ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!

by Logeswari, Apr 20, 2021, 20:33 PM IST

சென்னை ஆவடியில் உள்ள தேவாலயத்தில் ஜெபம் செய்ய வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அருகே உள்ள மோரை நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்காட் டேவிட். இவர் அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார்.

அது போல சில சமயங்களில் வீட்டிற்கு சென்று ஜெபம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்த ஏஞ்சலின் வீட்டிற்கு ஜெபம் செய்ய சென்ற டேவிட் அப்பெண்ணை தேவாலயத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் ஏஞ்சலினும் நேற்று தேவாலயத்திற்கு சென்று ஜெபம் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது டேவிட் அப்பெண்ணை பின் பக்கமாக இருந்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஏஞ்சலின் மதபோதகரை தள்ளிவிட்டு பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

You'r reading ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Chennai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை