ரம்யாவும், அனிதாவும் விஜய் பாட்டு வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் கில்லி படத்தில் இருந்து "கொக்கரகொக்கரக்கோ" பாட்டு போட்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் கவனத்திற்கு.
இந்த வாரம் கிச்சன், வெசல் வாஷிங் இரண்டையும் சேர்த்து ஒரே டீமாக 6 பேரை கொடுத்திருந்தார் ரம்யா. அதில் ஆஜித்தும், ஷிவானியும் இருக்காங்க. சமையல், பாத்திரம் தேய்க்கறது ரெண்டு வேலையும் சேர்த்து செய்யறதால தனக்குனு தனித்துவம் எதுவும் இருக்காதுனு நினைக்கறாங்க ஷிவானி. அதிலும் பெரும்பாலான வேலைகளை அர்ச்சனாவே செய்யறாங்க. கூடவே வயசுல சின்னப்பொண்ணுங்கறதால ஷிவானி பேசவோ, கருத்து சொல்லவோ வாய்ப்பு இருக்காது. எப்பவுமே கிச்சன் டீம்ல இருந்துட்டே இருக்கறா மாதிரி ஒரு பீலிங் இருக்கு ஷிவானிக்கு. இன்னொரு முக்கியமான விஷயம், தன்னோட நிறை, குறைகள் வெளியே தெரியாதுனு நினைக்கறாங்க ஷிவானி. அதனால வெசல் வாஷிங் டீமை தனியா பிரிச்சுக் கொடுக்கச் சொல்லி கேப்டன் கிட்ட கேக்கறாங்க ஷிவானி.
"இதை எங்கிட்டயே டிஸ்கஸ் பண்ணிருக்கலாமேனு" சொல்லிட்டே வந்தாங்க அர்ச்சனா. ஆனா மனசுல தோணினதை சரியா சொல்லத் தெரியல ஷிவானிக்கு. இந்த வாரம் கிச்சன்ல இருக்க எனக்கு மைண்ட்செட் இல்ல, அதனால வெசல் வாஷிங் மட்டும் பண்ணிக்கறேனு சொன்னதை அர்ச்சனா அவ்வளவா ரசிக்கலை. ஆனாலும் ஆஜித் கிட்டயும் கருத்து கேட்டுட்டு தனி டீமா மாத்த முடிவு எடுக்கறாங்க ரம்யா.
இடையில் டீம் மாத்தினதை கேப்டன்சி குறைபாடா பேச வாய்ப்பு இருக்கறதால, ஒரு டீம் மீட்டிங் போட்டு நடந்த விஷயத்தை சொல்றாங்க. வெசல் வாஷிங் டீம்ல 2 பேர் மட்டும் தான். தேவைப்பட்டா பாலாவும், ரம்யாவும் வாலண்டியரா ஹெல்ப் செய்யறதா சொன்னது ஆரிக்கு பிடிக்கலை. வாலண்டியர்ஸோட பர்பாமன்ஸ் பெஸ்ட், வொர்ஸ்ட் செலக்ட் செய்யும் போது பேசக்கூடாதுனு தன்னோட கருத்தை சொல்றாரு. அதுக்கு பாலா உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவிக்கறாங்க. தன்னோட கேப்டன்சில இதே விஷயத்தை பாலா சொன்னதாகவும், இன்னிக்கு மாத்தி பேசறதாகவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கறாரு ஆரி.
ஆரி கேப்டன் ஷிப்ல இருந்த போது இந்த வீட்ல 15 பேர் இருந்தாங்க. ஒவ்வொரு டீமுக்கும் தேவையான ஆட்கள் இருப்பாங்க. அதை மீறி யாரும் வாலண்டியர் செய்ய வேண்டியதில்லை. ஏன்னா அப்படி செய்யும் போது இன்னொருத்தரோட வேலையை செய்யறா மாதிரி ஆகும். அதனால அப்படி சொன்னதா பாலா விளக்கம் கொடுக்கறாரு. இப்ப வீட்ல 10 பேர் தான் இருக்காங்க. ஆனா வேலைகள் அதே தான். அதனால இப்ப வாலண்டியர் செய்யறது தேவை தான்.
ஷிவானி, ஆஜித் ரெண்டு பேருக்கும் பாலாவும், ரம்யாவும் பேவரட்டிசம் செய்யறதா நினைக்கறாரு போல. வாலண்டியர் பர்பாமன்ஸை இது வரைக்கும் யாரும் பெஸ்ட் வொர்ஸ்ட் பர்பாமன்ஸ்க்கு பேசினதில்லைனு சொல்றாங்க அர்ச்சனா. 6 ஷிப்ட்ல க்ளீன் செய்யனும்னு ரம்யா பேசினதையும் ஆரி ரசிக்கல. பாத்திரம் தேய்க்கறதுக்கு எதுக்கு இவ்வளவு சீன் அப்படினு நினைச்சு கோவமா எந்திரிச்சு போய்டறாரு.
