செல்ஃபி காமிராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவோ வி20 திறன்பேசியை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விவோ இந்தியா மின்னங்காடி (இ-ஸ்டோர்)யில் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் முக்கிய சில்லறை விற்பனையாளர்களிடம் அக்டோபர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. மிட்நைட் ஜாஸ், சன்செட் மெலோடி மற்றும் மூன்லைட் சோனட்டா என்ற மூன்று வண்ணங்களில் விவோ வி20 கிடைக்கும்.
விவோ வி20 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
தொடுதிரை: 6.44 அங்குல திரை; AMOLED எஃப்எச்டி+; 2400X1800 பிக்ஸல் தரம்; விகிதாச்சாரம் 20:9
முன்புற காமிரா: 44 எம்பி ஆற்றல்
(ஐ-ஆட்டோ ஃபோகஸ், ஆர்ட் போர்ட்ரைட் வீடியோ, ஸ்லோ-மோ செல்ஃபி வீடியோ, 4கே செல்ஃபி வீடியோ, சூப்பர் நைட் செல்ஃபி 2.0 போன்ற சிறப்பம்சங்களுடன் செல்ஃபியின் தரத்தை உயர்த்தக்கூடிய ஆரா ஸ்கிரீன் லைட் வசதியும் உண்டு)
பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்டவை. பின்புற பிரதான காமிரா சூப்பர் மேக்ரோ, சூப்பர் வைட் ஆங்கிள், சூப்பர் நைட் மோட், மோஷன் ஆட்டோஃபோகஸ் மற்றும் நைட் ஃபில்டர்கள் கொண்டது.
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி (1 டிபி வரை விரிவாக்கும் வசதி)
பிராசஸர்: ஆக்டோகோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 720 ஜி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 மென்பொருள்; ஃபன்டச் ஓஎஸ் 11
மின்கலம்: 4000 mAh
128 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.24,990/- விலையிலும், 256 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.27,990/- விலையிலும் கிடைக்கும்.