குத்து டான்சர் பாடலுடன் துவங்கியது நாள். மார்னிங் டாஸ்க், காத்துல காத்தாடி விடனும். காத்தாடியை காத்துல தானே விடனும்.
முந்தின நாள் ஷிவானிக்கு அட்வைஸ் கொடுத்திருக்காரு ஆரி. அதை ஏன் அன்சீன்ல ஏன் வச்சாங்கனு தெரியல. அதை பத்தி ஆஜித் கேக்கறான். தேவையான விஷயங்களை எடுத்துகிட்டதா சொல்றாங்க ஷிவானி.
வசந்த் & கோ வழங்கிய டாஸ்க், அதன் முடிவுல மொத்த டீமுக்கும் கிப்ட்ஸ் வந்தது. கூடவே கேட்டும் வந்தது.
சாப்பிட்டு மீதமான கேக்கை ஏதோ டப்பாக்குள்ள வச்சுட்டு இருந்தாரு ரியோ. அப்ப ரீவைண்ட், பாஸ்ட் பார்வேர்ட்னு சொல்லி அந்த கேக்கை ஒரு வழி பண்ணிட்டாரு. இனிமே கேக்கை பார்த்தா இதுதாண்டா ஞாபகம்.வரும்.
கேப்பியோட அம்மா வந்தாங்க. கேப்பி மாதிரியே அவங்களும் படபடனு மூக்குல பேசறாங்க. ஜாலியா, ரொம்ப ப்ரீயா பேசினது நல்லா இருந்தது. சமையல் கத்துக்கறதை பத்தி பேசும் போது, கேப்பி நல்லா வேலை செய்யறதா ஆரி சர்டிபிகேட் கொடுத்துட்டு இருந்தார். அதை லார்க்க பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங் மாதிரி இருக்குனு சோம் அடிச்ச கமெண்ட் அல்டிமேட். ஆரி சொன்னதும் பீட்பேக் தான். 5 வாரமா கிச்சனல இருக்காங்க, எல்லா வேலையும் கத்துகிட்டாங்கனு சொன்னது வரைக்கும் ஓக்கே. முன்னாடி அப்படி இல்லை. இப்ப சரியா இருக்காங்கனு சொல்லிருக்க வேண்டியதில்லை. ஆரி பேசறதுல விமர்சிக்க வேண்டிய பார்ட் இது மட்டும் தான். மத்தவங்களை ஜட்ஜ் பண்ணக் கூடிய இடத்துலேயே தன்னை வச்சுக்கறாரு. நேத்து ப்ரொகிராம் கடைசில பாலா சொன்னது மாதிரி, ஆரி ஒருத்தரை பாராட்டறா மாதிரி இருக்கும், ஆனா அதுக்குள்ள நைசா அவங்களோட குறைகளை, தவறுகளை சேர்த்து சொல்லுவார். இதை தொடர்ந்து செஞ்சுட்டே தான் இருக்கார் ஆரி.
கேப்பி அம்மா வந்துருக்கும் போது பாலா தூங்கிட்டு இருந்தான். ஆரி கேப்டன்சியில் பாலா தூக்கமா? உடம்பு சரியில்லையானு தெரியல. பர்மிஷன் வாங்கி தூங்கினாரானும் தெரில.
கேப்பி அம்மா போனதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு கேட்டு தெரிஞ்சுகிட்டாரு பாலா.
ஆரி, பாலா, ரம்யா வெளியே உக்காந்து பேசிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்குனு ரம்யா சொல்லிட்டு இருந்தாங்க. ரெண்டு வாரத்துக்கு அப்புறம் டைட்டிலோட இருப்பீங்கனு ரம்யாவை கலாய்ச்சுட்டு இருந்தாரு ஆரி. வாய்ப்பில்லை ராஜா, நான் வெளியே போய் உங்களுக்கு ஓட்டு போடறேன்னு செண்டிமெண்டா பேசிட்டு இருந்தாங்க ரம்யா. ஆரி அதை நம்பலை.
அடுத்து ஆஜித்தோட பேமிலி வந்தாங்க. ஹிந்திலேயும், இங்கிலீஷ்லேயும் பேசினாங்க ஏன்னு தெரியல. அவங்களும் எல்லார் கூடவும் ரொம்ப இயல்பா பேசினாங்க. அம்மாவுக்காக ஒரு பாட்டு பாடினாரு.
ஆஜித்தோட குரல் கேக்கலேங்கறது அவ்ங்களோட வருத்தம். நாமினேட் செய்யும் போது ஈடுபாடு இல்லைனு சொன்னதோட, விளக்கமான காரணங்களை சொல்லிருக்கலாம் என்பது அவங்களோட ஆதங்கம். ஆஜித் ரொம்ப சின்ன பையன்கறதால அவனுக்கு புரியலனு நினைக்கறாங்க.
அடுத்து ஆரி பேமிலி வந்தாங்க. முதல்ல அவர் பொண்ணு மட்டும் தான் வந்தாங்க. ரொம்ப க்யூட். ஆரி மட்டும் அப்ப ப்ரீஸ்ல இருந்தாரானு தெரில. பிக்பாஸ் ரிலீஸ் சொல்றவரைக்கும் அப்படியே இருந்தார். கடமை உணர்ச்சி....
ரியா ரொம்ப அழகா, க்யூட்டா எல்லார் கூடவும் ஒட்டிகிட்டா.... இந்த சீசனோட க்யூட்டஸ்ட் எபிசோட் இது தான். பார்க்கவே அவ்வளவு அழகா இருந்தது.
ஆரியோட மனைவி கன்பெஷன் ரூம்ல இருந்து வந்தாங்க. ஆரியோட அவங்க கான்வர்சேஷன் ரொம்ப மெச்சூர்டா இருந்தது. அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது வெளியே ரியா ரொம்ப ஜாலியா ஹவுஸ்மேட்ஸ் கூட விளையாடிட்டு இருந்தா. பாலாவை கூப்பிட்டு அவன் கூட ஒட்டிட்டு இருந்தது செம்ம க்யூட்.
சோ இந்த டாஸ்க்ல எல்லார் பேமிலியும் வந்தாச்சு. ஷிவானி அம்மாவை தவிர மீதி எல்லா எபிசோடும் அழகா இருந்தது.
டைட்டில் வின் பண்றதை பத்தி ஆஜித் கூட பேசிட்டு இருக்காரு பாலா. இதுவரைக்கும் டைட்டில் வின் பண்ணினவங்க கடலை சாப்சுட்டு இருந்து ஜெயிச்சாங்க. ஆனா பாலாவோ, ஆரியோ ஜெயிச்சா இனிமே வர சீசன் வேற மாதிரி இருக்கும் என்பது பாலாவோட கணிப்பு. "நான் ஜெயிக்கனும்னு நினைக்கலை, ஒருவேளை ஜெயிச்சா அபடியிருக்கும்னு சொல்ல வந்தேன்" ரொம்ப ஜாக்கிரதையா பேசினாரு பாலா.
நைட் 2 மணிக்கு பாலாவும் ஷிவானியும் தனியா பேசிட்டு இருக்காங்க ஆரி டைட்டில் வின் பண்ணினா வருத்தப்படுவேன்னு ஸ்டேட்மெண்ட் கொடுக்கறாரு பாலா. ஆரி எப்படி விளையாடறாருனு ஷிவானிக்கு க்ளாஸ் எடுத்துட்டு இருந்தாரு.
புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள் ஏன் நடக்கலைனு தெரியலை.