Monday, Aug 2, 2021

தொடரும் ப்ரீஸ் டாஸ்க்,ஷாக் ஆன ரம்யா,ரியோ மற்றும் சோம் உரையாடல் - நேற்று என்ன நடந்தது? பிக் பாஸ் நாள் 87

by Mahadevan CM Dec 31, 2020, 12:17 PM IST

ப்ரீஸ் டாஸ்க் தொடர்கிறது. காலைல இருந்து பிக்பாஸ் ஜாலியா விளையாடிட்டு இருந்தார். பாலா பொங்கல் சாப்பிடும் போது ப்ரீஸ் சொல்ல, அப்ப ரொம்ப கிட்ட வந்த ஆரிக்கும் ப்ரீஸ் சொன்னாரு. ரெண்டு பேரையும் வச்சு கிச்சன்ல இருந்து ரம்யா அடிச்ச கமெண்ட் அல்டிமேட். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாலியா இருந்தது.

முதல்ல ரம்யாவோட பேமிலி தான் வந்தாங்க. "உன் கூடவே பொறக்கனும்" பாடலை போட்டுதுமே ரம்யாவோட தம்பி தான் முதல்ல வந்தாரு. எல்லாரையும் பார்த்துட்டு "எங்கே என் தலைவனு ஆரியை தேடிட்டு போனதை பார்த்து ரம்யாவே ஷாக் ஆகிட்டாங்க. அது முழுக்க முழுக்க சர்காஸ்டிக்கா செஞ்சது தான்.

கொஞ்ச நேரத்துல ஸ்டோர் ரூம்ல இருந்து ரம்யா அம்மாவும் வந்தாங்க. அழுகாச்சி படலம்லாம் இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது. ரம்யாவுக்கு அழுகை எல்லாம் வராதுனு அவங்க அம்மாவும் சொன்னாங்க.

"யாரோட எந்த பிரச்சனையா இருந்தாலும் சம்பந்தபட்டவங்க கிட்ட நேரடியா பேசு. ஒருத்தரை பத்தி இன்னொருத்தர் கிட்ட பேசாதே" என்பது ரம்யா அம்மாவோட செய்தி. ஆரியை பத்தி மத்தவங்க கிட்ட பொரணி பேசினதுக்கு தான் இந்த டிப். ரம்யாவுக்கு இது புரியனும்.

"என்ன தான் ஸ்ட்ராங் கண்டஸ்டண்டா இருந்தாலும் இந்த வாரம் நீ வெளிய வர மாதிரி ஆனா, அதுக்கு நீ காரணமில்லைனு" என்பது ரம்யா தம்பியோட செய்தி. உண்மை தான். இந்த வீட்ல இருக்க வேண்டியவங்களை வெளியே அனுப்பிட்டு, வெளியே அனுப்ப வேண்டியவங்களுக்கு ஓட்டு போட்டு காப்பாத்தற வினோதம் இந்த சீசன்ல நடக்குது. அப்படி செய்யறவங்களே தான் இந்த சீசன் மொக்கைனு புகார் வேற சொல்றாங்க. இந்த வாரம் ரம்யா தான் குறைவான வோட்டிங்ல இருக்காங்க. எல்லாம் ஆரி ஆர்மியின் மகிமை.

ரம்யா அம்மா, தம்பி போனதுக்கு அப்புறமும் ப்ரீஸ் பண்ணி விளையாடிட்டு இருந்தாங்க. கிச்சன்ல கேஸ் அடுப்புக்கு கீழே இருக்கற இடத்துல எதையோ பார்க்கப் போன ரியோவை ப்ரீஸ் பண்ணிட்டாரு பிக்பாஸ். ரியோவை பார்க்கப் போன கேப்பியும் ப்ரீஸ் ஆனாங்க. கேப்பி நேத்து ஹாப் டாப் மாதிரி ஒரு ட்ரெஸ் போட்ருந்தாங்க. ஒரு மாதிரி குனிஞ்சு நிக்கும் போது ப்ரீஸ் செஞ்சுட்டாரு பிக்பாஸ். பக்கத்துல நின்னுட்டு இருந்த ஆரி, சமைக்கும் போது போட்டுக் கொள்ளும் உடையை எடுத்து கேப்பி மேல போட்டு விட்டாரு. ரொம்ப நல்ல விஷயம். ஹாட்ஸ் ஆப் ஆரி.

