பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், குறைந்த கட்டணத்தில் அதிக பலன் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறே சேவைகள் அளிக்கப்படுகின்றன. அந்தவகையில், தற்போது கண்ணாடி நூலிழை இணையம் மூலம் இணைப்பை அதிகரிக்கும் விதமாக, பல்வேற் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நிறுவனம்.
அண்மையில் பழைய தரைவழி எண்ணிலேயே , பைபர் இண்டர்நெட் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குறைந்த கட்டணத்தில் அதிக பலன்கள் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாதந்தோறும் ரூ.449 கட்டணத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 3300 ஜிபி டேட்டாவும் , ரூ.799 கட்டணத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 3300 ஜிபி டேட்டாவும் , ரூ.999 கட்டணத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் 3300 ஜிபி டேட்டாவும் , ரூ.1499 கட்டணத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் 4000 ஜிபி டேட்டாவும், அதற்கு மேல் 400 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவில்லா டேட்டாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் , அக்டோபர் 1 ம் தேதி முதல் இந்த திட்டங்கள் அமலுக்கு வருகிறது.