விளையாட்டை விளையாட்டா பாருங்க.. நிஷா வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

by Mahadevan CM, Dec 14, 2020, 12:18 PM IST

ரமேஷ் எவிக்ட் ஆனதால் அர்ச்சனா & சோ அழுது கொண்டிருந்தது. நிஷா உள்ளிருந்து அழுதார். அர்ச்சனா அடக்கமாட்டாமல் அழுதார். ரியோவும், சோமும் சோகத்தை தேக்கி வைத்த முகத்தோடு இருந்தார்கள். மேக்கப் கலையாத வண்ணம் கண்ணிரை துடைத்துக் கொண்டிருந்தார் கேபி. வீட்டில் இருந்த மற்ற அனைவரும் சாதாரணமாக இருந்தனர்."நம்ம மட்டும் தான் சோகமா இருக்கோம்" என்று ரியோ புலம்பினார். "இவங்களால எப்படி சிரிக்க முடியுது" என்று சொன்னவர் சோம். " ப்ளான் பண்ணி ஜெயிச்சுட்டாங்க இல்ல, அந்த சந்தோஷம்" என்று பதில் சொன்னவர் அர்ச்சனா. "பெரிய போர் இது, ஜெயிச்சுட்டாங்க. நாமெல்லாம் என்ன கொலைக் குத்தவாளியா?" என்று டென்சன் ஆனார் ரியோ.

நிஷாவை விடுதலை செய்தார் பிக்பாஸ். வெளியே வந்து ரமேஷ் பற்றி கேட்டறிந்தார் நிஷா.

ரோபோ டாஸ்க்கின் போது நிஷா ரூல்ஸ் மீறி நடந்துகிட்டதை கடுமையா எதிர்த்ததா சொல்றாரு ரியோ. ஆனா ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் சேர்ந்து நிஷாவுக்கு சப்போர்ட் செஞ்சதா மாத்திட்டாங்க என்பது ரியோவின் கவலை. உண்மையில் அப்படிலாம் எதுவும் நடக்கலை. அனிதாவுக்கு அவர் சொன்ன காரணம் அநீதியானது என்பது தான் பிரச்சினையே. ரியோ இப்ப சொல்றதெல்லாம் மடை மாற்றும் செயல்.

ரமேஷ் நிறைய முயற்சிகள் செஞ்சதா ரியோ சொல்றாரு. ஆனா ஹவுஸ்மேட்ஸ் சேர்ந்து அவர் மேல தேவையில்லாத குற்றச்சாட்டு வச்சதாலதான் அவர் வெளிய போனதா நினைக்கறாரு ரியோ. எவிக்‌ஷன் என்பது மக்களின் தீர்ப்பு. வீட்டுக்குள்ள இருக்கறவங்க அப்படித்தான் அதை எடுத்துக்கனும். நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் தான் வீட்டுக்குள்ள இருக்கறவங்களை விட நிறைய தெரிஞ்சவங்க. அதை புரிஞ்சுக்காம குரூப்பா சேர்ந்து மத்தவங்க மேல கோபப்படறாங்க.

அனிதாவை தவிர வேற யாரும் ரியோ வைத்தது போன்ற குற்றச்சாட்டை தட்டி கேட்டிருக்க மாட்டாங்க என்பது பாலாவின் கருத்து. அதை அனிதாவும் ஏற்றுக் கொள்கிறார். கூடவே "எனக்கு நடந்தா நான் கண்டிப்பா கேட்ருப்பேன்" என்று பாலா சொன்னதை அனிதாவும் ஏற்றுக்கொள்கிறார்.

"அர்ச்சனாவை யாருமே டார்கெட் செய்யலை, இப்ப வரைக்குமவங்க உண்மையான முகம் வெளிய தெரியலை, 70 நாளாகியும் முகமூடி போட்ருக்காங்க" என்று ஆரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா.

அனிதா மிக நுட்பமாக இந்த விளையாட்டை கவனிக்கிறார். அதனால் தான் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரை பற்றிய அவரின் அனுமானம் சரியாகவே இருக்கிறது. கமல் சார் பேசும் போது அவர் கவனிப்பதை அடிக்கடி காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆரி, பாலா, ரம்யாவை விட இந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, அதிலிருந்தே தன்னை காத்துக் கொள்கிறார். அவர் நாமினேஷனில் இருக்கும் போது அவரது கவனம் சிதறுகிறது. வெளியே போய்விடுவோமோ என்ற பயம் அவரை ஆட்டிப் படைக்கிறது. நாமினேஷனில் இல்லாத வாரங்களில் எந்தக் குழப்பமும் இல்லாமல் அவர் மிகத் தெளிவாக இருப்பதை உணர முடிகிறது.

அர்ச்சனா பற்றிய அனிதாவின் ஸ்டேட்மெண்ட் சரியா? என்பதை பற்றி யோசித்து எழுத வேண்டும்.

70 வது நாள் என்பதை பெருமிதமாக அறிவித்தபடி அட்டகாச எண்ட்ரி கொடுத்தார் ஆண்டவர்.

தனித்தன்மையுடன் இருப்பதை பற்றி அவர் வீட்டு உதாரணங்கள் மட்டும் இல்லாமல் மற்ற கலைஞர்கள் திறமைகளை பற்றியும் எடுத்துச் சொன்னார். வீட்டில் உள்ளவர்கள் தனித்தனியா விளையாடாம, குழுவா சேர்ந்து விளையாடும் போது ஏற்படும் பாதிப்புகள் பத்தி லேசா ஹிண்ட் கொடுத்தார்.

அகத்திற்குள் போன போது அனிதாவும், பாலாவும் லேட்டா வந்தாங்க. 70வது நாளை நினைவுபடுத்தும் போது ரம்யா அதை கணக்கு வச்சுருக்கறதை சுட்டிக்காட்டினார்.

"மந்தமாக இருக்கறதுக்கும், மந்தைத்தனத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை", " இதில் ஏதாவது அவமானம் நேர்ந்தது என்றால் அது விபத்தல்ல" என்று சொன்னது ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் புரியல. இதுக்கு நேரடியாவே திட்டிருக்கலாம் கமல் சார்.

பாலாஜி அணி, அர்ச்சனா அணி எனபிருந்து உக்காரச் சொன்னார். ஒரு அணியில் இருந்துகொண்டு மற்றொரு அணிக்காக விளையாடினதை பத்தி தான் முதல் பஞ்சாயத்து. இதை பத்தி பாலா கிட்ட கேட்ட போது ரியோவை நோக்கி தான் கை காமிச்சாரு. ஆனா அவர் காரணமா சொன்னது வேற விஷயமா இருந்தது. ஏன்னா கேமுக்கு நடுவுல ஆரி, அனிதா, ஆஜித், கிட்ட ரியோ சேப் கேம் ஆடறாரு, எதிர் டீம் ஆட்களை சேவ் பண்றாரோனு சந்தேகபட்டது பாலா தான். ஆனா அந்த சந்தேமத்தை பாலா வெளிய சொல்லலை. ஒருவேளை பாலாவே சொன்ன மாதிரி "முழுசா தெரியாத ஒரு விஷயத்தை பத்தி பேச வேண்டாம்" னு யோசிச்சாரோ என்னவோ.

பாலா வெளிப்படையா சொல்லாம போனாலும் கமல் சார் நேரடியாவே ரியோ கிட்ட கேள்வி கேட்டாரு. தன்னை பத்தி தான் கேக்கறாங்கனு தெரிஞ்சதால கமல் சார் ரியோ பேரை சொல்றதுக்கு முன்னாடியே கை தூக்கிட்டே இருந்தார். "ஏன் நீங்களா வந்து மாட்டிக்கிறிங்கனு" கமல் சாரே கிண்டல் செஞ்சாரு. ஆனா அப்பவும் ரியோவுக்கு புரியலை.

நேரடியா கேட்ட போது கூட மழுப்பலா பதில் சொல்லிட்டு இருந்தார் ரியோ. பட்டப்பெயர் வைச்சு கூப்பிடும் போது சம்பந்தபட்டவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடறாங்க, அந்த இடத்துல ஆரி இருந்தாலும் அப்படித் தான் செஞ்சுருப்பேன்னு ரியோ சொல்றாரு. "அதாவது எதிர் அணிக்கு சாதகமாக தான் பேசிருப்பீங்களா" என்று கமல் சார் கேட்டது செம்ம நக்கல். அர்ச்சனா கிட்ட இந்த விஷயத்தை கேக்கும் போது பாலாவை இதுல இழுத்து விட்டாங்க. அர்ச்சனாவை முட்டையை சாப்பிட சொன்னபோது அதை பாலா தடுத்ததை சொன்னாங்க. அதை அனுதாபம்னு சொல்லலாம்னு புல்ஸ்டாப் வச்சுட்டாரு கமல் சார். அர்ச்சனாவுக்கு முட்டையை வச்சு பிரேக் செய்யலாம்னு சொன்னதே நான் தான்னு ரியோ சொல்றாரு. அர்ச்சனாவுக்கு இந்த அட்வைஸ் கொடுத்தீங்க, கேப்ரியல்லாவுக்கு என்ன அட்வைஸ் கொடுத்தீங்கனு நேரடியா ஒரு யார்க்கரை போட்டாரு கமல் சார்.

அப்பவும் தெரியாத மாதிரி தான் இருந்தார் ரியோ. கார்டன் ஏரியாவுல என்ன பேசினீங்கனு கேட்டதும் தான் அதைப் பத்தி பேசினாரு.

ஆக்சுவலா டாஸ்க் பஸ்ஸர் அடிச்சதும் பேசின விஷயம் அது. அந்த இடத்துல பேசும் போது கேப்பி கிட்ட ஆரி பேசி முடிச்சுட்டாரு. ஆரி பேசினதை பத்தி கேப்பி புலம்பும் போது தான், ரியோ ஒரு விஷயத்தை சொல்றாரு. "உன்னை காப்பாத்த ட்ரை பண்றோம்னு உனக்கு தெரியலையா" னு கேட்டது ரியோ. அது பிரேக்ல பேசப்பட்ட விஷயம். ஆனா டாஸ்க் நடக்கும் போது, "இப்பவே சிரிச்சுடு, அடுத்து பெரிய ஆப்பு இருக்குனு" சொன்னதா ரியோவோட ஸ்டேட்மெண்ட். ஆனா கமல் சார் கேட்டது அதை பத்தி இல்ல.

ரியோ பேசும் போது அந்த இடத்துல அர்ச்சனா குரூப் மொத்தமும் இருந்தாங்க. கமல் சார் நேரடியா கேக்கற வரைக்கும் குறுக்க பேசிட்டு இருந்த அர்ச்சனா, அவர் எதை பத்தி கேக்கறார்னு தெளிவா தெரிஞ்ச உடனே அமைதியாகிட்டாங்க.

கமல் சார் முன்னாடி சொன்னது பொய். அப்படி பொய்யும் சொல்லிட்டு பிரேக்ல ஆரி கூட சண்டை போட்டதை என்னான்னு சொல்ல. கமல் சார் கேட்டதுக்கு ஆரி தன்னோட கருத்தை சொல்றாரு. நட்பு, பாசம்லாம் கேம்க்குள்ள வர வேண்டாம், விளையாட்டை விளையாட்டா பாருங்கனு ஆரி சொன்ன விஷயம். அதெப்படி ஆரி சொல்லலாம்னு சண்டைக்கு நின்னாங்க கேப்பி. அதுக்கு அர்ச்சனா டீம் மொத்தமும் சப்போர்ட். அப்ப ரியோ ஒரு லாஜிக் சொல்றாரு "இப்பவே சிரிச்சுடு, அடுத்து பெரிய ஆப்பு இருக்குனு" நான் சொல்லி கேப்பி அப்பவே சிரிச்சுருந்தா அது பிரேக் ஆனா மாதிரி தானே அர்த்தம்னு ரியோ சொல்றாரு. உடனே அர்ச்சனா குரூப்ல எல்லாரும் அதை பிடிச்சுட்டாங்க. நீங்க பிரேக்ல பேசினதா தான் கமல் சார் சொன்னாருனு சரியான பாயிண்டை எடுத்துச் சொன்னாரு பாலா. அதோட இல்லாமா டென்சன் ஆகாதீங்கனு ஆரிகிட்ட சொன்னது செம்ம காமெடி. பாலா சொன்னதை கேட்டு ஆரிக்கே சிரிப்பு வந்துருச்சு.

ஷோ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அனிதா முகமூடியை பத்தி பேசிட்டு இருந்ததை கிரியேட்டிவ் டீம் பார்த்திருப்பாங்க போல. அதையே ஒரு கேள்வியாக்கிட்டாங்க. 70 நாளாகியும் யார் இன்னும் முகமூடியை கழட்டலைனு கேட்ட கேள்விக்கு பெரும்பாலும் யாரும் இல்லைனு தான் பதில் வந்தது. ஆரி தன் முறை வரும் போது அர்ச்சனா, ரியோ பேரை சொன்னார். காரணமா அவர் சொன்னது அனிதா முன்னாடியே பேசின விஷயத்தை இவர் கமல் சார் முன்னாடி பேசினார். அனிதாவும் அர்ச்சனா பேரைத் தான் சொன்னாங்க. பாலா கிட்ட கேக்கும் போது எனக்குத் தெரியலைனு சொன்னதும் எல்லாருமே சிரிச்சுட்டாங்க.

பைனல்ஸ்க்கு வரமாட்டாங்கனு நினைக்கற ரெண்டு பேரை எழுதி வைக்கனும். அதை பத்தின விவாதம் நடந்தது. பாலா, ஆஜித், ரம்யா 3 பேரை மட்டும் யாருமே சொல்லலை. மேகிசமம் அர்ச்சனா பேர் வந்தது.

எவிக்‌ஷன் ப்ராஸஸ்ல ரம்யா, கேப்பி, சோம் 3 பேரும் சேவ் ஆனாங்க. இறுதியா நிஷா எவிக்டட். அதுக்கப்புறம் என்ன நடந்ததுனு நான் சொல்லவும் வேண்டுமா?

வெளியே வந்த நிஷா கிட்ட பாசிட்டிவா பேசி வெளியே அனுப்பி வைத்தார்.

இந்த சீசனோட மிகப்பெரிய ஏமாற்றம் நிஷா தான். அதுக்கு முழுமுதற் காரணமும் அவங்க தான். தேவையே இல்லாம ஒரு எமோஷனல் ட்ராமாக்குள்ள மாட்டிகிட்டாங்க. எவ்வளவு வாய்ப்பு இருந்தும் மாறவே இல்லை. இந்த விஷயத்துல குற்றவாளின்னா அது அர்ச்சனா மட்டும் தான். இதை அர்ச்சனா கிட்ட யாராவது குத்திக் காட்டனும்.

பாலா எப்பவும் புயல் மாதிரி இருப்பாரு, இப்ப புயலோட மையம் மாதிரி ஆகிட்டாருனு ஆடியன்ஸ் கிட்ட மட்டும் சொல்லி சந்தோஷபட்டார் கமல் சார். ஒருவேளை கேப்டன்சி டாஸ்க் பத்தி பேசிருந்தா பாலாவுக்கு பாராட்டு கிடைச்சுருக்கும். அதுக்கு நேரமில்லாம போனதால "மய்யமா" பாராட்டிட்டாரு போல.

பாலா, அனிதா, ஆரி மேல செம்ம கடுப்புல இருக்காங்க அர்ச்சனா. அன்பு குரூப் உடைக்கப்பட்டது என்ன விளைவுகளை ஏற்படுத்தும், இந்த வார நாமினேஷன் எப்படியிருக்கும்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

More Bigg boss News


அண்மைய செய்திகள்