காதல் கண்ணை மறைக்கிறது.. பயங்கர சூடான பாலா.. பிக் பாஸ் வீட்டில் நேற்று என்ன நடந்தது??

Advertisement

முந்தின நாள் கமல் சார் எபிசோட்ல ரியோவும், சோமும், தங்களை அனிதா நாமினேட் செஞ்சுருக்கலாம்னு சொன்னதை மட்டும் போட்டு காமிச்சாங்க. எதுக்குய்யானு பார்த்தா அனிதா அங்க கோவமா இருக்காங்களாம். பொசுக்கு பொசுக்குனு கோவப்பட்டு, மூக்கை சிந்தி ஆர்பாட்டம் பண்றதால, இப்ப என்ன காரணம்னு நமக்கு விம் போட்டு விளக்கி சொல்லிருக்காரு பிக்பாஸ். ஒரு வாரமா அனிதா பக்கமே போகாம இருந்த சோம், நைட் போய் சமாதானம் பேசறான். கமல் சார் கிட்ச ஏன் சொன்னனு மூஞ்சை தூக்கி வச்சுகிட்டாங்க அனிதா... அதுக்கு கெஞ்சிட்டே இருந்தான் சோம். கூடவே ரியோ பஞ்சாயத்தும். சண்டை போட்டதுக்கு அப்புறம் ரியோ வந்து பேசவே இல்லையாம். ஏம்மா நீ பேசவிட்டா தானே, நீ நான்ஸ்டாபா லேசறதை கேக்க வரனும்னா யாருக்கா இருந்தாலும், கொஞ்சம் ஜெர்க் ஆகுமில்ல.

வெளிய அர்ச்சனா & கோ குரூப் மீட்டிங். கொஞ்ச நாள் கழிச்சு வெளிய வராங்க. அனிதா பின்னாடி எதுக்காக போனனு சோம் மேல கோவப்படறாங்க. சோம் ஏதோ சொல்ல வர, போய் ஓரமா படுடானு அர்ச்சனா சொல்ல, சோம் கோபப்பட்டு அங்கிருந்து போய்டறான். சோம் மட்டும் போய் அனிதா கிட்ட பேசறான், பிரச்சினையை முடிக்க்ச்னும்னு நினைக்கிறான், ஆனா ரியோவை பத்தி யோசிக்கவே இல்லையேனு வித்தியாசமான காரஹம் சொல்றாங்க அர்ச்சனா. அதை ரியொவும் பயபக்தியோட கேட்டுகிட்டாரு. அன்னை அர்ச்சனாவாச்சே.

நாள் 44

காலைல பாட்டுக்கு கையை காலை கூட நீட்டறதில்லை. போன வாரம் முதல் வரிசைல நின்னு குத்தாட்டம் போட்ட ஆரி, கேஸ் ட்ரபிள் வந்தவராட்டம் ஓரமா நின்னு ரிலீஸ் பண்ணிட்டு இருந்தார். ஓ... கேப்டன் பதவி முடிஞ்சு போச்சா.....

அனிதா சோகமே உருவா பெட்ல உக்காந்திருக்க, அவரை சுத்தி எல்லாரும் நலம் விசாரிச்சுட்டு போனாங்க. ப்ளான் வொர்க் அவுட்டாகுது. ரியோ பேச வரலைனு சோகமா இருக்காங்களாம். ரியோ பேச மாட்டேங்கறாருனு சோம், ரமேஷ், நிஷானு ரியோவை தவிர எல்லார்கிட்டையும் பேசிருக்கு.

ஒரு வழியா தானே போய் ரியோ கிட்ட 5நிமிஷம் பேசலாமானு டைம் கேட்டாங்க அனிதா. பிரேக்பாஸ்ட் சாப்ட்டு பேசலாமானு கேட்டு அனுப்பிட்டாரு. இப்ப அதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு.

குக்கிங் டீம்ல மீண்டும் அர்ச்சனாவும், நிஷாவும். இந்த வார லக்சரி பட்ஜெட் வேற இல்லை. அதனால எதுக்கு வம்புனு யோசிச்சுட்டாங்க போல. தோசை சாப்டுட்டு இருந்த பால, இன்னொரு தோசை கேக்க, அங்க வந்த சுச்சி அதை வாங்கிருச்சு. அதுக்கு கோபப்பட்டு தட்டை கவுத்தி வச்சுட்டு கிளம்பிட்டாரு பாலா. சுச்சி தான் பாவம், ஏண்டா இந்த வீட்ல ஒரு தோசை கேட்டது குத்தமாடா? வடிவேலு ரியாக்சன் கொடுத்தாங்க.

அடுத்து இந்த வார நாமினேஷன். வழக்கம் போல அனிதாவோட சேர்ந்து இந்த வாரம் அதிக ஓட்டுக்கள் வாங்கியது சுச்சி. ஆரி, பாலா, சாம், ரியோ எல்லாரும் ரெண்டு ஓட்டு தான் வாங்கினாங்க. என்னது என் பேர்சி யாருமே சொல்லலையானு சனம் ஷாக் ஆகிட்டாங்க. இந்த வாரம் சனம் ரெஸ்ட் எடுப்பாங்கனு நினைக்கிறேன்.

நான்-சிங்க்ல போறாங்க, சிடுமூஞ்சி மேக்ஸ், காதல் கண்ணை மறைக்குதுனு நாமினேஷன்ல சொன்ன வார்த்தைகளை பொதுவுல போட்டு உடைச்சாரு பிக்பாஸ். நல்லா வேலை பார்க்கறிங்க பிக்பாஸ். காதல் கண்ணை மறைக்குதுனு சொன்னது பாலாவுக்கு கோபம் வந்துருச்சு. "இங்க யாரும் காதல்லாம்செய்யலை, அதையும் மீறி யாராவது பேசினா, நல்லா கேட்ருவேன்"/அப்படினு பொதுவா எல்லாரையும் பார்த்து சொல்லிட்டு எந்திரிச்சு போறான்.அப்படி பொதுவுல பேசினதுக்கு ரியோ அங்கேயே அப்ஜக்ட் செய்யறாரு. சோம் பார்த்து கூட அப்படி சொல்லிருக்கலாம்லனு அர்ச்சனா பாயிண்ட் எடுத்துக் கொடுக்கறாங்க.

ஆனா எந்திரிச்சு போகும் போது பாலா சொன்ன வார்த்தை " கிறுக்கு பசங்க".. ஆனா இந்த வார்த்தையை யாரும் கண்டுக்கலை.
ஒரு பக்கம் பாலா டென்சனா சுத்திட்டு இருக்க, இன்னொரு பக்கம் ரியோ டென்சனா சுத்திட்டு இருந்தாரு. பாலா எப்படி பொதுவுல பேசலாம், அவனை நாமினேட் செஞ்சதே ரெண்டு பேர் தான். மொத்த பேரும் உக்காந்து இருக்கும் போது எப்படி எல்லாரையும் வார்ன் பண்றா மாதிரி பேசலாம்னு ரியோவுக்கு கோபம். பாலா கோபமா எந்திரிச்சு போறதை பார்த்து சமாதானம் பண்றது யாருனு பார்த்தா நம்ம சனம். அம்மணி நாமினேஷன்ல இல்லாம போனதால செம்ம ஹாப்பியா இருக்காங்க. நான்லாம் லவ் பண்ணக்கூடாதா, டேய் வாங்கடா லவ் பண்ணலாம்னு காமெடியெல்லாம் செஞ்சு, அந்த சூழ்நிலையை இலகுவாக்க முயற்சி செஞ்சாங்க.

அப்பவும் கோபமா பெட்ரூம் போகும் பாலா, "கிறுக்கு பசங்க" னு மறுபடியும் சொல்றாரு. பக்கத்துல யாரும் இல்லை.

ரைட். பாலா-ஷிவாணி பழகறதை பார்த்து இது காதல்னு நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. பாலாவும் ஷிவானியும் ஒன்னாவே தான் இருக்காங்க, நாம பார்க்கற 1 மணி நேரத்துல, பாலா வர சீன்ல கூடவே ஷிவானியும் இருக்காங்க. ஆனா அதை வச்சு மட்டும் காதல்னு சொல்லிட முடியாது.

முதல் காரணம் அவங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கறதை காட்டின பிக்பாஸ், இதுவரைக்கும் அவங்க தனிமைல என்ன பேசறாங்கனு காட்டவே இல்லை. இந்த பாயிண்டை அர்ச்சனா கிட்ட பாலா சொன்னதை நாம கேட்ருக்கோம். சுச்சி உள்ள வந்த போது தான் பாலா ஷிவானி பத்தி வெளிய எப்படி போட்ரே ஆகுதுனு எடுத்து சொன்னாங்க. அப்பவே அதை மறுத்து பேசினான் பாலா. ஷிவானி கிட்ட சொல்லும் போது எந்த ரியாக்சனும் காட்டலை. எப் எம் நிகழ்ச்சில பாலா பின்னாடி ஒரு பொண்ணு சுத்துதுனு அர்ச்சனா சொன்ன போது, இனிமே அப்படி சொல்லாதீங்கனு அன்னிக்கு பாலா சொன்னது நினைவிருக்கலாம்.

பாலா ஷிவானி ரெண்டு பேருமே அடுத்த தலைமுறை, அவங்க காட்டற நெருக்கம், தொட்டு பேசறது, தோள்ல கை போடறது எல்லாம் பார்த்தா நமக்கு தவறா தோண்றது இயல்பு. ஆனா இதெல்லாம் எடிட்டிங் டீம் தனியா கட் பண்ணி காட்டறாங்கனு தோணுது. ஒரு நாள்ல அவங்க நெருக்கத்துல வரும் சில நொடிகள் நமக்கு காட்டப்படுது. அதை வச்சு எப்பவும் அவங்க அப்படித்தான் இருக்காங்கனு நாம முடிவு பண்ணிக்கறோம். லவ் சாங் போடறதெல்லாம் ப்ரொமோல தான். பெரும்பாலான ப்ரமோக்கள் நம்மோட ஆர்வத்தை தூண்டும் வகையில் எடிட் செய்யப்படுபவை. பாலாவோ, ஷிவானியோ இதை வெளிய சொல்லாத போது, நாம ஒரு முடிவுக்கு வர முடியாது. இதெல்லாம் வச்சு பார்க்கும் போது பெனிபிட் ஆப் டவுட் பாலா-ஷிவானிக்கு தான் கொடுக்கனும். அதே சமயம் இதுல ஷிவானியோட நிலைப்பாடும் தெளிவா தெரியல.

நேத்து கூட ரெண்டு பேரும் இதை பத்தி பேசினாங்க. "நாம பேசறதை எல்லாம் கேட்டா தெரியும் இவங்களுக்கு" னு ரெண்டு பேரும் பேசிட்டு வெளிய போகும்போது பின்னாடியே வந்த ரியோ பாத்ரூம் கதவை உதைச்சு திறந்துட்டு போறாரு. அந்த சத்தம் கேட்டு எல்லாரும் பதட்டத்தோட என்னாச்சுனு கேட்கறாங்க. ரியோ ஏன் டென்சன் ஆனான்னு பாலாவுக்கு ஒன்னுமே புரியல.

நாமினேஷன் முடிஞ்சு எல்லாருக்கும் பொதுவா வார்னிங் கொடுத்து பேசும் போது "காதை கிழிச்சுருவேன்" இப்படி பாலா சொன்னதா ரியோவுக்கு கோபம். மத்தவங்க கிட்ட கேக்கும் போது, யாருமே அந்த வார்த்தையை கேக்கலனு சொல்றாங்க. அதுக்கப்புறம் ரியோவும், பாலாவுமொன்னா உக்காந்து பேசி பஞ்சாயத்தை முடிக்கறாங்க.

பெட்ல தேமேனு படுத்திருந்த அனிதாவை பிக்பாஸ் கூப்பிட, அதுக்கு அனிதா சிரிச்ச சிரிப்பு இருக்கே. வெயிட்... கூடிய சீக்கிரம் வீடியோ மீம்ல பேக்கிரவுண்ட் ஸ்கோரா வரும். உள்ள கூப்பிட்ட பிக்பாஸ் டாஸ்க் லெட்டர் கொடுத்து படிக்கச் சொல்லிட்டாரு.

தினசரி டாஸ்க். பேமஸான சினிமா டயலாக்லாம் படிச்சு காட்டி, அதை வீட்ல இருக்கற ஒருத்தருக்கு கொடுக்கனுமாம். ஆளாளுக்கு அரை லூசு மாதிரி சிரிச்சுட்டு இருந்தாங்க. நிறைய பேர் சனம் பேரைச் சொல்லி கொடுத்துட்டு போனாங்க. ஏதோ சனம்மாதாஜி இந்த வார நாமேஷன்ல இல்லங்கற சந்தோஷத்துல இருக்கு. அதனால சிரிச்சுகிட்டே வாங்கிட்டாங்க. இருங்கடா, அடுத்த வாரம் இருக்கு உங்களுக்கு....

இதுல இன்னொரு கொடுமை மறுபடியும் அனிதாவோட சிரிப்பை கேக்க வேண்டியதாகிடுச்சு. ஒரே நாள்ல நமக்கு எத்தனை சோதனை. மூச்சு விடாம சிரிச்சதை பார்த்து எல்லாரும் சிரிச்சாங்க. அனேகமா இதை ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கும்னு நினைக்கிறேன். கோவமா இருக்கும் போது இதை ரீவைண்ட் பண்ணி ஓட்டி பார்த்து நீலாம்பரியா அவதாரம் எடுக்கப்போகுது.

இதுக்கு நடுவுல "சிடுமூஞ்சி மேக்ஸ் " வார்த்தையை வச்சு சுச்சி ஒரு பாட்டெழுத, அதுல சேர்ந்துகிட்டாரு பாலா. ஷிவானி அம்போனு நின்னுது. அது விஷயமா ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை..

பாலா உள்ள ஜாலிதா சிரிச்சு பேசிட்டு இருக்க, ஷிவானி வெளிய சூப் சாங் பாடிட்டு இருந்தாங்க. கூடவே ரம்யாவும், சாமும். ஏம்மா நீ சும்மா பார்க்கறதுக்கே லவ்சாங் போட்டு எடிட் பண்றாங்க. நீயும் வேற கண்டண்ட் கொடுக்கற.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>