அடுத்து ரியோவோட மனைவி ஸ்ருதி வந்தாங்க. "காதலே காதலே" பாட்டு. எல்லாருக்கும் பாட்டு வச்சுருக்காங்கய்யா. ரெண்டு பேருமே உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டாங்க. ஸ்ருதியும் ரொம்ப ஜாலியா எல்லாரோடவும் பேசிட்டு இருந்தாங்க. "தயவுசெய்து இங்கிலீஷ்ல பேசாதனு" ரியோவை கலாய்ச்சது செம்ம. எவிக்‌ஷன் ப்ரீ டாஸ்க்ல ரம்யா சுரேஷ வெளியே அனுப்பிட்டு வெளியே வந்த போது ரியோ ஓடி வந்து ரம்யாவை தூக்கிட்டாரு. அதை சொல்லி கிண்டல் பண்ணினாங்க. அந்த விஷயத்துக்காக ரியோவோட ப்ரெண்ட்ஸ் கடுப்பாகிட்டாங்களாம். கடுப்பானது ப்ரண்ட்ஸா, இல்ல நீயானு ரியோ கேட்டது ஜாலி மொமண்ட்.

ரியோவோட பேமிலி, ப்ரெண்ட்ஸ் வாழ்த்திய வீடியோ போடப்பட்டது. ரியோ ப்ரெண்ட்ஸ் பேசினது செம்ம காமெடி. ரியோவை செம்மயா வெறுப்பேத்திட்டாங்க.அடுத்து சோம் தம்பி உள்ள வந்தாரு. அவரும் ஜாலியா தான் பேசிட்டு போனாரு. "நீ சூப்பரா விளையாடுறேனு" சொன்னதை கேட்டு தலை சுத்திருச்சு. ஒரு வேளை நாம தான் பார்க்கலையோனு சந்தேகமே வந்துருச்சு. சோம் பேமிலி மெம்பர்ஸ் வாழ்த்தின வீடியோவும் வந்தது.

நைட் சாப்பிடும் போது தம்பி சொன்ன விஷயத்தை ஷிவானியோட ஷேர் பண்ணிட்டு இருந்தாங்க. ஷிவானிக்கும் அதை கேட்டு ஷாக்.

சோம் & ரியோ ஆரியை பத்தி பேசறாங்க.அதாவது... ஆரீ ப்ரோ பண்றதுலா கரெக்டு தான்.. ஆனா வெளிலருந்து பாக்கும் போது... நமக்கு இங்க அவரு பேசறது ரொம்ப ஹார்ஷா தெரிதுல்ல.. அது அந்த ஒரு மணிநேரத்துல தெரியாதுல்ல. வெளில அவரு பேசற பாய்ன்ட்ஸ் மட்டும் தெரியற போது வெளில ஆப்வியசா அது கரெக்டா தான் தெரியும். அவரு பேசறது எல்லாமே கரெக்டுன்னு ஒத்துக்க மாட்டேன். ஆனா அவரு பேசறதுல சில விஷயம் கரெக்டு தான்.. ஆரம்பத்துலருந்தே ஆரீ ப்ரோ மேல எனக்கு ரொம்ப மரியாதைலா இருந்துட்டு இருந்துச்சு. இப்பவும் மரியாதை இருக்கு. மரியாதைலாம் போல.. பட் செர்டைன் வீக்குக்கு அப்புறம் போட்டு நம்மள சப்ரெஸ் பண்றா மாற ஆகிடுச்சி.. பட் இன்னும் அவரை பிலீவ் பண்றேன். ஆனா அட் சம் பாய்ன்ட் அவர் சப்ரெஸ் தா பண்றாரு..பட் வெளில அவ்ளோ க்ளியரா அவ்ளோ டீடெய்லா தெரியாதுன்னு எனக்கு தெரியுது.."

ஆரிக்கு வெளியே இருக்கற வரவேற்பு இப்ப தான் வீட்ல இருக்கறவங்களுக்கு தெரிய ஆரம்பிச்சுருக்கு. பார்ப்போம்.

You'r reading தொடரும் ப்ரீஸ் டாஸ்க்,ஷாக் ஆன ரம்யா,ரியோ மற்றும் சோம் உரையாடல் - நேற்று என்ன நடந்தது? பிக் பாஸ் நாள் 87 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

அண்மைய செய்திகள்