பரிசோதனையில் தான் பிரச்சினை எனக்கு கொரோனா இல்லை நடிகர் சிரஞ்சீவி அறிவிப்பு

by Nishanth, Nov 13, 2020, 13:11 PM IST

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பரவியதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் பரிசோதனையில் தான் கோளாறு என்றும், தனக்கு கொரோனா இல்லை என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உட்பட பல சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பரவியதாக அறிவிக்கப்பட்டது. 'ஆச்சாரியா' என்ற புதிய படத்தில் நடிக்க சிரஞ்சீவி ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னோடியாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

சிரஞ்சீவியும் பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது அவருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அவரே டுவிட்டர் மூலம் தெரிவித்தார். ' எனக்கு கொரோனா நோய் பரவியுள்ளது. தற்போது வீட்டில் தனிமையில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிப்பில் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சிஞ்சீவிக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது: எனக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மூன்று முறையுமே நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் எனக்கு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த உபகரணத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வாறு வந்திருக்கலாம் என டாக்டர்கள் கருதுகின்றனர். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் ஆச்சாரியா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை