ஜெயிலுக்கு போகும் ஷிவானி-கேப்பி,ஆஜீத்தின் நடிப்பு - பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 74

Advertisement

மன்னார்குடி கலகலக்க பாடலுடன் தொடங்கியது நாள். டாஸ்க் முடிந்ததால் எல்லாரும் ஜாலியா அங்கங்க சுத்திட்டு இருந்தாங்க.டாஸ்க்கை சண்டை இல்லாம விளையாடிருக்கலாம்னு பாலா சொல்லிட்டு இருந்தாரு. நானும் முதல்லேயே சொன்னேன், யாரும் கேக்கலை, அர்ச்சனா தான் கத்திட்டே இருந்ததா ஆரியோட ஸ்டேட்மெண்ட். சொல்றது ஈசி, விளையாடும் போது கஷ்டம்னு அனிதா சொல்றாங்க.

ஆரி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கறதா அர்ச்சனாவும், சோம் பேசிட்டு இருக்காங்க. ஆனா இந்த வாரம் முழுவதுமே ஆரி கொஞ்சம் உக்கிரமா தான் இருந்தார். போன ரெண்டு வாரத்துல இருந்த அமைதி இந்த வாரம் இல்லை. ஒருவேளை அமைதியா இருந்தா வொர்ஸ்ட் பர்பாமர்னு சொல்லிடுவாங்கனு யோசிச்சு, இந்த வாரம் இப்படி இருந்தாருனு நினைக்கிறேன்.

ரியோ, ஜெயிலுக்குள்ள இருக்கற பாத்ரூமூக்கு போயிருந்த போது, சோம், கேப்பி ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே இருந்து தாழ்ப்பாள் போட்டு விளையாடறாங்க. கதவை திறக்க முயற்சி செய்யற ரியோ, தாழ்ப்பாளை உடைச்சுடறாரு. அதுக்கு பிக்பாஸ் கூப்பிட்டு கலாய்ச்சிட்டு இருந்தாரு.

அதே மாதிரி ரம்யாவும், அனிதாவும்ரொம்ப போரடிக்குதுனு சொன்ன உடனே ரம்யாவை கூப்பிட்டு பேசினாரு பிக்பாஸ்.

அடுத்து இந்த வார நாமினேஷன்ஸ். அதுக்கு முன்னாடி ஒவ்வொரத்தர் கிட்டயும் எவ்வளவு கரன்சி இருக்குனு சொல்லச் சொன்னாரு பிக்பாஸ். பாலா 460 ரூபா வச்சுருந்து முதல் இடத்துல இருந்தார். அடுத்து பெஸ்ட் ரம்யானு நினைக்கிறேன். ரியோ கிட்ட ஒன்னுமே இல்லை. பாலாவுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் கிடைக்கும். ஒரு வேளை எவிக்‌ஷன்ல இருந்து ஒருத்தரை காப்பாத்தலாம்னு ஒரு பவர் கிடைச்சு, ஷிவானியை காப்பாத்துவாருனு நினைக்கிறேன்.

டாஸ்க்ல பெஸ்ட் பர்பாமன்ஸ்க்கு பாலாவும், அர்ச்சனாவும் செலக்ட் ஆனாங்க.

வாரம் முழுவதும் பெஸ்ட் பர்பாமன்ஸ்க்கு ரம்யா போட்டியே இல்லாம தேர்வானாங்க.

வொர்ஸ்ட் பர்பாமன்ஸ் வரும் போது ஷிவானியும், கேப்பியும் செலக்ட் ஆனாங்க. அனிதா பேரைச் சொல்லி பாலா கொடுத்த ரீசன்ஸ் அனிதாவுக்கு பிடிக்கலை. ஷிவானிக்கு ஆரியும், கேப்பியும் கொடுத்த ரீசன்ஸ் ஷிவானிக்கு பிடிக்கல.

ஷிவானியும், கேப்பியும் ஜெயிலுக்கு போறாங்க.

ஷிவானி எவிக்ட் ஆகிட்டா பாலா லவ் பெட்ல சேர்ந்துடுவாருனு அனிதா சொன்னதை ஆரியும் ஆமோதிக்கறாரு. இதுல என்ன லாஜிக்னு தான் தெரியல. லவ் பெட், குரூப்பிசம்லாம் ஆரம்பத்துல இருந்து எதிர்த்துட்டு இருக்கறது பாலா தான். இத்தனை நாளைக்கு அப்புறம் பாலா அங்க போய் எதுக்கு சேரனும். அதுவும் ஆரிக்கு அடுத்து சேவ் ஆகறது பாலா தான். அதனால நாமினேஷன் வந்தாலும் பிரச்சினை இல்லை. டாஸ்க் எப்பவுமே சிறப்பா செய்யறது பாலா தான். அதனால பெஸ்ட் பர்பாமன்ஸ் கிடைசுட்டுத் தான் இருக்கு. அப்படியிருக்கும் போது பாலாவுக்கு எதுக்கு லவ் பெட்டுனு தெரியல.

பாலா, ரம்யா, ஆஜித் 3 பேரும் சேர்ந்து ஆரியை பத்தி பேசறாங்க.இந்த வீட்ல இருக்க தகுதியே இல்லைனு எல்லார் கிட்டயும் சொல்லிருக்காரு ஆரி. அதைப் பத்தி பேசி சிரிச்சுட்டு இருந்தாங்க. மறுபடியும் யாரையோ பார்த்து தகுதி இல்லைனு சொல்லிருக்காரு ஆரி. அது வழக்கம் போல டெலிகாஸ்ட் ஆகலை. வழக்கம் போல டிஸ்கஷனுக்கும் வராது.

அனிதாவோட ஹஸ்பெண்ட் கிட்ட கேமரா வழியா பேசிட்டு இருந்தாங்க அர்ச்சனா. "நீ தெய்வம்யா" னு அவரை பார்த்து நாம சொல்றதை அர்ச்சனாவும் சொல்லிட்டு இருந்தாங்க. பின்னாடி நின்னு தன்னோட ட்ரேடமார்க் சிரிப்பை சிரிச்சுட்டே இருந்தாங்க அனிதா. அப்புறம் கிச்சன்ல நின்னு ஏதோ லந்து பண்ண, அனிதாவை தூக்கிட்டு போய் பெட்ல போட்டாங்க அர்ச்சனா. ஏதோ ஜாலி மூட்ல இருந்ததால சிரிச்சுட்டே இருந்தாங்க அனிதா.

அடுத்து நிப்பான் பெயிண்ட்ஸ் வழங்கிய டாஸ்க்.

கன்பெஷன் ரூம் வந்த ஆஜித் அழாம ஜாலியா பேசிட்டு போனாரு. தனக்கு நடிப்பு தான் பேஷன்னு சொன்ன ஆஜித்தை ஒரு சீன் சொல்லி நடிச்சு காமிக்கச் சொன்னார் பிக்பாஸ். ஆஜித்தும் அருமையா பண்ணினான். குட் ஒன்.

அடுத்து ஆரி கன்பெஷன் ரூம் வந்தாரு.

75 நாள் ஆகப்போகுது. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா கொண்டு போகலாம். அனேகமா அடுத்த வாரம் கோல்டன் டிக்கெட் டாஸ்க் நடக்கும்னு எதிர்பார்க்கலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>