5 முறை தேசிய விருது வென்ற சினிமா ஆர்ட் டைரக்டர் காலமானார்..

by Chandru, Dec 14, 2020, 13:13 PM IST

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருத மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 55 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநரும், காஸ்ட்யூம் டிசைனருமான பி கிருஷ்ண மூர்த்தி நேற்று இரவு காலமானார். 3 முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனரின் இறுதிச் சடங்குகள் சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கும்.

பாரதிராஜாவின் 'நாடோடி தென்றல், பாலு மகேந்திராவின் 'வண்ண வண்ண பூக்கள்' போன்ற தமிழ் படங்களுக்கு பெயர் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது சமீபத்திய படங்களில் 'இம்சை அரசன் 23வது புலிகேசி' அடங்கும். இதற்காக அவர் ஒரு மாநில விருதை வென்றார்.

2000 ஆம் ஆண்டில் ஞான ராஜ சேகரன் இயக்கிய சயாஜி ஷிண்டே மற்றும் தேவயானி நடித்த தமிழ் திரைப்படமான 'பாரதி' திரைப்படத்தில் அவர் சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்புக் கான இரண்டு தேசிய விருதும் பிற படங்களுக்குமாக சேர்த்து மொத்தம் 5 தேசிய விருதுகள் வென்றுள்ளார்.ஆர்ட் டைரக்டர் கிருஷ்ண மூர்த்தி மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

என் கலைதுறையில்
என் கண்களில்
என் இன்னொரு
உணர்வை இழந்திருக்கிறேன்.
கிருஷ்ணமூர்த்தியின்
மறைவு நம்ப முடியா ஒன்று...
வாடிதவிக்கும் அவரது
குடும்பத்தினருக்கு
என் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டம் என்பது துக்கங்களையும் சோகங்களையும் திரையுலகுக்கு நிறையவே தந்திருக்கிறது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய தமிழுக்குப் பெருமை சேர்த்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாபி இந்தி படத்தில் 70களில் நடிக்கத் தொடங்கி பின்னர் இந்தி திரையுலகில் 80, 90 கள் வரை காதல் ரோமியோவாக வலம் வந்த ரிஷி கபூர். அர்த்தமுள்ள நடிகர் எனப் பாராட்டப்பெற்ற இர்பான் கான், கன்னட இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் எனத் திரையுலகிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருந்தவர்கள் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். தற்போது திரையுலகுக்கு இழப்பாக ஆர்ட் டைரக்டர் கிருஷமூர்த்தியின் மறைவு அமைந்திருக்கிறது.

You'r reading 5 முறை தேசிய விருது வென்ற சினிமா ஆர்ட் டைரக்டர் காலமானார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை