பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கொளுத்தி போட ரெடியாகும் மொட்டை தாத்தா சுரேஷ்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..

by Logeswari, Nov 24, 2020, 13:38 PM IST

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகவும் மக்களின் பெரு ஆதரவுடனும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெளி நடப்புகள் எதுவும் அறியாது 100 நாட்கள் வீட்டிலே இருக்க வேண்டும்.இது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதற்கட்ட விதிமுறைகள் ஆகும்.இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் பத்மஸ்ரீ கமலஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். சிறப்பாக விளையாடி யாரு மக்களின் மனதை கவர்கிறார்களோ அவர்கள் தான் பிக் பாஸின் வெற்றியாளர்கள். இந்த வருடமும் பிக் பாஸ் 4 மிக பிரம்மாண்டமாக தொடங்க பெற்றது. முதல் இரண்டு வாரம் எதிர் பார்த்த அளவுக்கு சுவாரசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் வந்த இரண்டு நாட்களிலே மொட்டை தாத்தா சிறப்பாக விளையாடினார். இவரின் வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது.

அவர் சிரிக்கும் சிரிப்புக்கு பின் 'நான் யாரென்று தெரிகிறதா' என்ற பாடலின் கருத்துகளை கூறுவது போல் இருக்கும். இவருக்கும் அனிதாவுக்கு கொஞ்சம் கூட ஒத்துவராது. ஒரு டாஸ்க்கில் இருவரும் சேர்ந்து நடனம் ஆடியது பல ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. சொல்ல போனால் இரண்டு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுத்தவரே மொட்டை தாத்தா தான்.. இவரது நேர்மை, வில்லத்தனம் ஆகியவை கொண்டு பல ரசிகர்களை அவரது பக்கம் இழுத்து கொண்டார். கொளுத்தி போடு பாஸ் என்பதற்கு பெயர் போனவரும் சுரேஷ். கொளுத்தி போடுவதை படு சிறப்பாக செய்வார். என்னத்தான் கொளுத்தி போட்டாலும் அவரிடம் இருக்கும் குழந்தை தன்மையை சில போட்டியாளர்கள் உணர்ந்தனர். அவர் பிக் பாஸிடம் அழுத சம்பவம் வெளியே இருந்த ரசிகர்களை திணற செய்தது.

கேபியை முதுகில் தூக்கி அரை மணி நேரம் நின்றது அவரின் பாசம் மற்றும் விடாமுயற்சியை மற்றவர்களுக்கு நிருபித்தார். ஆனால் சில வாரம் 'எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்டாரே' என்பது போன்று இரண்டு வாரங்களாக எந்த வம்புக்கு போகாமல் வாலை சுருட்டி கொண்டு அவரது குரலை ஒலிக்க விடாமல் இருந்தார். இதனால் இவரிடம் எதிர்பார்த்த சுவாரசியம் கிடைக்காததால் மக்களிடம் குறைந்த ஓட்டு பெற்று வெளியே செல்ல பொட்டியை கட்டினார். ஆனால் மீண்டும் பிக் பாஸ் வருவதற்கு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூடிய சீக்கிரம் மொட்டை சுரேஷை பிக் பாஸில் எதிர்பார்க்கலாம். கொளுத்தி போடும் சம்பவமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி அடிக்கடி நிகழயுள்ளது. இதனால் மொட்டை அங்கிளின் ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர்.

More Bigg boss News


அண்மைய செய்திகள்