எவிக்ஷன் டே... காதி கோட்டுடன் ஆண்டவர் எண்ட்ரி. இந்த கோவிட் காலத்தில் நெகட்டிவ்னு நியூஸ் வந்தா தான் பாசிட்டிவ், பாசிட்டிவ்னு நியூஸ் வந்தா நெகட்டிவ் என்றபடி அகம் டிவி வழியே அகத்திற்குள்.
இந்த வார டாஸ்க் பற்றிய கருத்துக்கள். பாலா எடுத்த ஸ்ட்ராட்டஜி ரூல்ஸ் பற்றி கேட்டறிந்தார். பாலாவின் உயரம், அகலம் அதிகமாக இருப்பதால் அவர் நின்றாலே மற்றவர்களை தடுப்பது போல் இருக்குமென்று பாலாவை டிபெண்ட் செய்தார். உண்மையில் அந்த டாஸ்க்கை பற்றி பேச எதுவுமே இல்லை.
டீம் பிரிக்கும் போது கேப்பி முரண்டு பிடித்ததை பற்றி கேட்ட போது கேப்பி உண்மையை சொன்னார். சோமையும், கேப்பியையும் பிரிக்க சதி, ஆரியையும், சோமையும் பிரிக்க சதி என்றெல்லாம் யோசித்திருக்கிறார். பாலாவின் ஸ்ட்ராட்டஜி இது என்பதை முன்பே கணித்ததால் தான் அப்படி நடந்து கொண்டார் கேப்பி.கேப்பியை பொறுத்தவரை ஆரி கூட ஓக்கே தான் ஆனால் பாலாவை முழுவதுமாக வெறுக்கிறார். ஆரம்பத்தில் ஷிவானிக்காக தன்னை ஒதுக்கிய பாலாவை இன்னும் மன்னிப்பதாக இல்லை.
இந்த வார காலர் ஆரியிடம் பேசினார். "அந்நியன் படத்தில் வரும் அம்பி போல எப்பாப் பார்த்தாலும் ரூல்ஸ் பத்தியே பேசிட்டு இருக்கீங்க, மத்தவங்க குறைகளை சொல்லிட்டே இருக்கீங்க, வீட்ல யார் கூடவும் இணக்கமா இருக்க மாட்டேங்கறிங்களே, ஏன்" என்ற கேள்வி வந்தது.
இணக்கமா இருக்கக் கூடாதுனு வந்த முதல் நாளே பிக்பாஸ் சொல்லிட்டாரு. இங்க யாரும் நண்பர்களும் இல்லை, எதிரியும் இல்லைனு. நான் குறை சொல்றது, தவறை சுட்டி காட்டறது எல்லாமே மத்தவங்களை தகுதிபடுத்த தான் சொல்றேன்" இது ஆரியோட பதில்.
சோ வீட்ல யார் கூடவும் இணக்கமா இருக்க பிக்பாஸ் வரலேன்னா, அப்ப பேசக்கூட ஆள் இல்லேன்னு எதுக்காக புலம்பனும். ஆரியை பொறுத்தவரைக்கும் இது ஒரு கேம் ஷோ, இங்க விளையாட மட்டும் தான் வந்துருக்கேன். செண்டிமெண்ட்ஸ்க்கு இடமில்லைனு சொல்றது அவரோட ஸ்ட்ராட்டஜி. மத்தவங்களும் அப்படியே இருக்கனும்னு எந்த கட்டாயமும் இல்லையே. மத்தவங்களை தகுதிப்படுத்துவதற்கு பேசினதா சொல்றதும் உண்மையில்லை. இந்த வீட்ல இருக்க தகுதியில்லைனு அவர் சொன்ன லிஸ்ட் ரொம்ப பெருசு. வீட்ல இருக்கறவங்களை பார்த்து தகுதி இல்லைனு சொல்றதுக்கு தான் ஆரி அங்க இருக்காரா என்ன? மத்தவங்களை தகுதிப்படுத்தறேன்னு சொல்றாரு, அந்த அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தாங்கனு தான் தெரியல. மொத்தத்துல இவரை தவிர யாருக்குமே அங்க தகுதி இல்லைங்கறது தான் ஆரியோட ஸ்டாண்ட்.
பொங்கலுக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பூமி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிட ஜெயம் ரவி நேரில் வந்தார். "ஆளவந்தான்" திரைப்படத்தில் ரவி ஒரு அஸிஸ்டெண்டாக வேலை பார்த்திருக்கிறார் என்பது புது தகவல். ஜெயம் ரவி இருக்கும் போதே கேப்பி மற்றும் ஷிவானி சேவ் செய்யப்பட்டார்கள்.
இடைவேளையின் போது தான் கடைசியாக காப்பாற்றப்படுவது குறித்து ஆஜித் புலம்பிக் கொண்டிருந்தான். "இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா தம்பி." "3 வது வாரமே எவிக்ட் ஆக வேண்டியவன் தானே நீ, இப்ப 12 வாரம் வந்துருக்கேன்னா, ஏதோ ஒரு விஷயத்தை பார்த்து காப்பாத்தறாங்க தானே" என்று பாலாஜி ஆறுதல் கூறி கொண்டிருந்தான். அதை பார்த்த அனிதா தனக்கும் ஆறுதல் சொல்லுமாறு பாலாவிடம் கேட்டுக் கொண்டார்.
திரு.அசோகமித்திரன் எழுதிய "கரைந்த நிழல்கள்" புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.
இடைவேளை முடிந்து வந்தவுடன் "புத்தாண்டை வீட்டில் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுவதாக" கூறினார் அனிதா. பிக்பாஸ் வீட்டினுள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணித்து அதற்கேற்றார் போல் விளையாடுவார் அனிதா. ஓபன் நாமினேஷன் சமயங்களில் யார் தன் பெயரை சொல்லுவார் என்பதை முன்பே கணித்து, முந்திக் கொண்டு அவர்களையே நாமினேட் செய்துவிடுவார். அடுத்து சம்பந்தபட்டவர்கள் அனிதாவின் பெயரை சொல்லும் போது, பழிவாங்குவதாக சிம்பதி தேடிக்கொள்ளலாம். இந்த வாரம் ஆரிக்கு நேர்ந்ததுதான். ஆனால் அனிதாவை போல் ஆரியும் பழிவாங்கும் உணர்வு கொண்டவர் தான்.
அனிதாவே கேட்டுக் கொண்டதால் அவர் பெயரை அறிவித்தார் கமல். ஏற்கனவே தெரிஞ்சு போனதால ரொம்ப சீன் போட்டு அழாம கிளம்பினாங்க அனிதா. உண்டியலை உடைக்க மாட்டேன்னு ஒரே அடம். கடைசில பாலா அதை லைட்டா உடைச்சதுக்கு அப்புறம் கிளம்பினாங்க.
கமல் சாரோட பேசும் போதும் நல்லாவே பேசினாங்க. கமல் சார் தன்னை அதிகமா கலாய்ச்சதா, திட்டினதா அனிதா நினைக்கறாங்க. அதே சமயம் நிறைய பாராட்டவும் செஞ்சதா கமல் சார் சொல்றாரு. எந்த உணர்வையும் அதீதமா. வெளிக்காட்டறது தான் அனிதாவோட ப்ளஸ், மைனஸ் எல்லாமே. அது அவங்களுக்கும் தெரியுது. இருந்தாலும் அவங்களால அதை கண்ட்ரோல் செய்ய முடியலை. பிக்பாஸ் அனுபவம் அவங்களுக்கு பாசிட்டிவிட்டியை மட்டும் கொடுக்கனும்னு வாழ்த்துவோம். இருந்த வரைக்கும் தரமான ப்ளேயரா தான் இருந்தாங்க.
எவிக்ஷனுக்கு அப்புறமா ஆரி-ரம்யா கான்வர்சேஷன். அனிதாவோட நடந்த சண்டைல தன் பக்க நியாயத்தை திரும்பவும் பதிவு செய்யற முயற்சி. பழிவாங்கறாரு என்று அனிதா பயன்படுத்திய வார்த்தையை பத்தி ரம்யா கிட்ட விளக்கம் கொடுத்துட்டு இருந்தார். ஆரி மட்டுமே பேசிட்டு இருந்தார். சாப்டுட்டு இருந்த ரம்யா "அனிதா போனதுக்கு அப்புறம் அவங்க தவறுகளை பத்தி பேச வேண்டாம்னு" சொல்லி ஆரியோட பேச்சை கட் பண்ணிட்டாங்க.
அதுக்கு பிறகு பெட்ரூம்ல ஆரியை அம்பி கேரக்டரோட ரெபர் பண்ணினதை பத்தி பேசி சிரிச்சுடு இருந்தாங்க ரம்யா. கூட இருந்தது ஆஜித், பாலா.
இன்னும் 3 வாரம் இருக்கு. 8 பேர் உள்ள இருக்காங்க. அனேகமா வரும் வாரம் 5 லட்சம் ஆபர் வரும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.