ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!

சென்னையில் ஆறு மாதமாக ஃபேஸ்புக் மூலம் காதலித்து வந்த இளம்பெண்ணை காவலர் திருமணம் செய்ய மறுத்ததால் மனம் உடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

by Logeswari, Nov 24, 2020, 13:36 PM IST

சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி எலிசபெத் ஆவார். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும் கிரேசி என்ற 17 வயது மகளும் உள்ளார். இன்றைய காலத்தில் முகம் பார்க்காமல் காதலிப்பது என்பது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரேசி என்பவரும் ஃபேஸ்புக்கில் 'பார்த்ததும் காதல்' என்ற வலையில் சிக்கியுள்ளார். இவர் புழல் ஜெயிலில் கண்காணிப்பு காவலராக பணிபுரிந்து வரும் காவலரை 6 மாதமாக சோசியல் மீடியாவில் காதலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் கிரேசியின் பெற்றோருக்கு தெரியவர செல் போனை மறைத்து வைத்து கிரேசியை அடித்து காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிரேசி வீட்டில் நடக்கும் கொடுமைகள் பற்றி காவலரிடம் எடுத்து கூறி நாம் இருவரும் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

கல்யாணத்துக்கு அந்த காவலர் மறுத்து விட்டதாக தெரிகிறது. காதலன் ஏமாற்றியதால் மற்றும் வீட்டில் பெற்றோர்கள் கொடுக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் மிகவும் மனம் உடைந்த கிரேசி நடு இரவில் பெற்றோருக்கு தெரியாமல் தனி அறைக்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தனக்கு தானே தீயை வைத்து கொண்டார். அவர் போட்ட கூச்சலால் பெற்றோர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் திரண்டு வந்து தீயை அணைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் கிரேசிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறனர். போலீஸ் இச்சம்பவத்தை பற்றி கிரேசியிடன் விசாரிக்கும் பொழுது 6 மாதமாக காதலித்து ஏமாற்றிய காவலர் தான் எனது தற்கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார். இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Chennai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்