாம போனதும் ஒரு கண்டண்ட் தான். அதை வச்சு கிரியேட்டிவா எதையாவது செய்யனும். அது தான் டாஸ்க். ஆனா இவங்க பத்திரத்தை கண்டுபிடிக்க இறங்கிட்டாங்க.

யார் மேல சந்தேகம்னு வரும் போது சோம் பேரை ஸ்ட்ராங்கா சொன்னாரு ஜித்து பாய். வேற யாருக்கு சந்தேகம்னு ஓட்டெடுப்பு கூட நடத்தினாங்க. பாலா உட்பட 8 பேர் சோம் தான் திருடிருக்கனும்னு சொன்னதுக்கு அப்புறம், சோமை விசாரிக்கவே இல்லை. அர்ச்சனா முதஎகொண்டு எல்லாருக்கும் முதல் சந்தேகம் பாலா மேல தான்.

குடும்பத்துக்கு ஒருத்தரா சேர்ந்து எல்லாரையும் செக் பந்ணலாம்னு பாலா ஒரு ஐடியா கொடுக்கறாரு. அப்ப கேப்பி அப்ஜக்ட் பண்றாங்க. என்னோட பர்சனல் திங்ஸை நான் பார்க்க விட மாட்டேன்னு. கடைசில பெண்கள் மட்டும் செக் பண்ண ஒத்துக்கிட்டாங்க.

எல்லாரும் களமிரங்கி தேடறாங்க. அதையாவது ஒழுங்கா பண்ணிருந்தா அப்பவே கண்டுபிடிச்சுருக்கலாம். ஏனோ தானோனு தேடிட்டு விட்டாச்சு. பத்திரத்தை யாரு எடுத்தது, கொடுத்துருங்கனு திரும்ப திரும்ப அர்ச்சனா சொல்லிட்டு இருந்தாங்க. இந்த பாட்டி கேரக்டருக்கு அவங்க தேர்ந்தெடுத்த வாய்ஸ் டோன் சரியில்லை. கேக்கும் போதே இரிடேட்டிங்கா இருந்தது. இன்னும் நல்லா செய்யக் கூடியவங்க அர்ச்சனா. ஆனா இந்த டாஸ்க்ல சொதப்பிட்டாங்க.

அதுக்கப்புறம் பாலா மட்டும் தனியா தேடி பத்திரத்தை கண்டுபிடிச்சுடறான். அவன் அதை எடுத்துட்டு போனதை ரம்யாவும் கேப்பியும் பார்க்கலை. ஆனா பாலா எடுத்துட்டு போகும் போது ஷிவானி, ஆஜித், சுச்சி எல்லாரும் மங்குனிகள் மாதிரி பின்னாடியே போனாங்க. அதை பார்த்து தான் கேப்பி கண்டுபிடிச்சுருச்சு. நல்லா சேர்ந்திங்கய்யா கூட்டணி.

பத்திரத்தை எடுத்த பாலா, அதை கவர்ல இருந்து எடுத்துட்டு, கவரை மட்டும் சோம் பெட்டுக்கு அடில வச்சிடறான். பத்திரத்தை வேற எங்கேயோ ஒளிச்சு வச்சுடறான்.

பாலா பத்திரத்தை எடுத்துட்டான்னு கேப்பி ஊருக்கே சொல்லிருச்சு. நான் லாக்கர்ல இருந்து திருடலை, இங்கிருந்து தான் திருடினேன்னு சொல்லிட்டு இருந்தாரு பாலா. ஏதோ பேசிட்டு இருக்கும்போது, ஹானஸ்ட்டா பதில் சொல்லு பாலானு கேப்பி சொல்லிருச்சு. அதை பெருசா எடுத்துக்கவே இல்லை பாலா. ஆனா பேசி முடிச்சு வெளிய போனதுக்கு அப்புறம் ஷிவானி அந்த "ஹானஎடி" வார்த்தையை பத்தி எடுத்துச் சொல்லி பாலாவை மறுபடியும் உள்ள கூட்டிட்டு வராங்க. உள்ள வந்து பாலா, ஷிவானி, கேப்பி, சுச்சினு ஆளாளுக்கு கத்திட்டு இருந்தாங்க.

பத்திரம் ஒரு மேட்டரே கிடையாது. டாஸ்க்கோட மெயின் விஷயம் பாட்டியை சந்தோஷபடுத்தனும். அவங்களுக்கு சொத்து கிடைக்கும். அந்த விஷயத்தையே மறந்துட்டு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரையும் மறந்துட்டு நம்மளை வச்சு செஞ்சுட்டாங்க. இந்த டாஸ்க்கை எவ்வளவோ ஜாலியா பண்ணிருக்கலாம்.

அதுக்கப்புறம் பாலா தான் பத்திரத்தை எடுத்தான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. அப்பவாவது பத்திரத்தை திருப்பி கொடுத்திருந்தா டாஸ்க்காவது தப்பிச்சுருக்கும். ஆனா அப்பவும் அதை செய்யலை பாலா. மொற்ற வீடும்பாலா பின்னாடி சுத்திட்டு இருந்தது. அவ பாலா பத்திரத்தை கொடுக்கலேன்னா, மத்தவங்களாவது டாஸ்க்கை கண்டினியூ பண்ணிருக்கலாம். அதையும் செய்யலை.

பொறுத்து பொறுத்து பார்த்த பிக்பாஸ் நீங்க டாஸ்க் பண்ணி கிழிச்சது போதும், போங்கடானு சொல்லி நமக்கும் விடுதலை வாங்கி கொடுத்துட்டாரு.

டசக்கு டசக்கு டும் டும் பாடலோடு விடிந்தது நாள். இந்த வாரம் முழுக்க ஆரி முன்வரிசைல இருந்து டான்ஸ் ஆடறாரு பார்த்தீங்களா?

சுச்சியும் சனமும் டைனிங் டேபிள்ள உக்காந்து புரணி பேசிட்டே இருக்காங்க. பாலாவும், ஷிவானியும் எப்பவுமே ஒன்னாவே இருக்கறதை பத்தி சுச்சி சொல்லிட்டு இருந்தாங்க. கூடவே சோக்கு சம்யுக்தா மேல இண்ட்ரஸ்ட்னு கொளுத்தி போட்டாங்க. இது சுச்சிக்கு தேவையில்லாத வேலை. அதுவும் சனம் கிட்ட அதை சொல்றது கண்ணிவெடில காலை வைக்கறதுக்கு சமம். கமல் சார் கூட பேசும் போது "இதை சொல்லலலாமா வேண்டாமானு தெரியலை, அன்னிக்கு சுச்சி இப்படி சொன்னாங்கனு" பொதுவுல போட்டு உடைச்சுடுவாங்க. இது வெளிய தெரிஞ்சா ரெந்டு பேருமே ஹர்ட் ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கு.

நாம ஒரு மணி நேரம் ப்ரொகிராமா பார்க்கும் போது ரெண்டு பேரும் ஒன்னா தான் தெரியறாங்க. பாலாவை எப்ப தனியா பார்த்தோம்னு மறந்து போச்சு. இத்தனைக்கும் ஷிவானிக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லைனு பாலா தெளிவா சொல்லிட்டான். அவங்க ரெண்டு பேரும் ஒன்னாவே இருந்தாலும் அவங்க என்ன பேசறாங்கனு நமக்கு காட்டறதில்லை. இந்த பாயிந்டை தான் அன்னிக்கு அர்ச்சனா கிட்ட சொல்லிட்டு இருநதது ஞாபகம் இருக்கலாம். பாலா, ஷிவானி உறவு இப்படி போட்ரே ஆகறதுக்கு கண்டிப்பா விஜய் டிவியும் ஒரு காரணம்.

ஷிவானி, கேப்பி, சுச்சி மூன்று பேரும் அவர்கள் உடுத்தும் உடையில் கவனம் செலுத்துவது நலம். இது போன்ற நிகழ்ச்சியில் கவர்ச்சி தேவை தான். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. நேற்று ஷிவானி போட்டிருந்த உடை ஆபாசத்தின் உச்சம். 4 கோடி பேர் பார்க்கிறார்கள். குழந்தைகள் கெட்ட வார்த்தை கற்றுக் கொள்ளக்கூடாது என்று மாரல் வகுப்பெடுக்கும் கமல் சாரும், விஜய் டிவியும், உடைகள் விஷயத்திலும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை முழுசா சொதப்பினதால, இந்த வாரத்துக்கு லக்சரி பட்ஜெட் கிடையாதுனு சொல்லிட்டாரு பிக்பாஸ். ஆக்சுவலா பாலா பத்திரத்தை திருடற வரைக்கும் கூட இந்த டாஸ்க்கை யாரும் சரியா பண்ணலை. அந்த கேரக்டர்ல இருந்தவங்க கொஞ்சம் பேர் தான். பாலா சும்மா இருந்திருந்தா மொத்த பேரும் திட்டு வாங்கிருப்பாங்க. ஆனா பாலா குறுக்க புகுந்து காரியத்தை கெடுத்து மொத்த அடியையும் அவர் வாங்கிட்டு இருக்காரு.

இந்த டாஸ்க்ல திருடர் கூட்டமா நடிச்ச சோம், ரம்யா, கேப்பி மூணு பேரும் தங்களை அறிமுகபடுத்திக்கறாங்க. இந்த டாஸ்க்ல சிறப்பா செயல்பட்டது இந்த 3 பேர் தான். பத்திரத்தை சரியா திருடினதுக்கு கை தட்டிட்டு, அதை தொலைச்சதுக்கு சோம்க்கு செய்முறை செஞ்சாரு ரியோ. ஜாலியா இருந்தது. இதான் சாக்குனு ரம்யாவும் நாலு வச்சாங்க. அடேய் சோம், அடிக்கற அளவுக்கு என்னடா செஞ்ச.....

லக்சரி பட்ஜெட்ல 50% மாவது கொடுங்கனு அர்ச்சனா ரெக்வஸ்ட் வச்சாங்க. கேப்டன்ங்கற முறையில ஆரியும் கேட்டரு. தன்னோட செயலுக்கு மன்னிப்பு கேட்டாரு பாலா. டாஸ்க் பத்தி பாலாவுக்கு எடுத்து சொல்லிட்டு இருந்தாங்க ரம்யா. அடுத்த வார லக்சரி பட்ஜெட் டாந்க் வரும்.போது மொத்த கண்ணும் பாலா மேல தான் இருக்கும். அந்த பக்கம் சுச்சி கேமரா கிட்ட நின்னு பிக்பாஸ் கிட்ட பேசிட்டு இருந்தாங்க. ஏற்கனவே லக்சரி பட்ஜெட்ல வரதெல்லாம் எங்க வாய்க்கு எட்ட மாட்டேங்குது. எல்லாத்தையும் அவங்களே அமுக்கிடறாங்கனு சொல்லிட்டு இருந்தாங்க சுச்சி...

அதுக்கப்புறம் தீபாவளி கொண்டாட்டங்கள் தான். முன்னாள் பிக்பாஸ் கண்டஸ்டண்ட்ஸ் டீவி வழியா வந்தாங்க. மஹத், வனிதா, ஐஸ்வர்யா, விஜயலஷ்மி, ஷெரின், சாண்டி எல்லாரும் தனித்தனியா வந்து ஹவுஸ்மேட்ஸ்க்கு டாஸ்க் கொடுத்து டைம் பாஸ் செஞ்சாங்க.

ஐஸ்வர்யாவும், ஆரியும் சேர்ந்து ஒரு படம் நடிச்சுருக்காங்க போலருக்கு. அந்த படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். ஹீரோ ஆரியை விட்டுட்டு சோம் மேல தான் கண்ணா இருந்தாங்க ஐஸ்வர்யா. ப்ரொபோஸ் வேற செய்யச் சொன்னாங்க. இதுக்கப்புறம் வீடுக்குள்ள சோம்க்கு டிமாண்ட் அதிகமாகும்னு நினைக்கிறேன்.

அதிகமா எதிர்பார்த்தது சாந்டியும், ஷெரினும் தான். சாண்டிக்கு நல்லா உடம்பு வந்துருச்சு. ஷெரின் போன சீசன்ல குறைச்ச உடம்பை மெயிண்டைன் பண்றாங்க. சோம் தன்னோட வளர்ப்பு நாய்க்கு லெட்டர் எழுதினது ஷெரின்க்கு ரொம்ப பிடிச்சுருக்கும் போல. அவங்களும் ஒரு பெட் லவ்வர். சாண்டி குருநாதானு கூப்பிட்ட உடனே சொல்லுங்க சிஷ்யானு பிக்பாஸ் குரல் கேட்ட போது, போன சீசன் ஞாபகம் வந்துட்டு போச்சு.

அந்த டாஸ்க்ல ஜெயிச்சவங்களுக்கு பரிசுகள் வந்துட்டே இருந்தது.

நைட் 11 மணிக்கு புல்கா செய்யற டாஸ்க். ஆச்சரியமா அதுல ஜெயிச்சது ஷிவானி...

வேற கண்டண்ட் எதுவுமில்லை. தீபாவளி வரைக்கும் இப்படித்தான் போல.

You'r reading லக்சரி பட்ஜெட் பூஜியம்.. சோமுவை ப்ரொபோஸ் செய்ய சொன்ன ஐஸ்வர்யா.. அப்போ ரம்யாவின் கதி?? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Bigg boss News