ஆனா இந்த விஷயம் அர்ச்சனா தன்னோட குரூப்ல டிஸ்கஸ் பண்றாங்க. அப்ப கேப்பி தான் நிறைய பேசறாங்க. "அவளால வேலை செய்ய முடியல", " வேலை செய்யறதுக்கு பயம்", "வொர்ஸ்ட் பார்பாமன்ஸ்னு பேர் வாங்கிருவோம்னு பயம்" இப்படி வரிசையா பேசிட்டு இருந்தாங்க. ரியோ, சோம்லாம் எந்தக் கருத்தும் சொல்லாம இருந்தாங்க.
இதுல இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் கேப்பி இதை சாதாரணமா எடுத்துக்கலை. ஏன்னு தான் தெரியல.
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் கோழிப்பண்ணை. ஒரு பெரிய கோழிமுட்டை. அதுல பேர் எழுதிருக்கும். இது பல சுற்றுகளா நடக்கும் போட்டி. ஒவ்வொரு சுற்றுலேயும் இருவர் கோழிகளாகவும், மற்றவர்கள் முட்டையை திருட நினைக்கும் நரிகளாகவும் இருப்பார்கள். முட்டையை தொட்டால போதும், கோழியாக இருப்பவர் அந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுவார். அதே போல் முட்டையை பாதுகாக்கும் விதத்தில் நரியின் வாலை பிடித்துவிட்டால், நரியாக இருப்பவர் அந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுவார். இவையில்லாமல் ஒவ்வொருவருக்கும் 200 பிக்பாஸ் கரன்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து முட்டையை பாதுகாக்க நரிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். நரிகள் முட்டையை தொடும் பட்சத்தில் அந்த 200 பிக்பாஸ் கரன்சிகளும் நரிகளுக்கு சென்று விடும். ஒரு நேரத்தில் ஒரு நரி மட்டும் முட்டையை அட்டாக் செய்ய வேண்டும். அதே சம்யம் கோழி வட்டத்தை விட்டு விலகும் பட்சத்தில் எல்லா நரிகளும் முட்டையை அட்டாக் செய்யலாம்.
சில முக்கியமான டாஸ்க் நடக்கும் போது ரியோ தான் விதிமுறைகளை படிக்கறாரு. ஆனா அதை சரியா புரிஞ்சுகிட்டு ஹவுஸ்மேட்ஸ் கிட்ட விளக்கறதில்லை. அதனாலேயே டாஸ்க் நடக்கும் போது நிறைய பிரச்சினைகள் வருது. ஹவுஸ்மேட்ஸ் ரூல்ஸை மீறி நடக்கும் போது ரியோ வேடிக்கை தான் பார்க்கறாரு. அதே மாதிரி உறுதியான முடுவை எடுக்கறதே இல்லை. யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கறாரு. மத்தவங்க கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்ஜனும்ங்கற அவரோட எண்ணம் சரி தான். ஆனா இறுதி முடிவு அவரோடதா இருக்கனும். ஒவ்வொரு முறையும் கேம் தப்பா போகும் போது எல்லாரும் ரியோவை பார்க்க வேண்டியிருக்கு. ஒருவேளை பிரச்சினை வருதுங்கறதுக்காகவே ரியோவுக்கு பொறுப்பு கொடுக்கறாங்களோனு தோணுது.
இந்த டாஸ்க்லேயும் அப்படி சில தவறான புரிதல்கள் இருந்தது. ஒரே நேரத்துல ஒரு நரி தான் அட்டாக் செய்யனும்ங்கற விதியை எல்லாருமே தவறா புரிஞ்சுகிட்டாங்க. முக்கியமா ஆரி. கூட்டமா வந்து அட்டாக் செய்யக் கூடாதுனு அவர் சொன்னது கரெக்ட். ஆனா யார் அட்டாக் செய்ய வரப்போறாங்கனு முன்னாடியே சொல்லிட்டு வரனும்னு அவர் செய்த ஆர்கியூமெண்ட் தவறானது. அதுக்காக அவர் கோபப்பட்டதும் அர்த்தமற்றது.
நரிகள் இணைந்து ஆட வேண்டிய கேம் இது. ஒருத்தரை முன்னாடி நிறுத்தி, தந்திரமா செயல்பட்டு கோழிகளை ஏமாத்தி முட்டையை தொடுவது தான் டாஸ்க். அதாவது எந்த நரி முட்டையை அட்டாக் செய்ய வரும்னு கோழிக்கு தெரியாது. அதே மாதிரி எந்த நரி கூட என்ன மாதிரியான டீலிங்ல இருக்குனு மத்த நரிகளுக்கு தெரியாது. ஆனா இவங்க எல்லாரும் சேர்ந்து வழக்கம் போல சொதப்புனது தான் மிச்சம்.
முதல் சுற்றுல ஆரியும், பாலாஜியும் கோழிகள். ரெண்டு பேருமே தனித்தனியா டீலிங் பேசிட்டு இருந்தாங்க. பாலாஜி ஒரு படி மேல போய் ஒரு டீமையே டீலிங்ல கொண்டு வந்தார். ஆனா நரிகள் எப்படி அட்டாக் செய்யனும்ங்கறதுல குழப்பம் இருந்ததால கேம் சுவாரஸ்யமா இல்ல. பஸ்ஸர் அடிச்ச உடனே பாலாஜி ஓடிப்போய் ஆஜித்தோட வாலை எடுத்துட்டு வந்துட்டாரு. அது சரியானு விவாதம் போய்ட்டே இருந்தது. முதல் சுற்றுல நரியாக அனிதாவும், கோழியாக பாலாவும் வின்னர்.
ரெண்டாவது சுற்றுல ஆஜித் கூட டீலிங் போட்டாரு பாலா. பாலாவோட முட்டையை ஆஜித் எடுக்கறதாகவும், ஆஜித் வரும் போது பாலா எடுக்கறதாகவும் டீலிங். ஆனா முட்டை மேல உக்காந்துட்டு இருந்தப்போ எதிர்பாராதவிதமா பாலாவோட முட்டை உடைஞ்சு போச்சு. அதனால பாலாவால அடுத்த சுற்றுல கலந்துக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் மூணு சுற்றுனு நினைக்கிறேன். இதுல பாலாஜி நலா விளையாடிட்டு இருந்ததா பாராட்டினாரு பிக்பாஸ். கிட்டத்தட்ட அது ஒரு ஹிண்ட் மாதிரி கமல் சார் பாஷைல சொல்லனும்னா டிப். பாலா ஓடிப் போய் நரியோட வாலை பிடுங்கினது சரியானது. அதே மாதிரி பாலாவோட டீலிங்கும் சரியானது. இது மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு புரிஞ்சுதான்னு தான் தெரியல.
ரம்யாவும் டீலிங்லாம் போட்டாங்க. ஆரியும், பாலாவும் நரியா இருந்ததால அவங்கள்ல ஒருத்தர் முதல்ல அட்டாக் செய்யறதா பேசிகிட்டாங்க. ஆனா பஸ்ஸர் அடிச்சதும் ஆரி முதல்ல போய் ரம்யாவோட முட்டையை எடுத்துட்டாரு. இந்த பக்கம் ஆஜித் கோழியா இருந்தார். பஸ்ஸர் அடிக்கும் போது ஆஜித் பக்கத்துல நின்னுட்டு இருந்த கேப்பி, பஸ்ஸர் அடிச்ச அடுத்த நொடில ஆஜித் முட்டையை எடுத்துட்டாங்க. அது ஆஜித்துக்கு சுத்தமா ஏத்துக்க முடியல. கேப்பி ப்ளேயிங் ஏரியால இல்லனு ஆஜித் நினைக்கறாரு. ஆனா கேப்பி அதை ஒத்துக்கலை.
ஒவ்வொரு சுற்றுக்கும் நரிகள் இணைந்து பேசனும். ஆனா பேசினாலும் அதுக்கு மாறாக நடந்துக்கறாங்க.
கடைசி வரைக்கும் ரூல்ஸே புரியாம பஞ்சாயத்து போய்ட்டு இருந்தது. கடைசியா எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வராங்க. யார் போய் முட்டையை அட்டாக் செய்யறதுனு நரிகள் முடிவு செய்யும். ஆனா அது கோழிகளுக்கு தெரியாது. அதோட நேற்றைய நாள் முடிந்தது.
வீட்டுக்குள்ள இருக்கற ஜனநாயகத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு வீட்டில் இருப்பவர்களையே சேரும்னு கமல் சார் சொல்லிட்டு தான் இருக்கார். ஒரு டாஸ்க் நடக்கும் போது அடிப்படையான விதிகளை மட்டும் தான் பிக்பாஸ் கொடுப்பாரு. அதுக்கப்புறம் தேவையான விதிகளை உருவாக்க வேண்டியது ஹவுஸ்மேட்ஸோட கடமை. அப்படி உருவாக்கப்படும் விதிகளை பெரும்பான்மையான ஹவுஸ்மேட்ஸ் ஏத்துக்கனும். அப்போ தான் கேம்ல சுவாரஸ்யம் இருக்கும். வெற்றி தோல்விகள் சரிசமமா இருக்கும். உதாரணத்துக்கு ரேங்கிங் கொடுத்த டாஸ்க் எடுத்துக்கலாம். எதன் அடிப்படையில் ரேங்கிங் கொடுக்கனும்ங்கறதை ஹவுஸ்மேட்ஸ் கலந்து பேசி ஒருமித்த கருத்துக்கு வரனும். ஜனநாயக முறைப்படி மெஜாரிட்டியா வர கருத்தை மத்தவங்க ஏத்துக்கனும். கூடவே கொஞ்சமாவது கிரியேட்டிவிட்டி இருக்கனும். அப்பதான் ஆடியன்ஸ்க்கும் சுவாரஸ்யம் இருக்கும். இந்த சீசன்ல அது நடக்கறதே இல்லை. எல்லா டாஸ்க்லேயும் சண்டை மட்டும் போட்டு சுவாரஸ்யமே இல்லாமத் தான் விளையாடறாங்க.
நாளைக்கு என்ன பஞ்சாயாத்து வரும்னு பார்த்துடலாம்.